Saturday, January 21, 2017

மழைப்பாடல்



அன்புள்ள ஜெ

கிராதம் முடிந்தபின்பு வழக்கம் போல பழைய நாவல்களை வாசித்தேன். புத்தகவாசிப்பு.ஒரே மூச்சில் மழைப்பாடலை வாசித்து முடித்தேன். மழைப்பாடலின் சூட்சுமங்களை எளிதில் அறிந்துவிடமுடியாது என்ற எண்ணம்தான் ஏற்பட்டது. மிக விரிவான ஒரு இன அரசியல் சித்திரம் அதிலே உள்ளது. யாதவர்களின் எழுச்சி, காத்த வீரியன் காலகட்டம், அவனுடைய அழிவு, பார்க்கவபிராமணர்களுக்கும் அவர்களுக்குமான போர் என்று விரிந்து விரிந்து வந்துதான் இன்று வேதங்களுக்கான போரில் வந்து நின்றிருக்கிறது.

எந்தவேதம் எழுந்துவரும் புதியசாதிகளுக்கும் ஆதாரமாக இருக்குமோ அதை உருவாக்குவதற்கான போர் இது என்பதைப்புரிந்துகொள்ள மழைப்பாடலைத்தான் வாசிக்கவேண்டும். மழைப்பாடலை வாசிக்காவிட்டால் இன்று வந்துகொண்டிருக்கும் தத்துவ மோதலின் அரசியலும் சமூகவியலும் பிடிகிடைக்காமலேயே போய்விடுமென நினைக்கிறேன்

அரவிந்தன்