அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
வெய்யோனில் கர்ணனின் மீது துரியோதன்
மற்றும் அவன் தம்பிகள் , மக்கள் வைத்திருக்கும் மரியாதையையும் அன்பும்
நெகிழ செய்தன. துரியோதனன் இத்தனை பேருள்ளம் கொண்டவன் என்பதை காண முடிந்தது
கர்ணனை எல்லோரும் சூரியன் மைந்தன் என்று கூறுகின்றனர் ஆனால் எதனால் மக்கள் அவனை அவ்வாறு கூறுகின்றனர் என்பது சொல்லப்படவில்லையே?
நான்
அறிந்த மகாபாரதத்தில் யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் நடத்தினான் எனவும் அவ்வேளை
அங்கு சென்ற துரியோதனன் அவமான படுத்தப்பட்டதாக உணர்ந்தான் எனவும் உள்ளது,
வென்முரசில் ஏன் இந்த்ரப்ரச்த நகர் விழா என்று குறிப்பிட்டு இருகிறீர்கள் ,
மேலும் ராஜசூய யாகத்தின் முன் ஜரசந்தனும் சிசுபாலனும் இறந்து விடுவார்கள்
இங்கு ஏன் மாறியுள்ளது