அன்புள்ள
ஜெ
வெண்முரசு
நாவல்களின் இடைவெளிகளில் ஒரு பெரிய சோர்வு வந்து என்னை மூடும். உடனே பழையநாவல் ஒன்றை
எடுத்து வாசிப்பேன். வெண்முரசு நாவல்கள் வெளிவந்துகொண்டிருக்கையில் நாளுக்கு ஒரு அத்தியாயம்தான்
ஆனால் அவை முடிந்தபின்னர் தினம் பல அத்தியாயங்களில் ஒரே மூச்சில் ஒருநாவலை வாசிப்பேன்.
இப்போது வண்ணக்கடலை முடித்தேன். வண்ணக்கடலில் இளநாகனின் பயணத்தில் வரும் ஆறுதரிசனங்களின்
விவரிப்பை வாசித்தேன். பலமதங்களைப்பற்றியும் அதில் சொல்லப்பட்டுள்ளது. இப்போதுதான்
எனக்கு அதன் பூர்ணரூபம் கிடைத்தது. கிராதம் அதன்பின் சொல்வளர்காடு அதன்பின் வண்ணக்கடல்
என்று வாசித்தால் இந்தியத்தத்துவஞானத்தின் வளர்ச்சியை கதைகளாக புரிந்துகொள்ளமுடியும்.
பின்னுக்குப்பின்னாகச் செல்கிறது இந்நாவல் அளிக்கும் சித்திரம். அப்படிப்பார்த்தால்
சிவனில் தொடங்கி சிவனிலேயே முடிகிறது.
செல்வராஜ்