Thursday, April 7, 2016

ரத்ததின் இருமை



 அன்புள்ள ஜெ

இருமையின் விளையாட்டாகவே சென்றுகொண்டிருக்கிறது நாவல். இபப்டி ஒன்றுக்குள் ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த நாவல் வேறில்லை தமிழில். ஒரு கதை இன்னொன்றுக்குக் கொண்டுசெல்கிறது. சம்பந்தமில்லாமல் இருக்கும் கதைகளுக்குள் என்ன சம்பந்தம் என்று யோசிக்கவே அன்று முழுக்க ஆகிவிடுகிறது

இன்றுவந்த கதையில் [பன்னிருகளம் 12] ஜராசந்தனின் பிறப்பு. அவன் இரண்டாகப்பிறக்கிறான். முன்பு ஜரையன்னைக்கு ஒருமைந்தன் பிறந்து இரண்டாகப்பிளக்கப்பட்டான். இப்போது இவனை ஜரை அன்னை ஒன்றாக சேர்க்கிறாள்.

இன்னொரு சரடு ரக்தபீஜன். இப்போது பிறந்திருப்பதும் ஒரு ரக்தபீஜன். அவன் சகோதரனின் ரத்தத்தைக்குடித்து வளர்கிறான். அதாவது தன் மறுபக்கத்தை உண்டு வளர்கிறான். தன்னைத்தானே பெருக்குகிறான்.

ரம்பகரம்பனைப்போல அவனும் தன் ஒருபகுதியை சார்ந்து இருக்கிறான். இருமைஎன்பதை பலகோணங்களில் சுற்றிச்சுற்றிக் காட்டுகிறது நாவல்

சாரங்கன்