Thursday, August 11, 2016

இரு உள்ளுணர்வுகள்



திவாகரரின் ஆசிரியர் இரு உள்ளுணர்வுகளால் அலைக்கழிக்கப்படுகிறார். ஒன்று ஒரு பயம். இன்னொன்று இன்னும் ஆழமான ஒரு எதிர்பர்ப்பு

ஆனால் வேதச்சொல் கட்டவிழ்ந்தால் மீள்வது ஆசுரம். விடியலில் விலகிய இருள் எங்கும் செல்வதில்லை. ஒவ்வொரு இலைக்கு அடியிலும் ஒவ்வொரு கூழாங்கல்லுடனும் அது காத்திருக்கிறது.


மண் அகழ்ந்து மணி எடுப்பது போல வேதத்திலிருந்து அவன் புதியவேதத்தை எடுக்கக்கூடும்

அந்த இரு வரிகள் நடுவே அவருடைய வாழ்க்கை ஓடிச்செல்கிறது. அவர் முன் இளைய யாதவர் எழுந்து நின்று கேட்கும் கேள்விகளின் கூர்மை அபாரமானது. எங்கிருந்து அவரது தத்துவக்கேள்விகள் தொடங்கின என்று இப்போது தெளிவாகிறது



சாரதா