அன்புள்ள ஜெ
இப்போதுதான் மீண்டும்
முதற்கனலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். முதற்கனலை நான் வாசிப்பது இரண்டவது தடவை. முதலிலே
வாசித்தபோது அதிலுள்ள கதையின் வேகம்தான் என்னைக்கவர்ந்தது. இப்போது வாசிக்கும்போதுதான்
இன்றுவரை நீண்டுவந்துகொண்டிருக்கின்ற வேதங்களின் மோதல் அதில் இருப்பதைக் காணமுடிகிறது.
ஆஸ்திகன் நாககுலத்திலிருந்து வருகிறான். நால்வேதங்களின் குரலாக வியாசர் வருகிறார்.
அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்கிரார்கள். அங்கீகரிக்கிறார்கள். அது எப்படி நடந்தது
என்றுதான் வெண்முரசு பேச ஆரம்பிக்கிறது. பன்னிரண்டாயிரம் பக்க அளவிலே பேசிக்கொண்டிருக்கிறது
கிராதம் வாசிக்கும்போது தோன்றியதுவேதமும் பழங்குடிமரபும் சந்திக்கும் இடத்திலே சிவன் இருக்கிறார் என்று
சுந்தரராஜன்