ஜெ,
பாசுபதத்தை அர்ஜுனன் பயன்படுத்தவில்லை என்பது தவறு. பாசுபதம் அர்ஜுனனால் துரோணருக்கு எதிராகப்பயன்படுத்தப்பட்டது. அதை ஒரு புராணப்பிரசங்கியரிடம் கேட்டேன். இதை மகாபாரதத்தில் சோதித்துப்பார்த்தீர்களா?
ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஸ்ரீனிவாஸ்
பாசுபதம் மகாநாராயண அஸ்திரம் போன்றவை போகிற போக்கில் மகாபாரதத்தில் அம்புகளாகக்குறிப்பிடப்படுகின்றன. அவை பிற்சேர்க்கைகள். சூதர்ப்பாட்டிலிருந்து வந்தவை. உரிய முக்கியத்துவத்துடன் அவை சொல்லப்படவில்லை
பாசுபதத்தை அர்ஜுனன் பயன்படுத்தவில்லை. துரோணர் அவனுக்கு எதிராக பாசுபதத்தை எய்தார் என்றும் அர்ஜுனன் அதை முறித்தான் என்றும் ஒருவரி வருகிறது. அதற்கு அர்த்தமில்லை
மகாநாராயண அஸ்திரம் அஸ்வத்தாமாவால் பயன்படுத்தப்பட்டது என்பதும் இதேபோல ஒரு பொதுக்குறிப்பாகத்தான் வருகிறது
ஜெ