Monday, November 13, 2017

நதிநீர்ப்பெருக்கில் உருவழியும் நீர்நிலைகள். (எழுதழல் - 51)    கண்னனின் மனைவியர் எண்மரும் வெவ்வேறு அரசியல் நிலைபாடுகளை உடையவர்களாக தம் பிள்ளைகளின் நலன்கருதி முடிவெடுப்பவர்களாக் இருந்துவந்தனர். ஆனால கிருஷ்ணர் துவாரகை வந்த அடுத்த கணம் அவர்கள் தம் வேறுபாடுகளை யெல்லாம களைந்து ஓருள்ளம் கொண்டவர்களாக ஆகிவிடுகின்றனர். அப்படி ஆவதை எவ்வித முரணும் இன்றி வெண்முரசின் இன்றைய பகுதி விவரிகின்றது.


          நதி  பெருக்கெடுத்து ஓடாத போது அது ஓடிய தடத்தில் ஆங்காங்கே சிறு சிறு குட்டைகளாக  நீர் நிலைகளைக் காண்போம்ஒவ்வொன்றும் தனித்தனி அடையாளத்தைக் கொண்டிருக்கும். அவை கொண்டிருக்கும் அகலங்களில், அடைந்திருக்கும் ஆழங்களில்வேறுபாட்டோடு இருக்கும்சில சமயம் அவற்றின் நீரின் வண்ணம்சுவை கூட மாறுபட்டு இருக்கலாம். அவற்றின்   நீரில் வெவ்வேறு மலர்கள் மலர்ந்திருக்கும்ஒரு நீர்நிலையில் இருக்கும் மீன்கள் இன்னொரு நீர்நிலையில் இல்லாது போகலாம்.   இந்த வேறுபாடெல்லாம நதியின் ஓட்டம் நின்றிருப்பதால் மட்டுமேயல்லவாமீண்டும் நதி பெருக்கெடுத்து ஓடும்போது இந்த  நீர்நிலைகள் எல்லாம் தம் வேறுபாடுகளை எல்லாம் இழந்துவிடும் அதிலிருந்த மலர்களாலும் மீன்களாலும் கொண்டிருந்த தனித்த அடையாளங்கள் எல்லாம் அழிந்து போய்விடும். அந்த நீர் நிலைகளெல்லாம் அந்த நதியில் இணைந்து அவற்றுக்கென்று தனித்த இருப்பென ஏதுமின்றி போய்விடும்


    கிருஷ்ணர்  என்ற பெரு நதியில் கரைந்திருந்தவர்கள் அவன் மனைவியர்அவன் துவாரகையை விட்டகன்று யோகத்தில் ஆழ்ந்திருக்கையில் அவனின்  நினைவு தேங்கியிருக்கும் தனித் தனி நீர் நிலைகளாக ஆகிவிட்டிருந்தனர்அவர்களுக்குப் பிறந்த  பிள்ளைகள் வெவ்வேறு மலர்களென மீன்களென  ஆகி அவர்கள் உள்ளங்களை வெவ்வேறு எண்ணங்கள் நோக்கங்கள் கொண்டவையாக ஆக்கி வைத்திருந்தனர்.   
அவர்கள் செயலுக்கு நீங்களும் பொறுப்பல்லவா?” என்றான் அபிமன்யூ சற்று எரிச்சலுடன். சத்யபாமை இயல்பாகஅவர்கள் எங்களுக்கு எவ்வகையில் உறவு? என்றாள். அபிமன்யூஇங்கு நான் வந்து தங்களை சந்தித்தபோது பிறிதொன்றை சொன்னீர்கள்என்றான். “ஆம், அதை எண்ணியே நானும் வியந்துகொண்டிருக்கிறேன். இந்தப்பதர்களை எல்லாம் அனைத்துமென எப்படி எண்ணியிருந்தேன்?” ருக்மிணிஅது அவர் அகன்றிருக்கையில் எங்கள் மேல் கவிந்த இருள்என்றாள். “அல்லது அவர் எங்களை சிக்கவைத்துச்சென்ற ஆடல்.

துணைவியர் என நாங்கள் எட்டு மாயைகளில் சிக்கிக்கொண்டவர்கள்என்றாள் சத்யபாமை. “நாங்கள் அழகிகள் என்னும் மாயை. உயர்ந்தோர் எனும் மாயை. அவருக்காகவே பிறந்தோம் என்றும் அவருக்காகவே வாழ்கிறோம் என்றும் அவரை மகிழ்விக்கிறோம் என்றும் அவர் முன் எவர் பெரியவர் என்றும் அவர் எங்களை விரும்புகிறார் என்றும் எண்ணும் மாயைகள். அனைத்துக்கும் மேலானது அவர் மைந்தரைப் பெற்றோம் எனும் மாயை. இறுதியாக அதில் சிக்கியிருந்தோம்என்றாள் சத்யபாமை.
மாயைகளில் பெரிது அன்னையெனும் பற்று. அனைத்துச் சிறுமைகளையும் அள்ளிக்கொண்டு வந்து நிறைக்கிறது. அனைத்து வாயில்களையும் மூடி அறியாமையை வளர்க்கிறது. அனைத்துக்கும் மேலாக அன்னையென்று அமைந்து ஆற்றுவதெல்லாம் நன்றே என்ற பொய்யில் திளைக்கவைத்து மீட்பில்லாதாக்குகிறது. வெளிவந்தபின்னரே அதை உணர்கிறோம்என்றாள் ருக்மிணி.
ஆனால் கிருஷ்ணர் தன் யோக மாயையிலிருந்து கலைந்தெழுந்து மீண்டும்  துவாரகையில் நதியென பெருக்கெடுத்து நிறைகையில் அவர்களின் மனங்கள் தம்  வேற்றுமைகளை  இயல்பாக இழந்துவிடுகின்றனதமக்குப் பிறந்த பிள்ளகள் தன் அரசியல் நோக்கங்கள் எல்லாம பொருளற்றுப் போகின்றன
பதினான்கு ஆண்டுகாலம் ஒளிமறைவுப் பகுதியிலிருந்தோம். அவர் முன் நாங்கள் எவரென்று அறிந்தோம். மைந்தா இப்புவியில் எங்களுக்கு மானுடர் என பிறிதெவரும் இல்லை.”   என்று சத்தியபாமை சொல்கிறாள்
 
ஜாம்பவதி கூறுகிறாள்.


என் உடலும் உள்ளமும் ஊழும் மாற்றுலகங்களும் ஒருவருக்காக மட்டுமே. பிறிதொரு எண்ணம் என்னில் எப்போதும் எழுந்ததில்லைஎன்றாள்.  “இங்கிருக்கும் எவரும் எனக்கு உறவல்ல. இவ்வாறு சூழ்ந்துள்ள எப்பொருளும் என்னுடையதும் அல்ல. இங்கு ஒலிக்கும் ஒரு சொல்லுக்கும் என்னுள்ளத்தில் பொருளில்லை. ஒருவருக்கு மட்டுமென இப்புவி பிறந்தேன்.” “அவரிலிருந்து அவர் விழைவால் அலைவுற்று விலகிவந்த அவர்தான் நான்என்று ஜாம்பவதி சொன்னாள். “மீண்டு அவர் அகத்து அமர வேண்டியவள்.   நாங்கள் எட்டென பிரிந்து வேறு வேறு முகம் கொண்டு உளம் திரண்டு சொல் பெருக்கி முரண்பட்டு இங்கு ஆடும் இந்த நாடகம் அவர் மகிழ்ந்து உவகை கொள்ளும் பொருட்டு எழுந்தது மட்டுமே. இதற்கப்பால் நாங்கள் அரசியர் அல்ல, அன்னையரும் அல்லஎன்றாள்
    

பிரம்மத்தை அறிய முற்படுவது ஒரு உப்புப்பொம்மை கடலின் ஆழத்தை அறிய அதனுள்  இறங்கியதைப்போல என்பார்கள். பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மமாகிப் போவான். அதை வெளியிலிருந்து விளக்குபவன் எப்போதும் அந்தப் பிரம்மத்தை முழுதறிந்தவன் இல்லை. அதையே கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்கிறார்கள்இதெல்லாம் ஞான வெளியில் நடப்பது. ஞானம் இரகசியமென ஒளிந்திருப்பது அதை பாடுபட்டு ஒருவர் தேடியடையவேண்டும். ஆனல் பக்தி என்பது வெள்ளமென பொங்கி பரவியோடுவது.   பக்தி வெளியிலும் தம்மை இப்படி தம் இறை நாயகரிடம் கரைத்துக்கொள்ள முயல்கிறார்கள்.   பக்திகொள்வது என்பது  அவனை நினைவில் இருத்தி நெருக்கமாகிஅவன் அடிபணிந்து தாசராகி, அவன்மேல்   காதலாகி கனிந்து,    செய்யும் செயலெல்லாம அவன்பொருட்டெனநினைவெல்லாம நிறைந்திருப்பவன் அவனேயென ஆகி நிற்றல் ஆகும்அதில் தம் தயக்கம் தவிர்த்து குதித்துவிட்டவர்களை அப்பக்தி வெள்ளமே தன்னுள் மூழ்கடித்தோடி அந்தப் பரந்தாமன்  துயில்கொள்ளும் பாற்கடலுக்கு இழுத்துச்சென்று அவன் அடி சேர்க்கும்.   அவனை தன் இனிய காதல் துணைவனென நெருக்கத்தில் வைத்திருந்த அவன் மனைவிகளுக்கு அத்தகைய பக்தி மிக இயல்பானதல்லவாஅந்த பக்தி வெள்ளத்தில் தம்மை கரைத்துக்கொள்ளாமல்  எப்படி பிள்ளைகள், குலம்அரசியல் என்பதாக அவர்கள் உள்ளங்கள்  தேங்கி நிற்க முடியும்?


தண்டபாணி துரைவேல்