ஜெ
இன்றைய கதையில்
ஊர்ணநாபனைப் பற்றி வாசித்தபோது மகாபலி பற்றி கேரளத்திலே உள்ள தொன்மத்தைத்தான் நினைத்துக்கொண்டேன்.
கேரளம் மகாபலியால் ஆளப்பட்டது. அவனுடைய கொடுமை தாளாமல் மக்கள் முறையிட்டனர்/ விஷ்ணு
அவனைக் கொன்றார். பாதாலத்திற்குத் தாழ்த்தினார்.
மகாவிஷ்ணுவை வழிபடும் வைணவர்கள்தான்
கேரளத்திலே உள்ள இந்துக்கள் அனைவரும். ஆனால் மகாபலியை அவர்கள் தெய்வமாக கொண்டாடுகிறார்கள்.
அதுதான் ஓணம். இந்த மர்மத்தைத்தான் ஊர்ணநாபனை அந்த பூசகர் தெய்வமாக வழிபடும் கதையிலே
காணமுடிந்தது ,மிகவும் சூட்சுமமான விஷயம் இது
சுவாமி