அன்புள்ள ஜெ,
கேரள தலித் அர்ச்சகர் நியமனம் பற்றிய மேலுமொரு கேள்வி. இது கொள்கை, புரட்சி சார்ந்தது அல்ல. மாறாக அவரது பெயர் குறித்து. அந்த பூசகரின் பெயர் - யதுகிருஷ்ணா. வெண்முரசின் வாசகர்கள் அனைவருக்கும் யாதவ கிருஷ்ணன் செய்து கொண்டிருக்கும் புரட்சியில் முக்கியமான அரசியல் அங்கம் என்பது புது அரச குலங்கள் உருவாதற்கு சாஸ்திர ஏற்பு அளிப்பது. அது அனைத்துயிர்களுக்கும் பொதுவான ஒரு வேதத்தை முன் வைப்பதன் மூலமே சாத்தியம் என்பதாலேயே அவர் நாராயண வேதம் நோக்கிச் செல்கிறார். அதை வெற்றிகரமாக நிறுவியதாலேயே அவர் இன்றும் ஒரு enigma வாகப் பார்க்கப்படுகிறார். அப்படி இருக்கையில் இந்த முதல் தலித் அர்ச்சகரின் பெயர் அவரது பெயராக, அதுவும் யாதவ கிருஷ்ணனாக இருப்பது தற்செயலா? இது அவரது உண்மையான பெயரா அல்லது அவரது ஆசான் அளித்த ஒன்றா? எப்படியும் மரபு நம்மை வந்து அடைந்து கொண்டே தான் இருக்கும் இல்லையா!!
அன்புடன், அருணாச்சலம் மகராஜன்
அன்புள்ள அருணாச்சலம் மகராஜன்
அது யது கிருஷ்ணாவின் அசல்பெயர்தான். இளமையிலேயே இந்துமரபின்மேல் ஆழ்ந்த ஆர்வமும் கொண்டிருக்கிறார். பிற தொழில்களையோ படிப்பையோ தேர்வுசெய்யவில்லை
ஜெ