Thursday, October 19, 2017

பிறப்பும் இறப்பும்



அன்பின் ஜெ,

வணக்கம்!.


பிறப்பும் இறப்பும் வெண்முரசின் காலக்கண்ணாடியில் இடைவிடாது தோன்றி மறையும் பிம்பங்கள் எனினும் அனகையின் மறைவு எளிதாக கடந்து செல்ல கூடியதல்ல.

கௌந்தவனத்தில் கர்ணனை
கருக்கொண்டிருக்கும் குந்திக்காக மழையிரவில் மருத்துவச்சியை தேடும் அணுக்கசேடியாய்  வெளிப்படுபவள்
அனகை.

{
"சிதையில் அனகை பிறிதொரு விறகுபோல வைக்கப்பட்டிருந்தாள்"
}
ஒரு பெருமரம் சிறு விறகென ஆகிவிட்டது.

நீரில் தோன்றியவள் நெருப்பில் மறைகிறாள்.

மழைப்பாடலில் தனியொருத்தியாய்
மரம் ஒன்றை உருட்டி பர்ணஸா நதிமேல் பாலம் அமைத்தவள் எழுதழலில் விறகென்றாகி  விண் செல்கிறாள்.

{
அனகை "பெருந்தோள்கள்" என்றாள்.
}

அச்சொற்க்கள் பீமனுக்கு மட்டுமேயானதா?.

மண்ணிலும் எஞ்சாது
மறையப்போகும் மந்தணத்தை அறிந்த பிறிதொருவர் உண்டா?.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.