Thursday, January 12, 2017

பாசுபதமும் ஏப்பமும்





ஜெ

நான் பாசுபதம் வெளிப்படும் அந்தக் காட்சியை பலமுறை நுட்பமாக வாசித்தேன். நீங்கள் அறிந்து எழுதியதுமட்டும் அல்ல அறியாமல் எழுதியவையும் அதிலிருக்கும் என்று எனக்குத்தோன்றியது

ஒரு வரி என்னை இழுத்துவிட்டது ஜெ, சத்யமாக ஆடிப்போய்விட்டேன். 

பின்னர் ஒலிகள் அனைத்தும் அமைய ஒரு சிறு குழந்தை ஏப்பம்விட்ட ஒலி இனிய பறவையின் குரலென இருளில் ஒலித்தது. அர்ஜுனன் திரும்பி அக்குழவியை நோக்க விழி சுழற்றினான். மீண்டும் ஓர் ஏப்பம் ஒலித்தது. முதிய அன்னையொருத்தியின் நிறைவு அது. பின்னர் ஏப்ப ஒலிகள் இருளுக்குள் தொடர்ந்து எழுந்தன.

பாசுபதம் வெளிப்படுவது வேண்டுதலாக அல்ல. மன்றாடலாகவோ துதியாகவோ அல்ல. முதலில் வருவது ஏப்பம்தான். ஏப்பம்தான் முதல் சத்தம். அதிலிருந்தே சத்தங்களால் ஆன அந்த வேதம் ஆரம்பமாகிறது. ஒரு குழந்தையின் ஏப்பம். இன்னொரு மூதன்னையின் ஏப்பம்

ரிக் உட்பட்ட வேதங்கள் வேண்டுதல்களே என்னும்போது இந்த வேறுபாடு மிகமுக்கியமானது என நினைக்கிறேன். அது நன்றிதானே ஒழிய துதி அல்ல ஜெபம் அல்ல என்பது எவ்வளவு பெரிய விஷயம்.

அகிலா ராஜேஷ்