Saturday, June 30, 2018

முன்னூகம்



ஜெ

முதற்கனலில் பால்ஹிகர் சிகண்டியைச் சந்திக்கும் காட்சியில் பித்துப்பிடித்தவராக இருக்கிறார். அவர் நெடுநாட்களாக அந்த கல் அறைகளுக்குள் வெளியுலகமே தெரியாமல் வாழ்கிறார். அவருடைய அந்த பித்தில் அவர் சொல்கிறார். ஒருவன் தன் சகோதரர்களைச் சுமந்துகொண்டு செல்கிறான் என்று. அதுபீமனைப்பற்றிய குறிப்பு. அப்போது பீமன் பிறக்கவில்லை. திருதராஷ்டிரருக்கே திருமணம் ஆகவில்லை. அந்த பித்து விதியை முன்னாலேயே சென்று காணவைக்கிறது. இப்போது அவர் பித்தில் உளறிக்கொண்டிருக்கையில் அடிக்கடி அந்தக்காட்சியைச் சொல்கிறார். அவர் பீமன் கையால் சாகப்போகிறவர். எல்லாமே முன்னரே முடிவாகிவிட்டது என்பதுதான் வெண்முரசின் பூர்வபட்சம். அதன்பிறகு கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறீர்கள்

சாரங்கன்

மூப்பு




ஜெ

நெடுங்காலம் முன்பு நான் காஞ்சி மூத்த பெரியவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். எனக்கு ஆர்வமெல்லாம் இல்லை. நண்பர்களுடன் சென்றேன். அவரை வழிபடுவதைப்பற்றியெல்லாம் பெரிய அபிப்பிராயம் இருக்கவில்லை. அது ஒரு பாவலா என்றும் முடநம்பிக்கை என்றும் நினைத்திருந்தேன்.  அவரை நெருங்கிச்செல்லும்போது வரைக்கும்கூட என் மனம் கிண்டலாகவே நினைத்துக்கொண்டிருந்தது. அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சின்னப்புள்ளை போல அவர் அமர்ந்திருந்தார். யாரையும் பார்க்கவில்லை. ஒன்றும் பேசவுமில்லை. அவரைப்பார்த்ததும் எனக்கு அழுகை வந்துவிட்டது. வணங்கிவிட்டு வந்தபோது என்னை எல்லாரும் கிண்டல்செய்தார்கள். நான் சொல்லத்தெரியவில்லை. ஆனால் இன்றைக்குத்தோன்றுகிறது அவருடைய வயதும் அந்த வயது அளித்த குழந்தைப்பருவமுதான் அந்த மனநெகிழ்ச்சிக்குக் காரணம் என்று. நாமெல்லாம் டிரைபல் மனநிலையை ஆழத்தில் வைத்திருப்பவர்கள்தானே? நமக்கு அதைக்கடந்து வரமுடியாது. அந்த மனநிலைதான் இப்படி நம் மனதில் வயது மூப்பு எல்லாவற்றையும் மதிக்கவும் வணங்கவும் நெகிழவும் செய்கிறது. எனக்கு அந்த நாளை மீண்டும் நினைவூட்டியது பால்ஹிக பிதாமகரை எல்லாரும் கண்ணீருடன் வணங்கும் காட்சி

எஸ்.மயில்வாகனம்

கனவு




ஜெ

திருதராஷ்டிரர் போர் கண்முன் வந்துவிட்ட பின்னாடியும்கூட கனவு காணும் இடம் என்னை நெகிழச்செய்துவிட்டது. அவருடைய பிள்ளைகளும் தம்பி பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவதை அவர் கற்பனைசெய்கிறார்.  அந்த வரிகள் அவருடைய மனசில் உள்ள ஏக்கத்தைக் காட்டுகின்றன. இது நம் இயல்பு. பிரிந்துபோனவர்கள் ஒருநாள் வந்துசேர்வர்கள் என்று நம்பிக்கொண்டே இருப்போம். அதேபோல நோயில் சாகக்கிடப்பவர்கள்கூட் எல்லாம் சரியாகிவிடும் எழுந்து அமர்ந்து எல்லாவற்றையும் செய்ய ஆரம்பிப்போம் நல்லகாலம் மீண்டும் வந்துவிடும் என்றெல்லாம் நம்பி சொல்வதைப் பார்க்கிறேன். அவர்க்ளுக்க் மெய்யாகவே அந்நம்பிக்கை இருக்கிறதா என்றால் கிடையாது. ஆனால் அதை அவர்களால் சொல்லாமலிருக்க முடியாது. அவ்வளவாவது நம்பிக்கை இருந்தால்தானே உயிர்வாழவே முடியும்?

சிவக்குமார்

திருதராஷ்டிரரின் கனவு




அன்புள்ள ஜெ

திருதராஷ்டிரர் கடைசிக்கணம் வரை போரிலிருந்து பின்வாங்கவும் போரை நிறுத்தவும் துடிப்பவராகவே வெண்முரசில் வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே அவருடைய குணாதிசயம் அப்படித்தான் வெண்முரசில் வருகிறது. தன் பிள்ளைகள் மேல் அவருக்கு ஒருபடி மேல் அன்புண்டு. கடைசியில் அங்கேதான் சாய்வார். ஆனால் அது சப்கான்ஷியஸ் தளத்தில்தான். நினைத்து அவர் செய்வதில்லை. அவர் அறிந்தவரை அவருக்கு தருமனும் துரியனும் சமானம்தான். தன் தம்பி பிள்ளைகள் வாழவேண்டும் என்றுதான் அவர் நினைக்கிறார். அவர் கடைசிவரை முயற்சி செய்கிறார். கடைசி முயர்சிதான் மூதாதையாகிய பால்ஹிகர்மேல் பொறுப்பை ஏற்றிவிடுவது. அவருக்கு வேறுவழியில்லை. ஆனால் அதெல்லாம் ஒரு பாவனைதான், உண்மையில் அதெல்லாம் நடக்காது என்று அவருடைய ஆழ்மனசுக்குத்தெரிந்துதான் இருக்கும்


செந்தில்குமார்

போரின் வருகை




அன்புள்ள ஜெ


பால்ஹிகரின் வருகையும் அவர் உருவாக்கும் அரசியல்சிக்கல்களும் ஒரு பொதுவான சரடாகச் செல்கின்றன. ஆகவே கதையை விரைவாக வாசிக்கமுடிகிறது. என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லா அத்தியாயங்களிலும் உள்ளது. இதைப்பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்கே தோன்றியது. இந்த நிகழ்ச்சிகள் இல்லை என்றால் என்ன இருந்திருக்கும்? பாண்டவர்களின் படைகளின் எண்ணிக்கை, அவர்களின் வியூகங்கள், அவர்கள் கிளம்பிச்சென்றது. இந்தப்பக்கம் கௌரவர்களின் படைகளின் எண்ணிக்கை போன்ற செய்திகள். படைவஞ்சினங்கள்கூட செய்திகளாகவே இருந்திருக்கும். 

அவற்றை நேரடியாகச் சொன்னால் ரிப்போர்ட்டிங் போலவே இருக்கும். ஏனென்றால் என்ன நிகழும் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். தெரிந்த கதைக்கு ஒரு தெரியாத கோணத்தை இந்த துணைக்கதைகள் உருவாக்குகின்றன. சம்பிரதாயமான விஷயங்களுக்கு ஒரு உணர்ச்சிகரமான மனிதத்தன்மையை உருவாக்குகின்றன. போருக்கு முந்தைய ஏற்பாடுகள்தான் உண்மையில் சொல்லப்படுகின்றன. ஆனால் பால்கிகர் பூரிசிரவஸ் சாத்யகி திருஷ்டதுய்ம்னன் கதைகள் சொல்லப்படுவதாக ஒரு மாயத்தோற்றம் உண்டுபண்ணப்படுகிறது

ஆனந்த்

Friday, June 29, 2018

வீரக்கலை



வணக்கம் சார்,

செந்நாவேங்கை 21 படித்தேன். நீங்கள் எவ்வளவோ தத்துவங்களை, கருத்துக்களை எழுதுகிறீர்கள். அதற்காக நீங்கள் படித்த தத்துவ நூல்கள், விவாதங்கள், அனுபவங்கள்  அனைத்தும் ஓரளவு உங்களின் பல கட்டுரைகள் மூலம் புரிந்து கொள்கிறேன். ஆனால் வீரக்கலையில் நீங்கள் சிலம்பம் சில நாட்கள் மட்டுமே கற்றதாக ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள். அது தவிர உங்கள் குருநாதரின் குருகுலத்தில் திரு.பிரெடி என்பவர் வில் பயிற்சியில் முன்னோடி என்றும் படித்திருக்கிறேன். 

ஆனால் வீரக்கலை சார்ந்து எழுதும் பல கருத்துக்கள் தத்துவங்கள் ஒரு தேர்ச்சி பெற்ற ஆசிரியரால் கூட இவ்வளவு தெளிவாக கூற முடியுமா என்று தெரியவில்லை. சுருங்க சொல்லி விளங்க வைக்கும் உங்கள் வார்த்தை கட்டுமானத்தை புரிந்து கொள்ள முடிகிறது சார், அது உங்கள் பலம். அனால் இந்த சூத்திரங்கள் எப்படி சார்? என்ன தான் ஒரு இலக்கிய எழுத்தாளர் பிறர் மனதினுள் புகுந்து உணர்ந்து எழுத முடியும் என்றாலும், எப்படி சார் இது எல்லாம் சாத்தியம்?

  "எடையைவிட கூர்மை மேல். கூர்மையைவிட விசை மேல். விசையைவிட கோணம் மேலானது. கோணத்தை விட தருணம் முதன்மையானது" இந்த வரிகளை படித்து பிரமித்து விட்டேன். வெண்முரசில் வரும் ஒவ்வொரு வரிகளுக்கு பின்னால் உள்ள உங்களின் அபரிமிதமான உழைப்பு  பிரமிக்க வைக்கின்றது.


நான் வீரக்கலையில் நமது மரபு சார்ந்து படித்த புத்தகங்கள் அனேகமாக இல்லை. தற்போது கடைகளில் கிடைக்கும் பல புத்தகங்கள் படித்துள்ளேன். ஆனால் பல கருத்துக்கள் ஜெட்லீ, டோனி யென் போன்றவர்களின் (குங் பூ) திரைப்படங்கள் பார்த்து குழம்பி நண்பர்களுடன் விவாதித்து ஒரு மாதிரியாக  தெளிவடைய பல வருடங்கள் ஆயிற்று. ஆனால் நீங்கள் அனாவசியமாக எழுதி தள்ளுகிறீர்கள். எப்படி சார்? 

சார், நமது வீரக்கலை மரபு சார்ந்து ஏதாவது புத்தகங்கள் பரிந்துரைக்க முடியுமா? 



நன்றி,
ரஜினிகாந்த் ஜெயராமன்.

அன்புள்ள ரஜினிகாந்த்

மரபார்ந்த போர்க்கலை குறித்து நூல்கள் ஏதும் தமிழில் முறையாக எழுதப்படவில்லை. பெரும்பாலும் சிறு பயிற்சிக்குழுக்களிடையேதான் அவை புழங்குகின்றன. குமரிமாவட்ட்த்தில் பயிற்சியளிக்கும் குருநிலைகள் சில முன்பிருந்தன. நான் மேலும் கற்றுக்கொண்டது அரசியலியக்கம் ஒன்றில் இருந்த காலகட்டத்தில். நான் அதில் கற்றுக்கொண்டது பெரும்பாலும் ’தியரி;யைத்தான்

ஜெ. 

போர்க்கோலம்


அன்புள்ள ஜெ,


அஸ்தினபுரியின் போர்க்கோலம் பற்றிய பேச்சில்தான் முதல்முறையாகப் பெரிய போரின் அபத்தத்தைப் பற்றிய நக்கல்கள் வருகின்றன. அதை போரில் கலந்துகொள்ளக்கூடிய, அதேசமயம் மானசீகமாக விலகி நின்றிருக்கக்கூடிய, பூரிசிரவஸ் போன்றவர்கள் சொல்லும்போதுதான் அர்த்தம் வருகிறது. இந்த பால்ஹிக அத்தியாயம் முழுக்கவே போருக்கு எதிரான நையாண்டியும் போரைவிடப் பெரிய ஒன்றை ஞாபகப்படுத்துவதுமாகவே உள்ளது. அமுதம் வழியும் மலையை போருக்கு சமானமான மறுபக்கமாக நிறுத்துகிறார்கள். கீழே இறங்க இறங்க பால்ஹிகர் பைத்தியமாக ஆவது அவர்கள் அஸ்தினபுரிக்கு வந்து மொத்த அஸ்தினபுரியே பைத்தியம் மாதிரி இருப்பதைப் பார்க்குமிடத்தில் நிறைவுறுகிறது. இந்த அபத்தத்தை டால்ஸ்டாயின் வார் ஆன் பீஸ் நாவலிலே காணலாம். அதைவிட ஃபார் ஹூம் தெ பெல்ஸ் டால்ஸ் நாவலில் காணலாம். மகாபாரதப்போரை பலபடியாக எழுதியிருக்கிறார்கள். அதை நவீன இலக்கியம் சந்திக்கும்போது இந்த அர்த்தமில்லாத தன்மையும் கிண்டலும் அபத்த தரிசனமும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். இப்பகுதிகள் வெண்முரசின் ஒட்டுமொத்தத்தையே வேறுமாதிரிப்பார்க்கச் செய்கின்றன

சிவராம்  

எதிர்காலம்



ஜெ


நேற்று வெளிவந்த ஏ வி மணிகண்டனின் கடிதம் எனக்கு மிகப்பெரிய ஒரு அதிர்வை உருவாக்கியது. அந்தக்கோணத்தில் நான் யோசிக்கவே இல்லை. பூரிசிரவசுக்கு இன்றைய வாழ்க்கை என்பதே கிடையாது. அவன் எதிர்காலத்துகாகவே வாழ்கிறான். பால்கிகபுரியை வல்லரசாக்குவது மட்டுமே அவனுடைய வாழ்க்கையின் இலட்சியம். அவன் தன் காதல்களையும் இளமையையும் அதற்காக இழந்திருக்கிறான். அவன் அடைந்தது ஒன்றுமில்லை. அவன் அடைவதெல்லாம் எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் பெயர் மட்டும்தான்

ஆனால் பால்கிகர் எதிகாலத்துக்காக ஒருகணமும் வாழவில்லை. நித்யமான நிகழ்காலத்தில் மட்டுமே அவர் வாழ்கிறார். அவருக்கு இன்று மட்டும்தான். அவர் எல்லாவற்றையுமே அடைந்திருக்கிறார். ஆகவே போர் என்பதே என்ன? எவராவது நிகழ்காலத்துக்காகவா போர்ச் செய்கிறார்கள். எல்லா போரும் எதிர்கால நன்மைக்காகவே. போஸ்டீரிட்டிதான் மனிதனைப்போட்டு ஆட்டுவிக்கிறது. அதிலிருந்து விடுதலைபெறுவது மட்டுமே உண்மையான விடுதலை அதுவே முக்தி.

பூரிசிரவஸ் போஸ்டீரிட்டி என்ற பற்றில் உழலும் ஆத்மா. பால்ஹிகர் அதிலிருந்து முக்தி பெற்ற ஆத்மா


மகேஷ்

போர் ஆயத்தங்கள்


எழுதழல், குருதிச்சாரல், செந்நாவேங்கை – இம்மூன்று நாவல்களும் பாரதம் போர் முனை நோக்கிச் செல்வதை மூன்று கோணங்களிலாக நம்முன் விரிக்கின்றன. எழுதழலில் மைந்தர்கள் பார்வையில் போர். அவர்களின் போர் அல்ல இது, இருப்பினும் அவர்கள் பங்கேற்கிறார்கள். எதிர்முகாமின் தன் வயதொத்தவர்கள் மீது பகையோ, வெறுப்போ, வஞ்சமோ அற்றவர்கள். ஆயினும் போர் செய்ய சித்தமாகிறார்கள். அவர்களுக்கு போருக்கான நியாயம் என ஒன்று நேரடியாக இல்லை. அவர்கள் ஓர் கூட்டு நியாயத்தை கையில் கொள்கிறார்கள், இளமை வேகத்துக்கே உரிய வகையில் ஒரு பொன்னொளிர் எதிர்காலத்திற்கான ஓர் லட்சியத்தை கையில் கொள்கிறார்கள். பாண்டவ புத்திரர்கள் வருங்காலத்திற்கான நெகிழ்வான வேதமுடிபை நிலைநாட்ட களம் காண்கிறார்கள் என்றால் கௌரவ ஆயிரத்தவர் உறைந்து இறுகிய, தற்கால நெறிநாட்ட களம் காணப் போகிறார்கள். நாவல் முழுவதுமே பாண்டவ புத்திரர்கள் வழிந்து ஓடி, புதுநிலம் கண்டு, தன் வழி சமைத்துப் பெருகும் நதியாக காட்டப்படுகிறார்கள். வேதமுடிபுக் கொள்கை அப்படிப்பட்டது அல்லவா, ஒவ்வொருவருக்குமான ஒன்று!!! இதற்கு நேர்மாறாக கௌரவ ஆயிரவர் ஊருக்கு வெளியே தேங்கிய ஏரி போல ஒரே இடத்தில் தளும்பி நிறைந்திருப்பதாகக் காட்டப்படுகின்றனர். உபபாண்டவர்கள் ஒவ்வொருவரும் போரை நிகழ்த்த அவர்களால் இயன்றதைச் செய்கிறார்கள். ‘அன்றுகாலை புலி வாயில் மடியவிருக்கும் மான் விரைந்தோடுகிறதுஅந்தக் கணத்தை நோக்கி’ என ஒரு அற்புதமான கவிதை வரியில் நாவல் முழுமை கொள்கிறது.

இலட்சியவேகம் கொண்ட இளைஞர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அவர்கள் அன்னையர் பார்வையில் போர் நிகழ்வுகள் விவரிக்கப்படும் நாவலே குருதிச் சாரல். இளையோருக்கு அதர்வ வேள்வியின் அவி கொண்டு எழும் தழலாகத் தெரியும் இப்போர், தம் மைந்தர் குருதியின், தமது கருக்குருதியின் சாரலாகத் தெரிவதாகத் துவங்கும் இந்நாவல் பாண்டவ மற்றும் கௌரவ அன்னையரின் பார்வையாக விரிகிறது. பாண்டவர் தரப்பு அன்னையர்கள் தம் மைந்தர் மரிக்கலாகாது என போரைத் தவிர்க்க முனைகையில், கௌரவ அன்னையர்கள் மனதின் ஓர் மூலையில் அல்லது இயல்பாகவே இப்போரை ஒரு விடுதலையாகக் காண்பதைக் காட்டுகிறது இந்நாவல். இந்த வேறுபாடு மிக முக்கியமானது. பொதுவாக நாம் அறிந்த பாரதத்தில் பெண்கள் வருவது மிகக் குறைவு. போரை அவர்கள் எவ்விதம் எதிர்கொண்டார்கள் என்பது வரவே இல்லை எனலாம் (ஸ்திரீ பர்வத்தில் காந்தாரியின் புலம்பலைத் தவிர்த்து) மாறாக வெண்முரசு மிக விரிவாக இதை அலசுகிறது.  பெண் இழிவு என்பது அன்னையரைத் தாண்டிய ஒன்று என்பது இந்நாவலில் தெளிவாக எழுந்து வருவதை வாசகர் காணலாம். திரௌபதியை வஞ்சம் தவிர்க்க வைக்கும் தேவிகை கூட உள்ளூர அவள் வஞ்சம் துறப்பதாகச் சொல்கையில் ஏமாற்றமடைகிறாள். முதற்கனலில் கனல் ஏற்றிய அம்பை மீண்டும் இந்நாவலில் வருகிறாள். அவள் மீள்கையில் அன்னையரும் ஓரளவிற்கு போரை ஏற்றுக் கொள்ளத் துவங்குகின்றனர். அத்தகைய பெண் இழிவைக் கொண்டாடிய அந்த ஒரு தருணம் கௌரவர்கள் வாழ்வில் எத்தகையதோர் தாக்கத்தை ஏற்படுத்தியது, அதை அவர்கள் எவ்விதம் கடக்க முனைகிறார்கள் எனச் சொல்லும் இந்நாவலின் முக்கியமான தருணம் என, துச்சளை முன் குற்ற உணர்வில் ஓங்கிய கை வெட்டுண்டது போல் துவண்டு விழும் துச்சாதனன் உளமுருகி விம்மும் காட்சியைச் சொல்லலாம். பாண்டவர் தரப்பு, கௌரவர் தரப்பு என மாறி மாறி அன்னையரைக் காட்டும் இந்நாவல் இரு தரப்பிற்கும் பொதுவானவனான கர்ணனின் மனைவியான சுப்ரியையில் முழுமை கொள்கிறது. போரைத் தடுக்க முயலும் பெண்களின் கதையாக விரிந்தாலும், தாரை வாயிலாகவும், சுப்ரியை வாயிலாகவும் பெண் கொள்ளச் சாத்தியமான ஒரு விடுதலையை, அடைதலை, நிறைவை தனி இழையாகச் சொல்லிச் செல்வதில் நாவலின் பன்முகத் தன்மை நம்மை வியக்க வைக்கிறது.

இந்தப் பின்னணியில் வைத்துத் தான் செந்நாவேங்கையை பார்க்க வேண்டும். இலட்சியமும், பாசமும் கொண்ட மைந்தர்கள், அன்னையர்கள் இவர்களின் பார்வைக்கு முற்றிலும் மாறுபட்டதாகக் கடமையின் பாற்பட்ட தந்தையரின் பார்வையாக விரிந்து வருகிறது இந்நாவல். எழுதழலில் புலி வாயில் மடியும் கணத்தை நோக்கி ஓடிய இளமான்கள், கொன்று கிழித்துண்டு மேலும் மேலுமென நாச்சுழற்றிக் காத்திருக்கும் செந்நாவேங்கையைக் காணப் போகின்றன. இதுவரை தந்தையருடன் நெருங்கிப் பழகாத மைந்தர்களும், அவர்களை முதலும், கடைசியுமாகக் காணப் போகும் தந்தையரும் வரப்போகிறார்கள். போர் அனைத்தையும் அடித்துச் செல்லப்போகிறது. பாரதம் கண்டதிலேயே பெரும் போரான இதன் ஆயத்தங்களை மூன்று கோணங்களில் இருந்தும் விவரிக்கும் வகையில் இம்மூன்று நாவல்களும் வெண்முரசின் கதைப் போக்கில் முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றன.

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

Thursday, June 28, 2018

வெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்



அனைவருக்குமென் வணக்கம்

புதுவை வெண்முரசு கூடுகைக்கு கடந்த ஆண்டு இதே ஜூன் மாதம் பாவண்ணன் அவர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தார்.  இந்த ஜூனில் நாஞ்சில்நாடன்.  மணிமுடியில் மேலும் ஒரு வைரம் என முதுமொழி சொற்றொடர் ஒன்றுண்டு.  எங்களது வெண்முரசு வாசிப்புப்பகிர்வுக் கூடுகை மணிமுடி அந்தஸ்து பெற்றிராத ஒன்றெனினும் நாஞ்சிலாரின் இவ்வருகையும் பங்கேற்பும் நிச்சயம் எங்களளவில் மேலுமதிலோர் அரிய வைரம் பதிப்பிக்கப்பட்டதுப் போலத்தான் என்பதில் ஐயமேதுமில்லை. உடன் கீரனூர் ஜாகீர்ராஜாவும் வந்திருந்தார்.  இத்தைகைய பெருமை வாய்ந்த சிறப்புக்கூடுகை நிகழ்வதற்கு தளம் அமைத்துகொடுத்த மரியாதைக்கினிய வளவ. துரையன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் என்றென்றும்.

மேலும் இந்தக் கூடுகையிலேயே தனியொரு பெண்ணாக மணாலி வரை பைக் சவாரி செய்து வந்த எமதன்புத்தோழி செல்வராணியின் சாகச மனப்பான்மையை கொண்டாடும் பொருட்டு அதுவும் நாஞ்சிலார் முன்னிலையில் நேரமொதுக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட மயிலாடுதுறை பிரபுவின் யோசனையையேற்று அந்நிகழ்வு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  செல்வராணியும் ஒரு வெண்முரசு வாசகியாக அவர் பயணம் செய்து கண்டுணர்ந்த இந்திய நிலவியலின் தொன்மையைப் பற்றியும் தனது பயணானுபவங்கள் பற்றியும் எடுத்துக்கூறினார். 


தான் சென்று வந்ததை யாராலும் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியாமை குறித்து சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்தார்அவர் சென்றது ஆன்மீகப்பயணமோ இன்பச்சுற்றுலாவோ அல்ல. ஐம்பது கிலோ மீட்டருக்கொருமுறை மாறிக்கொண்டே செல்லும் நிலப்பரப்புகளை காண்பதற்காகவே சென்று வந்திருக்கிறார்வெண்முரசில் இந்த எல்லா நிலப்பகுதிகளுமே காட்சிப்படுத்தப்பட்டுவிட்டதால் புதிய ஒன்றாக அவருக்கு தோன்றவில்லைமாளவமும்விதர்ப்பமும்மார்த்திகாவதியும்மதுராவும் இன்றைய பெயர்களில் அறிமுகமாகியிருக்கிறது இடர் எதுவும் நடக்கவில்லையா என்ற கேள்வியையே தான் எங்கும்எதிர்கொள்வதாக கூறினார். தமிழ்நாட்டை தாண்டி வெளியே சென்றால் நமக்குப்பாதுகாப்பில்லை என்றே கற்பிக்கப்பட்டிருக்கிறது, அதுவும் மொழி தெரியாத ஊரில் என்ன செய்வது என்ற எண்ணம்.  இந்தியாவை சுற்றிப்பார்க்க இந்தி தேவை என்ற எண்ணமும் பொய்தான் என்றார் ஆக்ரா டெல்லி இந்த இரு பகுதிகள் தவிர்த்து வேறு எங்கும் இந்தி மொழி பெரிதும் பேசப்படவில்லைஉள்ளூர் மொழிகளே எங்கும்பேசப்படுகிறது மணாலி அருகே அவர் தங்கியிருந்த இடத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட உள்ளூர்மொழிகள் புழக்கத்தில் உள்ளதாகச் சொன்னார்.  இந்தி தெரியாமல்தான் இவ்வளவு தூரம் சென்று வந்ததாகவும் பாதுகாப்பின்மையை ங்குமே உணரவில்லை என்றும் தெரிவித்தார்.  அனைவரும் கனிவுடனும் மகிழ்வுடனுமே அவரது பயணத்தில் இடம்பெற்றிருக்கின்றனர் அவரது திட்டமிடலும் நேர்மறை ஆற்றலும்இன்னும் அவரை பன்மடங்கு பயணிக்கச்செய்வனவாகுக

இந்திய மண்ணில் இதுபோன்ற தனிநபர் சாகசப்பயணம் என்பது பலரும் எண்ணுவது போல இடர்மிகு அபாயகரமானது அல்ல என்பதும் பயணம் மேற்கொள்வதற்கான உந்துவிசையே வாழ்வின் மீதான நம்பிக்கையறிகுறிகளில் தலையாயது என்பதும் அவரின் குரலாக மீமீண்டும் ஒலித்தது.  ஒருவேளை அவர் போன்றோர்க்கு நாள்தோறும் மேற்கொள்ளப்படும் அன்றாட வாலாயங்களே பேரச்சம் விளைவிப்பன போலும்.

அடுத்ததாக அன்றைய வெண்முரசின் பேசுப்பகுதிகளான மழைப்பாடலின் அனல் வெள்ளம் மற்றும் முதற்களம் குறித்து திருமாவளவன் பேசினார்.  அதில் பல்லாயிரம் புரவிகளுக்கு நிகரான அஸ்வதந்த வைரம் பற்றி பேச்செழுந்தபோது அஸ்வம் எனும் அளவிற்கறிய விழைவுத்தன்மை எவ்வாறு திருதாவிடமிருந்து பாண்டுவிற்கு கடத்தப்பட்டு பின் விதுரனிடம் கையளிக்கப்பட்டது என்பதையும் அதை விதுரன் எவ்வாறு ஒரு மரக்கலத்தின் அடியாழத்தில் வைத்து பேணி வந்தான் என்பதையும் சென்னையிலிருந்து வேணு வேட்ராயனுடன் திடீர் விஜயம் புரிந்திருந்த நமது அன்பின் ஜாஜா தனது பாணியில் மிகுந்த சுவாரஸ்யத்தோடு எடுத்துரைத்தார்.  அஸ்வதந்தக் ல் தன் ஒளியை எல்லோர் விழியிலும் காட்டிக்கொண்டிருந்ததாகவே பட்டது.  
    

நிறைவாக நாஞ்சில் நாடன் உரை நிகழ்த்தினார்.  வெண்முரசு  தன் மொழிக்குள் நடக்கும் உன்னதம் எனக் கூறி அதன் பிரம்மாண்டம் மீதான தனது பிரமிப்பையும் பெருமிதத்தையும் மனம் திறந்து முன் வைத்தார்.  வெண்முரசின்பால் ஜெயமோகன் காட்டி வரும் அளவிறந்த ஈடுபாடு பற்றி அவருடனான தன் தனிப்பட்ட சந்திப்புகளின் போது பார்த்துணர்ந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.  அவர் வாசித்த மகாபாரத நாவல்கள் யாவும் மகாபாரதத்தின் ஏதேனுமோர் சிறு கூறினை மட்டும் எடுத்தாட்கொண்டதாகவும் மாறாக ஜெயமோகனின் அசாத்தியமான மொழிவளமும் மனவிரிவும் கற்பனைவளமும் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியத்தொன்மத்தையும் மகாபாரத வடிவில் முழுமையாக திருப்பியெழுத சாத்தியம் கொண்டது எனக்கூறி சங்க இலக்கியங்களில் உள்ள மகாபாரதக் குறிப்புகள் பற்றியும் நாட்டார் வழக்கில் நிலவி வரும் மகாபாரதக் கதைகள் சொல்லியும் ஒன்றரை மணிநேரம் போனது தெரியாமல் உற்சாகமாக உரையாடினார்.  

நாஞ்சில் வருகையை அறிந்து எங்களது மரியாதைக்குரியவரான
திரு லக்ஷ்மிநாராயணன் எம்.எல்.ஏ நேரில் வந்து நிகழ்வில் கலந்துகொண்டு  முடியும் மட்டும் இருந்து நாஞ்சில் நாடனுக்கு தனது மரியாதையை செலுத்திச் சென்ற மாண்பை கண்கூடாகக் கண்டது பலரையும் வியப்பிலாழ்த்தியது.

மிக்க அன்புடன்
மணிமாறன்.


வெண்முரசு, மகாபாரதம்- நாஞ்சில்நாடன் உரை


நாஞ்சிலாரின் உரை.. எழுத்து வடிவில்..

மகாபாரதம் வடதமிழகத்தில் தெருக்கூத்து வடிவில் நிலைத்திருக்கிறதுதிரௌபதி வஸ்திராபரணம்அபிமன்யு கதை என்று விதவிதமாக கூத்துகள்மதுரைக்கு தெற்கே இந்த கூத்து வடிவம் கிடையாது.  மாறாக வேறோர் வடிவில் உண்டு. அது தோல்பாவைக்கூத்து.  பாவைக்கூத்தில் இராமாயணம் தான் பிரதானம்பாரதத்தின் கதைமாந்தருக்கு அத்திரையில் இடமில்லைஇராமயணக்கதையின் எளிமை இதற்குக்காரணமாகஇருக்கலாம்இராமாயணத்தில் இருக்கும் பரிச்சயம் எனக்கு மகாபாரதத்தில் இல்லைதமிழில் மூன்று பாரதம் இருந்திருக்கிறது ல்லாப்பிள்ளை பாரதம்பெருந்தேவனார் பாரதம்வில்லி பாரதம்வர்கள் யாருமேமுழுவதுமாக பாரதம் பாடியவர்களில்லை பாரதியால் கூ மகாபாரதத்தின் சிறு பகுதியையே இலக்கியமாக்க முடிந்தது பாஞ்சாலி சபதம் மட்டுமே எழுதினார் தேசபக்தியை மனதில் கொண்டு பாரதமாதாவை பாஞ்சாலியாக உருவகித்துப்பாடினார் என்று சொல்வார்கள் ஆனால் நான் படித் மட்டில் எனக்கு அப்படித்தோன்றவில்லைஅவர் இன்னும் நீண்ட ஆயுள் கொண்டிருந்தால் ஒருவேளை அவர் இன்னும் அதிகமாகஎழுதியிருக்கக்கூடும் தேவி பாஞ்சாலி உரைப்பாள் என்று துவங்கி அவர் எழுதியுள்ளதை வில்லி பாரதத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் பாரதியின் வீச்சு புரியும் 
வில்லிபுத்தூரார் பற்றிய ஓர் கதையுண்டுஅவர் பிறப்பால் செல்வந்தர்நிலபுலங்கள் நிறைய உண்டுஅவரது தமையனாருக்கும் அவருக்கும் சொத்து பாகத்தில் பிரச்சினை. வழக்கு பாண்டிய மன்னனிடம் போகிறது. அவரோ அவர்களிடம் பாரதத்தை கொடுத்து முதலில் இதை தமிழில் ழுதி முடியுங்கள் பின் வழக்காய்வோம் என்றனுப்பி விடுகிறார்வில்லிபாரதம் பாடி சுவடிகளை மன்னனிடம் கொடுத்தனுப்புகிறார்.மன்னனுக்கு வழக்கு நினைவுக்கு வருகிறது வில்லியை அழைக்கிறார்வில்லி சொத்துக்களை எல்லாம் அண்ணனே எடுத்துக்கொள்வதில் தனக்கும் சம்மதமே என்று பதிலளித்து விடுகிறார் ஒரு காவியம்படிப்பதினால் கிடைக்கும் தரிசனம்திறப்பு இல்லையா இது.
கம்பன் வால்மீகிக்கு முன் மூன்று இராமாயணம் இருந்ததாக பதிவு செய்கிறான்ஆனால் வியாச மகாபாரதத்திற்கு முன் வேறு பாரதங்கள் இருந்ததா தெரியவில்லை ராஜாஜி எழுதிய இரண்டு முக்கியமானபுத்தகங்கள் சக்ரவர்த்தி திருமகன் ற்றும் வியாசர் விருந்து.  இதில் வியாசர் விருந்து தான் நான் படித்தறிந்த மகாபாரதம் சோழ மன்னனுக்கு அம்பிகாபதி அமராவதி மேல சந்தேகம்இவங்க எதோபேசிக்கிறாங்களே எதுக்கும் சோதிச்சுப்பார்ப்போம்னு கம்பரையும் அவர் மகனையும் விருந்துக்குக்கூப்பிடுறார்விருந்துன்னா இன்னைக்கு அஞ்சு நட்சத்திர ஓட்டலிலே மூன்று டேபிள் போட்ட மாதிரி சாப்பாடு போட்டிருக்க மாட்டாங்ககாவல்கோட்டத்தில வெங்கடேசன் எழுதுறார் பாருங்க தளபதிகள் கம்மங்கூழ் குடிச்சாங்கன்னு அது ரொம்ப சரி கம்பர்சோழன்அம்பிகாபதி அப்புறம் ரெண்டு தளபதிங்கஅமைச்சருங்க இருந்திருப்பாங்கதரையில உக்கார்ந்திருக்காங்கஅப்போ அந்தப்பொண்ணு சாப்பாடு விளம்ப வர்றாபாத்தவுடனே பாடிட்டான் கம்பர் மகன் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கசையன்னுபாவி குடியக்கெடுத்தானேன்னு நினைக்கிறார் கம்பர்அவன் விட்ட இடத்திலேயிருந்து பாடுறார் கொட்டிக்கிழங்கோ... கிழங்கென்று கூவுவாள் வழங்கோசை வையம்பெறும்னுஇந்த மாதிரி தெருவிலே கூவி விக்கிறவங்களுக்கு  கூவியர்னு பேரு சங்கப்பாடல்களிலேஇடியாப்பத்தை கூவி வித்திருக்காங்க அப்போஇப்போவும் விக்கிறாங்கசோழ ராஜாவுக்கு சந்தேகம்கொட்டிக்கிழங்கென்பது ஆம்பல் போன்ற நீர்த்தாவரமொன்றின் கிழங்குகடும் பஞ்சகாலத்தில் குளத்தின் நீர்வற்றினால் தான் கொட்டிக்கிழங்கு அகழமுடியும்என் நாட்டில கொட்டிக்கிழங்கு திங்கிற அளவுக்கா பஞ்சம்னு எட்டிப்பாக்குறான் ராஜா,அங்க ஒரு கிழவி கிழங்கு வித்துப்போறாபுலவனுக்காக அவன் மனம் துயரப்படக்கூடாதுன்னு சரஸ்வதி வாரா இல்லையா.
புலவன் தப்பா எழுதுவதில்லைஎன்பு தின்னும் ஒட்டகம்னு சங்கப்பாடல் ஒண்ணுல குறிப்பு வருது வையாபுரிப்பிள்ளை முதலிய எல்லா உரையாசிரியர்களும் அதை எலும்புன்னுதான் சொல்றாங்க ஒட்டகம்எலும்பு திங்குமா அது ஹெர்பியோரஸ்சாகபட்சினிஆனா மூணு மாதம் பசியி இருக்கற ஒட்டகம் எஜமானனின் தோல் கூடாரத்தையே உண்ண வல்லதுதமிழ்நாட்டுல ஒட்டகம் எலும்பு தின் என்னஅவசியம் இது ஒன்னும் பாலை இல்லையே.  பிறகு நான் அகராதிகளில் தேடிப்பார்த்தேன் கிடைக்கலகோரக்கர் அகராதியில இதுக்கு விடை கிடைச்சது - வெள்ளிய உலர்ந்த புல்என்புங்குறது புல் அப்பிடிங்குறஅர்த்தம் அதில் கொடுத்திருந்ததுதேடினால் கிடைக்கும்யாரு சொன்னா என்ன தேடனும் அவ்வளவுதான்.
ஒட்டகம்ஒட்டகை முதலிய வார்த்தைகள் சங்கப்பாடல்களிலே இருக்குதொல்காப்பியத்திலே ஒட்டகம் இருக்கு எந்தெந்த விலங்குகளின் குழந்தைகளை குட்டின்னு சொல்லனுங்குற இடத்திலே ஒட்டகம் வருது.  இந்த வார்த்தை எப்படி மிழ் இலக்கியத்துல வருதுஇது மிழகத்தோட விலங்கு இல்லையேஒட்டகமும் குதிரையும் வெளியிலருந்து வந்தது ஆனா குதிரை தங்கிடுச்சு ஒட்டகம் தங்கல.  ஆங்கிலத்துலகேமல், இந்தியில கம்லா இதுல ஒட்டகம் எனும் சொல்லோட வேர் எங்க ருக்கு.  வடமாநிலங்கள்ல ஒட்டகத் ஊன்ட் அப்டிங்கிறாங்க, பீகார் பகுதியிலே ஊட் அப்டிங்கிறாங்க இங்கருந்து தான் ஒட்டகம் என்கிறவார்த்தை பிறக்குது.  இங்க ஒரு பேராசிரியர் ஒட்டிய வயிருள்ளதால ஒட்டகம்னு பெயர் வந்ததுங்கறாரு அப்பிடிப்பார்த்தா முதல்ல நாய்க்கில்ல அந்தப்பேர் வந்திருக்கனும்
திருக்குறளில் ஒன்பதாயிரத்து முன்னூற்று பத்து சீர் மொத்தம்வள்ளுவர்  உத்தேசமாக ஏழாயிரம் சொற்கள் பயன்படுத்தியிருக்கலாம்கம்பனது பாடல்விருத்தம்சீவக சிந்தாமணியில் திருத்தக்கத்தேவர் பயன்படுத்திய அத்தனை விருத்தப்பாக்களையும் கம்பன் பயன்படுத்தியிருக்கிறான்கம்பனுடைய பாடல்களில் குறைந்தது ஒரு லட்சம் சொல்லாவது இருந்துள்ளதுஇது உலகம் முழுதுமுள்ள செய்யுள் காப்பியத்தில் அதிக சொல்லுடைய காப்பியம்இந்த சிறப்பு மொழியிலே நிகழ்ந்திருக்கிறதுதாமரை என்னும் ஒரு சொல்லுக்கு அரவிந்தம் வனசம் பங்கயம் என்று பல்வேறு சொற்களை தமிழ்ப்படுத்தி பயன்படுத்தியிருக்கிறான்அதற்கான தேவை மொழியிலே இருந்திருக்கிறதுஇதை தொல்காப்பியம் அங்கீகரிக்கிறதுசெய்யுளுக்கான இலக்கணப்படிவடஎழுத்து தவிர்த்து தமிழ்ப்படுத்தி வடசொல்லை பயன்படுத்தலாம்இப்படி மொழிக்குள் ஏராளமான சொற்களை கொண்டுவந்தும்அதுவரை வராத சொற்களை பதிவு செய்தும் காப்பியம் செய்திருக்கிறான் கம்பன்.
தூது வந்த அனுமனுக்கு வாலிலே நெருப்பு வைக்கிறார்கள்செய்தி சீதைக்கு செல்கிறதுஅப்போதுதான் இன்றென இருத்தியல் என்று வாழ்த்தியிருக்கிறாள்தான் கற்புநெறி காப்பதையும் உயிரோடிருப்பதையும்இராமனுக்கு சொல்ல வேறொருவன் ல்லைஅக்கினி பகவானை அழைக்கிறாள்நிற்கே தெரியும் என் கற்பு எனக்கூறிஅவனை சுடல் என்கிறாள்சொன்ன மாத்திரம் கடலின் வடவைத்தீ அவிகிறதுஇருசுடர்அணைகிறதுவேள்வித்தீ குளிர்கிறதுறுதியாக முக்கண்ணனின் வன்னியும் அவிந்தது என்கிறார் கம்பர்அழல், (காரைக்காலம்மையார் பாடுறா இல்ல அழலால் அங்கை சிவந்ததோஅங்கை அழகால் அழல்சிவந்ததோன்னுதழல் கனல் அனல் நெருப்பு எரி அக்கினி தீ என்றெல்லாம் சொல்லிய கம்பர் வன்னி என்றோர் சொல்லும் கையாள்கிறார்வன்னி ஓர் மரம்ஈழத்து வன்னி உள்ளதுஓர் சாதிப்பிரிவு உண்டு இங்கு வன்னி எனப்படுவது நெருப்புத்தானே. காளமேகம் பாடுகிறாரே தீத்தான் அவன் கண்ணிலேதீத்தான் அவன் உடலெலாம்புள்ளிருக்கு வேளூரா உன்னை தையலெப்படி சேர்ந்தாள் என்று அயற்சொல் அகராதியிலே இந்த வார்த்தையை கண்டெடுத்தேன் வஹ்னி என்பது நெருப்புக்கான வடசொல் அதுவே கம்பனிடத்து வன்னியாயிருக்கிறது.
கம்பன் யுத்த காண்டத்திலே ஒரு டத்திலே பூளைப்பூ பற்றிப்பேசுகிறான்மாருதத்தில் சிதறிய பூளை போல இராவணின் படை சிதறியதாக நான் வசிக்கும் கோவையில் பொங்கல் பண்டிகையின்போதுவேப்பிலை ஆவாரம்பூ பூளைப்பூ மூன்றையும் சேர்த்து எரவாணத்தில் சொருகி வைக்கும் வழக்கமிருக்கிறது,.  இதற்குக் காப்புக்கட்டுதல் என்று பெயர்.  கபிலர் குறிஞ்சிப்பாட்டின் பூ வரிசையில் பூளையையும்சேர்த்திருக்கிறார் சங்க இலக்கியத்தில் இப்பூ வெண்தலைக்கும்ரகரிசிச்சோறுக்கும் ஒப்புமை சொல்லப்படுகிறதுகாற்றடித்தால் சிதறி விடும் ஓர் எளிய பூ இலக்கியத்தில் எவ்வளவு நயம் சேர்க்கிறது, எக்காலமும் நிலைத்து விடுகிறது.
வெண்முரசு நாவல் உரைநடை இலக்கியத்திலே உலகப்பெரும் ஆக்கமாக உருவாகி வருகிறது இதிலுள்ள சொற்களை எல்லாம் ஓர் பல்கலைக்கழகம் அட்டவணைப்படுத்தி அகராதிப்படுத்தினால் மேலும்பல்லாயிரம் சொற்கள் மொழியில் சேர்ந்திருக்கும் இந்த பாரதம் எழுதும் பெருமுயற்சிக்கு ஜெயமோகனுக்கு தேவையான சக்தியும் ஆற்றலும் கிடைக்கப்பெற ப்ரார்த்திக்கிறேன்.     




பாண்டி வெண்முரசு விமர்சனக்கூட்டம் ஜூன் 2018ல் பேசியது]