அன்புள்ள ஜெ
மீண்டும் பிரயாகையை
வாசித்துக்கொண்டிருக்கிறேன். ராண்டமாக எதையாவது எடுத்து அப்படியே வாசிப்பது என் வழக்கம்.
நாவல்களுக்கு இடையே வரும் இடைவெளிகளை இப்படித்தான் நிறைத்துக்கொள்வேன். பிரயாகையின்
நுட்பமான பல பகுதிகளை முன்னர் தவறவிட்டுவிட்டேன் என நினைக்கிறேன். திருதராஷ்டிரனுக்கு
வரணவத எரிப்பு நிகழ்ச்சி உள்ளூரத்தெரியும் என்றுதான் இப்போது புரிகிறது. அந்தப்பகுதியில்
அவருடைய மிகையுணர்ச்சியும் சொற்களும் எல்லாம் அதையே தெளிவாகக் காட்டுகின்றன. அதன்பின்னர்
அவர் துரியனை கொலைசெய்ய முயன்றதுகூட அந்த மனக்கொந்தளிப்பால்தான் என்பது புரிகிறது.
இப்போது ஒட்டுமொத்தமாக வாசிப்பின்போதுதான் தவறவிட்டவை எல்லாம் தெளிவாகத் தெரிகின்றன.
துரியனின் மனநிலையை மிக சூட்சுமமாக அறியமுடிகிறது
ஆனந்த்