விஷ்ணுபுரத்தில் சித்திரைக்கு ஒரு பெண் சாமியார் அரணி கட்டைதான் வழங்குவார்கள் என ஞாபகம் , அது அக்னி , பிறகு அவள் தீ பிடித்து இறந்து விடுவாள் .
இதில் உத்தாலகரின் மனைவியை ஒரு அரணிக்கட்டை கொடுத்து முத்துவைதிகன் பெற்றுக்கொள்கிறார் , ...
பெண்ணுள்ளும் அதுபோன்ற நெருப்பு உறைந்திருக்கிறது என , அதனை அர்த்தப்படுத்தவே அரணிக்கட்டை என நினைத்தேன் .
ஆனால் ஸ்வதகேது புல்லில் உறைந்திருக்கும் நெருப்பை கொண்டு தீமூட்டி ஆணை இடுகிறார் ..
இதில் லிங்க் எதுவும் தேடவில்லை , ஆனால் உள்ளில் உறைந்திருக்கும் நெருப்பு என்பது ஸ்வாரஸ்யப்படுத்துகிறது , வியாசர் நீருக்குள் பொதிந்திருக்கும் நெருப்பை நிரூபிக்கும் வாதம் ஞாபகம் வருகிறது
எல்லாவற்றையும் இணைத்து குழப்புகிறேன் என தோன்றுகிறது :)
ராதாகிருஷ்ணன்