Monday, January 9, 2017

அம்மையும் அப்பனும்






ஜெயமோகன் ஐயா,

ஜெயமோகன் ஐயா,

அம்மையும் அப்பனும் இடும் பூசலும் கையில் கனியுடன் கணபதியும் சிரித்துக்கொண்டே அம்மையிடமிருந்து அப்பனை நோக்கித்தாவும் குமரனும் அழகான சித்திரங்கள். அதிலும் சிவனே தமிழ் பற்றிப் பேசும் இடம் எந்தத்தமிழார்வலரையும் சிலிர்க்கவைக்கும். மாபாரதம் பற்றி நீங்கல் எழுதும்போது ஏன் இது என்ற எண்ணம் எனக்கெல்லாம் ஆரம்பத்திலே இருந்தது. ஆனால் இன்று அதன் அடிப்படைகளை தேடிவந்து தொட்டுவிட்டீர்கள்.

வேதங்களுக்கு எல்லாம் அடியில் இருப்பது கிராதமான சிவம் என்பதை மாபாரதக்கதையே சொல்கிறது. அதுதான் பாசுபதவேதம். அது அமைந்துள்ள மொழி எது என்றால் இவைஅனைத்துக்கும் அன்னையான ஒரு தொல்மொழியாகத்தான் இருக்கமுடியும். அதை தமிழுக்கும் அன்னை என்று சொல்லலாம். அந்த மொழியின் ஒவ்வொரு சொல்லும் எப்படி பெரிய வேத மெய்யைச் சொல்கிறது என்பதை வாசித்தபோது உணர்ச்சிப்பெருக்கு ஏற்பட்டது. சிவம் முதல் மொழி வரை அத்தனை வார்த்தைகளும் எப்படி பொருளுடன் பொருந்திய பார்வையாக உள்ளன என்று வாசித்தேன். வாழ்த்துக்கள் ஐயா

மா.பூங்குன்றன்