Friday, January 20, 2017

முதுமூதாதை






ஜெ

அர்ஜுனனை ஊர்ணநாபனின் வலைப்பின்னல் மூடுவது ஒரு அற்புதமான உருவகம். அதற்கும் விருத்திராசுரனின் சிதல்புற்றுக்கும் உள்ள உறவை நான் சிந்தித்தேன். ஆதிமூதாதையர் இருவரும் இப்படி சிலந்திவலை சிதல்புற்று என்னும் வலிமையான உருவகங்களின் வழியாகச் சொல்லப்பட்டிருப்பது ஆழமான அர்த்தம் அளிக்கிறது. விருந்திராசுரனின் குடியாக கிருஷ்ணன் வருவதும் சிலந்திவலையில்பின்னிக்கொண்டு அர்ஜுனன் ஆதிமூதாதையரை அறிவதும் அதனூடாகப் பாசுபதம் பெறும் தகுதிபெறுவதும் நுட்பமானவை. அவை சிக்கலான ஒரு டெக்ஸ்சரை உருவாக்குகின்றன. ஆழமான சித்திரம் அது

சாமிநாதன்