Monday, January 16, 2017

சிவநடனம்






ஜெ

காளனாக வந்து சிவன் கேட்கும் சொற்களில் எல்லாம் மெல்லிய நக்கல் இழையோடுவதை மீண்டும் சென்று வாசித்தபோதுதான் உணர்ந்தேன்

 வேட்டைநெறிகளின்படி வேட்டைப்பொருள் ஷத்ரியருக்குரியது என்று உரைக்கிறாயா?”

”ஆம், அரசர்கள் சேறுநாறும் மக்களிடம் கொள்ளையடித்து உண்ணலாம் என்றே நெறியுள்ளது”

“நீ என்னை கொல்லவும் போவதில்லை. நீ என் உணவும் அல்ல, நான் ஏன் உன்னைக்கொல்லவேண்டும்?”

அழகான வரிகள். அதில் ஆதிக்கசாதியை காட்டாளனாக வந்து எதிர்கொள்ளும் சிவன் அடித்தளமக்களின் குரலை எதிரொலொக்கிறார்.. சிவன் பாசுபதம் அளிக்க ஏன் காட்டாளனாக வரவேண்டும்? பாசுபதத்திற்கும் காட்டாளனுக்கும் என்ன உறவு? அந்தக்கேள்விகளுக்கெல்லாம் பதில் அந்தக்கதையை இப்படிப்பார்க்கும்போதுதான் உள்ளது. அது அடித்தளமக்களிடமிருந்து வந்த வேதம். அடித்தள மக்களிடமிருந்த தெய்வம் சிவன்

இந்தச்சின்ன விஷயம் இத்தனைநாட்களாக ஏன் புரியாமல் இருந்தது என்பதுதான் என் ஆச்சரியம் இப்போது

மதுசூதன்