Wednesday, January 18, 2017

லகுலீச பாசுபதம்



ஜெ

பாசுபதம் பற்றி நிறைய தகவல்களை இணையத்திலே எடுக்கமுடிகிறது. பாசுபதம் சைவத்தின் தாந்த்ரீகமதங்களில் முதன்மையானது. இது தொன்றுதொட்டே இருந்துவருகிறது. இதை பக்தர்கள் காட்டுமிராண்டித்தனமான மதம் என கண்டித்திருக்கிறார்கள். விக்கிப்பீடியாவில் இந்தக்கண்டனம் மட்டும்தான் பதிவாகியிருக்கிறது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் கண்டித்தது இது என தெரிகிறது

கிபி இரண்டாம்நூற்றாண்டில் லகுலீஸர் என்பவர் இதை மறு எழுச்சிகொள்ளச்செய்திருக்கிறார். இந்த மதம் குஜராத்தில்ருந்து மறுமலர்ச்சிகொண்டிருக்கிறது. சோமநாதபுரம் கோயில் இதன் மையமாக இருந்தது. பின்னர் கஜினிமுகமது ஆட்சியில் இந்தமதம் அழிக்கப்பட்டது

பாசுபதத்தின் மூலநூல்கள் பல கிடைத்துள்ளன. இந்தத்தகவல்கள் ஆச்சரியமூட்டுகின்றன

சிவக்குமார்