Wednesday, April 6, 2016

சொற்கள்



தேர்வுகள் முடிந்துமகனை விடுதியில் சேர்க்கவேண்டி இருந்ததால் 5 பகுதிகளை மொத்தமாக படித்தேன்.ஜெ அவ்ர்களின் சொல்லாட்சி பிரமிக்க  வைக்கிறது. பல சமயங்களில் அவர் இவற்றையெல்லாம் எழுதவேஇல்லை ஏதோ தெய்வம் அவருக்குள் இருந்து எழுத வைக்கிறது என்றே தோன்றும்.  ரம்ப கரம்பர்களின் நோய் பற்றி எழுதுகையில்”நோய் என்பது மருந்திற்கான கோரிக்கை” என்கிறார். திரும்ப திரும்ப அதை படிக்கிறேன்.  நோயும் மருந்தும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றுதான் கேட்டுஇருக்கிறோம். இது எத்தனை சரியானது ?
முதுமகளே, அன்னைமை என்பது துயரே என நீ ஏன் இன்னும் அறியவில்லை? 

எத்தனை உண்மை!
 
உங்களில் பலர் எழுதுவது போல எனக்கு விரிவாக எழுத தெரியவில்லை எனினும் அவரின் சொல்லாட்சி நம்ப முடியாததாக இருக்கிறது.சரணுடன் நேரில் பகிர்ந்து கொள்ள முடியாதது வருத்தமாக இருக்கிறது. கடிதம் இன்று எழுதி அனுப்பி இருக்கிறேன்.