Monday, January 9, 2017

வேதமொழி





ஜெ

சிவன் வாயில் ஒலிப்பது தென்மொழியாகிய தமிழ் என வாசித்தபோது மெய் சிலிர்த்தது. அதற்கான வரலாற்று தர்க்கத்தை உடனே அளிட்துவிடுகிறீர்கள். அது உங்கள் வழி. அது ஒரு தொன்மையான இனக்குழு. அங்கே இருந்தது முதல்வேதம். அந்த மொழியை அகத்தியன் கற்று தெற்கே வந்து அமைத்தது தமிழ். ஆகவே சிவன் பேசுவது தமிழ். அப்படி என்றால்கூட தொல்வேதம் அமைந்த மொழி தமிழ்தான்.

 வேதங்களுக்குக்க்கீழே சென்று ஆழம் தேடித்தேடி கிராதம் சென்று நிற்பது தென்னாடுடைய சிவனில் தான். ஆதிவேதம் அவன் அமைத்தது என்றுதான் நம் நூல்களெல்லாம் சொகின்றன. அந்தவேதம் எழுந்த மொழியின் ஒரு வடிவமே இன்றுள்ள தமிழ். நீங்கள் ஆயிரம் சொன்னாலும் உங்கள் மூதாதையர் உங்கள் நாக்கில் ஏறி அமர்ந்து அதைச் சொல்லவைத்துவிட்டார்கள்

சிவக்குமார் செல்லையா