ஜெ
அபிமன்யூவின்
கதாபாத்திரம் இப்போதுதான் மெல்ல மெல்லத் துலங்கி வருகிறது. வெண்முரசின்
கதாபாத்திரங்களின் இயல்புகள் எப்போதும் இப்படித்தான் திரண்டு வருகின்றன. முதலில்
ஒரு இயல்பு வெளிப்படுகிறது. பின்னர் இன்னொன்று சேர்ந்துகொள்கிறது. இயல்புகள் நடுவே
உள்ள முரண்பாடு வெளியாகிறது. அதன்பின்னர் அவற்றுக்கிடையே உள்ள ஒத்திசைவு
வெளிப்படுகிறது. அதன்பின்னர்தான் அந்தக்கதாபாத்திரத்தையே நம்மால் புரிந்துகொள்ள
முடிகிறது.
அபிமன்யூவின்
குணச்சித்திரம் விளையாட்டுத்தனம் கொண்டது. ஆனால் உள்ளே கூர்மையானது. அவன்
மேலோட்டமான எள்ளல் கொண்டவன். ஆனால் கிருஷ்ணனுக்கு சுய அர்ப்பணம் செய்துகொண்டவன்.
தந்தையிடம் பணிவுடனும் விலக்கத்துடனும் இருக்கிறான். சொல்லமுடியாத ஏதோ ஒன்று
இருவருக்கும் நடுவே ஓடிக்கொண்டிருக்கிறது
சத்யா