ஜெ
பாசுபதத்தின் சாரமே சிவமாக ஆகுக
என்பதுதான். சிவோகம். அதை பார்வதிதேவியே எளிதாக அடிமுடிதேடிய கதையை உதாரணமாகச்
சொல்லி விளக்கிவிடுகிறாள். அனலுக்கு அடிமுடி இல்லை. சிவன் தோன்றிய அனலுக்கு
மட்டும் அல்ல எந்த அனலுக்கும். அனலாக ஆவதே அனலை அறிய வழி. அனல் அனைத்தையும் அனலாக
ஆக்கும் விரும்பும் தன்மைகொண்டது. சிவதத்துவத்தை ஒரு நல்ல உவமை வழியாகச்
சொல்லிவிட்டீர்கள்
“அனலின் அடிமுடியை காண்பதெப்படி?” என்று அவள் கேட்டாள்.
“எப்படி?” என்று காளன் அவளிடம்
ஆவலாக கேட்டான்
என்ற வரியில் வெடித்துச்சிரித்துவிட்டேன்
பசவராஜ்