ஜெ
கின்னர உலகில் புகுந்து அர்ஜுனன் காணும் மாயக்காட்சிகள் அபாரம். கின்னரநாடு எனச் சொல்லப்படுவது திபெத் என நினைக்கிறேன். இன்றுகூட அப்பகுதி இமாச்சலப்பிரதேசத்தில் கின்னார் மாவட்டம்தான். நான் அங்கே ராணுவத்தில் இருந்திருக்கிறேன். அந்த இடமே ஒருமாதிரி கனவுமயங்கியதுபோலத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. முன்னாடியும் கின்னர்ர்கள் வந்தார்கள். அதை பார்த்தவன் தருமன். அந்தககட்சியும் ஒருமாதிரி கனவுமயங்கியதுமாதிரித்தான் எழுதப்பட்டிருந்தது.
அந்தக்கனவுக்குள் நிஜமா பொய்யா என்று நினைக்கமுடியாத காட்சிகளில் அவன் தன் முதன்மையான எதிரிகளைக்கொல்கிறான். அந்தக்காட்சியே அபாரமானது. குரு பிதாமகன் எதிரி அத்துடன் அண்ணன் அந்த வரிசையில்தானே கிருஷ்ணனும் வந்தாகவேண்டும். அவர்கள் அவனுக்கு மிகமிகந்ருக்கமானவர்கள் அல்லவா? அந்தக்காட்சிக்குப்பின் அர்ஜுனன் குழந்தை போல கருவிலிருந்து விழுந்து மீண்டும் பிறக்கிறான்
லட்சுமிநாராயணன்