ஆசுர வேதத்தில் இல்லாத தாச மற்றும் பக்தி பாவங்கள் மீண்டும் முளைக்கும் நிலமாக பாரதம் வருகிறது. திரேதாயுகத்தில் ஆசுர வேதக்காரனான ராவணனுக்கு தாசபாவத்தின் அளவற்ற சக்தியை வானரசேனையினரால் காட்டி புது வேதத்தை அம்பாரியாக மாற்றிய ராம காவியத்திலிருந்து யுகம் கடந்து மீண்டும் ஒரு அறமீட்டல் கட்டம். துவாபர யுகக்கணக்குகளோடு மீண்டும் ஊழிமுதல்வனின் அடுத்தகட்ட நகர்வு. இங்கும் ஆசுரவேதம் அழிக்கப்படாமல் இச்சாசக்தியின் பேருருவிற்கான புதிய பாதையைக் காட்டுகிறது. மூதாதை கண்டெடுத்த சொல் மறைசித்திரம் களைந்து யுகங்கடந்து குகை ஓவியச்சித்திரமாக உயிர்பெற்ற தருணம் மீள்நிகழ்வே ஆனாலும் புது தரிசனப்பிறப்பே. வேதநாயகர்களின் யுகம் கடந்த ஆடலின் உளப்பெருக்கு தருணம் இந்த குகைக்காட்சி.
கிரி