Thursday, January 19, 2017

சந்தைகள்



ஜெ

வெண்முரசில் இதுவரை வந்த சந்தைகளைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். எந்த ஊர் என்றாலும் அங்குள்ள சந்தைகளைப்பற்றிய ஒரு வர்ணனை இருக்கிறது. இது உங்கள் பயணம் வழியாக அடைந்ததாக இருக்கலாம். உங்கள் பயணக்கட்டுரைகளிலும் நிறையச் சந்தைகள் உள்ளன. ஒரிசாவில் நிர்வாணமான பழங்குடியினரைப்பார்த்த சந்தையும் அதேபோல நாகாலாந்தில் பார்த்த சந்தையும்தான் இவற்றில் முக்கியமானவை

சந்தைகளில் அந்தப்பகுதியின் வாழ்க்கை அப்படியேதெரிகிறது. அந்தச்சந்தையை வர்ணிப்பது வழியாக அந்த இடத்தையே சொல்லிவிடுகிறீர்கள். கடைசியாக கிராதத்தில் திபெத் அடிவாரத்தில் இருக்கும் அந்தச்சந்தை முக்கியமான ஒன்று

சுரேஷ்குமார்