ஜெ
பெண்ணின் கருப்பைக்குமேல் எந்த நெறியும் முற்றாணை கொண்டதல்ல என்றவரியை வாசித்ததும் என்ன இது என்று தோன்றியது. எல்லா க்கட்டுப்பாடுகளும் அதன்மீதுதானே உள்ளன. ஆனால் பின்னர் தோன்றியது அப்படி இருந்திருந்தால் மானுடகுலமே வளர்ந்திருக்காது. கலப்பு கலைப்பு வழியாகவே மானுடகுலம் வளர்ந்திருக்கிறது. மகாபாரதமே அதற்கு மிகச்சரியான சான்றுதான் இல்லையா? முக்கியமான வரி அது. அதுதான் இன்றைக்குள்ள சாதிவெறியர்களுக்கு உரிய சிறந்தபதிலாக இருக்கமுடியும். சிவனுக்கு கட்டுப்பாடுகள் இருக்கலாம். சக்தி கட்டற்றதுதான்
செந்தில்