Sunday, January 8, 2017

அர்ஜுனனின் தவம்





ஜெ

அர்ஜுனனின் தவம் மாமல்லபுரம் சிற்பங்களில் செதுக்கப்பட்டிருப்பதாக முனைவர் பாலுச்சாமி சொல்கிறார். அந்த அர்ஜுனன் தபசு சிற்பமே சம்ஸ்கிருத நாடகங்களை அடியொற்றி கிராதார்ஜூனியம் என்னும் நாடகக்காட்சியாக செதுக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்.

அந்தச் சோலையை கிராதத்தில் கொண்டுவந்துவிட்டீர்கள். ஆனால் தவம்செய்வது பறறி நிறையவே எழுதிவிட்டீர்கள். புதிசாக என்ன எழுதுவீர்கள் என நினைத்தேன். அர்ஜுனன் செய்யும் தவமே பலமுறை வந்துவிட்டது. அகப்பயணம்தான். ஆனாலும் புதியது வேண்டுமே காவியத்திலே என நினைத்தேன்

ஆனால் இம்முறை நேரடியாகவே சைவ மரபிலுள்ள தியான நிலைகளை உள்ளே கொண்டுவந்து புதியதாக அமைத்துவிட்டீர்கள். முதலில் தியானத்தின் ஏழு நிலைகள். [ஏழாம் கடல் என்பது வானமே என்பதுதான் அடிப்படையான அப்த வாக்யம்] அதன்பின் காமகுரோதமோகங்களை வெல்வது. அதன் ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்று மலங்களால் ஆன முப்புரம் எரிப்பு. அதன்பின் அவன் தன்னைச்சுற்றியே சிவசக்தி லீலையை  கண்டுகொள்கிறான்.

அருண்