ஜெ
நீர்க்கோலத்தில்
பாண்டவர்கள் ஒவ்வொருவரும் உருமாறுகிறார்கள். முழுக்க உருமாறுபவர்கள் இருவர்தான். ஒன்று
தருமன். இன்னொருவர் சகாதேவன். தருமன் சகுனியாக, தன்னுடைய கெட்ட வடிவத்திற்கு மாறுகிறார்.
ஆனால் சகதேவன் நல்ல ஒளியுடைய வடிவுக்கு மாறுகிறார். நகுலனும் பீமனும் அவர்களுக்கு எப்போதுமே
இருக்கும் இன்னொரு வடிவுக்கு மாறுகிறார்கள். அர்ஜுனன் தன்னுள் இருக்கும் நாயகிபாவத்தை
வெளியே எடுக்கிறார். ஆனால் திரௌபதிதான் மாறவே இல்லை என நினைக்கிறேன். இரும்புத்தூண்மாதிரி
வளையாமலேயே இருக்கிறாள்
மனோகர்