Monday, October 23, 2017

துலா



பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

'துலாநிலையின் ஆடல்' என்று எவ்வளவு பொருத்தமாக தலைப்பிட்டிருக்கிறீர்கள் என்பதை எண்ணி ,எண்ணி  வியக்காமல் இருக்க முடியவில்லை!.சல்லியரிடம் துரியோதனின் வைக்கும் தனது வாதமும் அதை அனாயசமாக முறியடிக்கும் சுருதகீர்த்தியின் வாதமும் ஒன்றை ஒன்றை மிஞ்சுகிறது.ஆனால் இறுதியில் பீலி சூடியவனின் 'விஸ்வரூபமாக' சல்லியரின் முன் வானளாவ எழுந்து நிற்கிறான் சுருதகீர்த்தி!.தங்களின் 'சொல்லாடல்களை' மனக்கண்ணால் நேரில் நடக்கும் நிகழ்வாக பார்த்தால்  மெய் சிலிர்க்கிறது!. 

அன்புடன்,
அ .சேஷகிரி.