Wednesday, January 4, 2017

பெண்களின் விழைவு






ஜெ

வெண்முரசில் அர்ஜுனன் அந்த மலைமகளை சென்று கைப்பற்றும்போது சொல்லும் உவமை மிக அழகானது. கிளைகளை புரூனிங் செய்யலாம். ஆனால் வேரை புரூனிங் செய்தால் கிடைப்பது பான்ஸாய் மரமாகவே இருக்கும். பெண்களின் விழைவு கண்ணுக்குத்தெரியாமல் வேர்போல வளர்வது. நானே இதைக்கவனித்திருக்கிறேன். சாதிமத எல்லைகளை எப்போதுமே அந்தச்சாதியின் மிகச்சிறந்த பெண்களே கடந்துசெல்கிறார்கள். அவர்களுக்குத்தான் மீறும் துணிவும் திறமையும் இருக்கிறது. ஆகவேதான் அந்தச்சாதியோ மதமோ அப்படிக்குமுறுகிறார்கள். அவர்களில் தி பெஸ்ட் தான் வெளியே செல்கிறது. அதை நீரின் விளிம்புக்கு உவமை சொன்னதும் அழகாக இருந்தது\

மகாதேவன்