Tuesday, October 31, 2017

முழுமை



வணக்கம் தலைவரே,

எழுதழல் 39 , படித்து முடித்தவுடன் உடனே ஒன்று தான் தோன்றியது , ஒரு பங்காளி  சண்டையை , கிட்டத்தட்ட வர்க்க மோதல் , கொள்கை  மோதல் மாதிரி கொண்டு போயிட்டிங்க , அதுவும் சரி தான் , இல்லைனா எப்படி துரியோதனனால  அவ்வளவு பெரிய கூட்டணியெ சேர்க்க முடியும். மார்க்சிஸ்ட்  மஹாபாரதம் . ஆனா எந்த ஒரு கொள்கை மோதலில் அதுவும் ஆயுத மோதலில் முடிவு ஒட்டுமொத்த அழிவுதான் , எங்கயோ எப்போவோ படிச்சது " டால்ஸ்டாய்  கதைகளில் முடிவில்  எல்லா முதன்மை கதாபாத்திரங்களும் இறந்து விடும் , செகோவ் கதைகளில் எல்லாரும் உயிருடன் அனால் மன தளவில்  அனைவரும்  இறந்துபோயிருப்பார்கள் ", வியாசர் கதையில் எல்லாரும் செத்தும் போயிறாங்க , உயிரோட இருக்கறவனுகளும் சந்தோஷமா இல்லை , என்னோவோ போங்க ,

ஆனந்த் நடராஜன்

அன்புள்ள ஆனந்த் நடராஜன்

வரலாற்றை முழுமையாக ஆராய முயன்றிருக்கிறேன் என்றே சொல்லிக்கொள்வேன். ஒருபக்கம் ஆன்மிகமான, தத்துவம் சார்ந்த ஒரு தேடல். மறுபக்கம் பொருளியல் , அர்சியல் சமூகவியல் தேடல். அனைத்தையும் குவிப்பதற்கான முயற்சி இதன் விரிந்த வடிவம். மார்க்சியக் கோணம் முந்தைய இரண்டையும் முற்றாக விலக்கிவிடும் அல்லவா?

ஜெ