Monday, February 27, 2017

விட்டுச்செல்லுதல்




 ஜெ

சர்வசாதாரணமாக ஓர் உரையாடலாக வந்த வரிகள் இவை. ஒரு செறிவான கவிதை. விட்டுச்செல்ல எல்லாரும் எண்ணுகிறார்கள். அதைப்பற்றிய ஒரு பெரிய அறிதல் அமைந்த கவிதை இது

விட்டுச்செல்லுதல்

முதற்காலையில் காற்று அகல்வதுபோல்
 உகந்த அனைத்திலிருந்தும் செல்லவேண்டும்

திரும்பி ஒருகணம் நோக்க விழைந்தால்
 ஓங்கி ஒரு மூச்செடுத்தால்
ஒரு விழிநீர்த்துளி உதிர்ந்தால்
செல்லுதல் எவ்வகையிலும் பயனற்றது.
அவை விதைகள்.
நாளுக்கு நாளென முளைத்து காடாகும்
 வல்லமை கொண்டவை.
பின்பு அப்பெருந்துயர் முளைத்த அடர்காட்டில்தான்
குடியிருக்க வேண்டியிருக்கும்


செல்வது மிக எளிது.
மீண்டு வராமல் செல்வது அரிதினும் அரிது.
 செல்பவன் மீண்டும் வருகையில்
விட்டுச்சென்ற எதையும் காணமாட்டான்.
முழுதாக செல்லாதவன் அடைவதுமில்லை.
விட்டவற்றை மீளப்பெறுவதுமில்லை

*

இந்த வரிகளை எத்தனையோ முறை வாசித்தேன். வெண்முரசு கதைதான். ஆனால் அதனுள்ளே பல்லாயிரம் கவிதைகள் உள்ளன

மனோகரன்

அந்தண அறம்



ஜெ

வெண்முரசில் முன்னாடியே வந்தது தான் என்றாலும் அமைச்சரின் அந்த எழுச்சி அதிர்ச்சியை ஊட்டியது. அந்தண அறம் ஒன்று எப்படி உருவாகி நீடித்தது என்பதைக் காட்டியது அது. தியாகம் கல்வி வழியாக அவர்கள் அந்த இடத்தை அடைந்திருந்தார்கள் என நினைக்கிறேன். அது அரசனைக் கட்டுப்படுத்தும் சக்தியாக இருந்திருக்கிறது

அவர் அந்த இடத்திற்கு உயர்ந்து வரும் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது

செல்வா

மீட்சி



ஜெ

மானுட மனோவியல் பற்றி அடிக்கடி அதிர்ச்சிதரத்தக்க நுட்பமான இடங்கள் வெண்முரசில் வந்துகொண்டிருக்கும். அதிலும் ஆண்பெண் உறவு பற்றி பல பகுதிகள் வந்துள்ளன. அவற்றில் முக்கியமான இடம் என்பது இன்று வந்துள்ளது

முதிய பெண்மணி தன் கணவனின் மரணப்படுக்கையில் உடன்படுக்கிறாள். அப்போது அவள் தன் இளமைப்பருவத்தைத்தான் நினைக்கிறாள். அவளுக்கு அவளுடைய கணவன் ஒரு பொருட்டாகவே தென்படவில்லை. எந்தப்பெண்ணுக்கும் கணவன் ஒரு பொருட்டு அல்ல என்று ஒரு கண்டடைதல் அங்கே வருகிறது

அவளுக்கு பிள்ளைதான் முக்கியம். அவனை மானசீகமாக இழந்தபொன் நேராக அவள் இளமைக்கே சென்றுவிடுகிறாள்.

சாரங்கன்

இணை



ஜெ

மாமலர் மெல்லுணர்ச்சிகளின் நாவல். அதன் தலைப்பே அதைச் சொல்லிவிட்டது. ஆனால் அது காதல்போல மட்டும் அல்லாமல் பல தளங்களுக்குச் செல்கிறது. மூதரசி தன் கணவனின் இறந்த உடலை அணைத்துக்கொண்டு படுத்திருக்கும் காட்சி என் மனதை உருக்கிவிட்டது. அது ஒரு அமரத்துவம் வாய்ந்த உறவு என்று தோன்றியது. இந்த மெல்லிய ஆண்பெண் உணர்ச்சிகளில் அதுதான் உச்சம் என நினைக்கிறேன்.

அவர் முகம் மலர்ந்து தெய்வம்போல படுத்திருப்பதும் அவள் ஒடுங்கி சின்னப்பிள்ளைபோல அருகே கிடப்பதும் ஒரு பெரிய ஓவியம்போல மனதிலே நின்றன

சண்முகம்

Saturday, February 25, 2017

குஸ்மிதன் கூற்றுக்கள். ( மாமலர் -13)



    முண்டன் என அழைக்கப்படும் குஸ்மிதன் ஆங்காங்கும் போகிற போக்கில் சொல்லும் கூற்றுக்கள் மிகவும் அர்த்தம் பொதிந்தவையாக உள்ளன. அவன் சொல்கையில் அதை சற்று  நிதானித்து சிந்தித்திக்கும்போது அவன் சொல்லும் கருத்துக்களின் ஆழத்தை அறிய முடிகிறது. அதில் சில கூற்றுகளை இங்கு திரும்பவும் எண்ணிப்பார்க்க விழைகிறேன்.
மொழியெனும் மனமூடி
 
குஸ்மிதன் கூறுகிறான்:
 
   “தோல் என்று ஒன்றைப் படைத்த பிரம்மன் மானுடரின் உள்ளுறுப்புகளை பிறர் பார்க்கலாகாதென்று எண்ணினான் என்பது தெளிவு. பாண்டவரே, மொழியென்று ஒன்றை படைத்த கலைமகள் மானுடரின் உள்ளத்தை பிறர் காணலாகாதென்று எண்ணினாள் என்றே கொள்க!”
 
    நிர்வாண உடல் அவ்வளவு அழகானதல்ல. குழந்தைமை மறைய மறைய நிர்வாணத்தின் அழகு குறைந்துகொண்டே செல்கிறது. காமத்தின் கண்கொண்டல்லாமல் நிர்வாணத்தைக்  பார்க்கையில் கண்ணும் மனமும் கூசவே செய்கிறது.   அதனால் அதை ஆடைகொண்டு அலங்கரித்துக்கொள்கிறோம்.  ஆடைகளில் தேவையான அளவுக்கு உடலை ஒளித்து மறைத்து  நாம் காட்டும் உடல் முழுமையானதல்ல. மற்றும் அது நமக்கு வேறு பிம்பத்தை காட்டும்படி செய்கிறது.  நமக்கு நன்கு தெரிந்த ஒருவர் திடீரென்று போதுமான ஆடையின்றி காண நேர்ந்தால் அவரை  வேறு ஒருவர் என நம் உள்ளம் சந்தேகிக்கிறது.   கனத்த அங்கி போட்டு மிடுக்காக இருக்கும் ஒருவர் ஆடை இல்லாத போது தளர்வும் முதுமையும் வெளிப்பட பலஹீனமானவராகத் தோன்றுகிறார்.  ஆடை எப்படி நம் உடலை மறைத்து வேறு  உருவை மற்றவருக்கு தோன்றச் செய்கிறதோ அதைப்போல நம் உள்ளத்தின் மேல் நாம் மொழியை ஆடையென அணிந்து நம்மை உள்ளத்தை அலங்கரித்துக்காட்டுகிறோம்.  மொழியின் மூலம் வெளிப்படுத்தப்படும் நம் உள்ளம் முழுமையானதல்ல.  சற்று  மறைத்து, சற்று  திரித்து, சற்று மிகைப்படுத்தி, அல்லது சற்று குறைத்து நம் உணர்வுகளை சொற்களில் வெளிப்படுத்துவதால் மற்றவர் நம் சொற்கள் மூலம் அறிவது நம் உண்மையான உருவல்ல. ஒவ்வொருவர் உள்ளமும் சொல் எனும் முகமூடியை போட்டுக்கொண்டிருக்க நாம் அதன் உரு இதுவென பலவாறு யூகித்துக்கொண்டிருக்கிறோம்.

----------------------------
வண்ணம் மாறும் விலங்கு 
 
குஸ்மிதன் கூறுகிறான்:
    
 
“முற்றிலும் அறியப்படாமலிருக்கவும் மானுடரால் இயல்வதில்லை. சொல்லியும் உணர்த்தியும் அறிவிக்கிறார்கள். அவ்வாறு அறியப்பட்ட ஒன்று நிலைக்கவும் நீடிக்கவும் அவர்கள் விரும்புவதில்லை. சொன்னதை வரைந்ததை உடனே கலைத்து நீ அறிந்ததல்ல நான் என்கிறார்கள். தன்னை முன்வைத்து பிறருடன் பகடையாடுவதே மானுடர் தொழில். உடனுறைவோரை அறிய எண்ணுபவன் நீரில் அலையெண்ணுபவன்.”   
இப்படி உண்மையற்ற தன் உருக்களையே பிறர் முன் ஒவ்வொருவரும் வெளிக்காட்டிக்கொள்கிறார்கள். சிலசமயம் அந்தத் தவறான தன்னுடைய மாய உருவையே தன்னுடையதென  தாமே நம்புவதும் உண்டு. அதன் காரணமாக  ஒருவர் கொண்டிருக்கும் இன்றைய  நிலையை நாளை கொண்டிருப்பதில்லை. அப்படி அவர்கள் நிலையை தன் கருத்தை மாற்றிக்கொண்டே இருப்பது அவர்களுக்கு முரணாகத் தோன்றவில்லை.  நேற்று இதுதான் சரியென்று உறுதி செய்த ஒன்றின் மேல் இன்று ஐயம் வருகிறது. நாளை அது முற்றிலும் தவறு என்று  அவர்களே மாற்றி உரைக்கிறார்கள்.    இன்று ஒருவர் காட்டும் உருவை வைத்து அவர் இப்படி இவ்வாறு செயல்படுவார் என நாம் கணிப்பது நாளை அவர் காட்டும் உருவில் பொருளிழந்து போய்விடும்.  கனிவும் பொறுமையும் கொண்டிருக்கும் ஒருவர் மற்றொரு நாள் சிறிய குற்றத்துக்கு சீறி விழுகிறார். ஒரு கட்டத்தில் எதையும் மற்றவர் நலனுக்கு தியாகம் செய்பவராக தோன்றும் ஒருவர் இன்னொருநாள் அற்ப ஆசைகளுக்காக சண்டை பிடிக்கிறார். மனிதகள் இப்படி தினம் தினம், தன் வண்ணத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  ஒருவரின்  உண்மையான வண்ணம்தான் என்ன? ஒருவேளை இதுதான் இவரின் உண்மையான வண்ணம் என ஒன்று எவருக்கும் இருப்பதில்லையோ?
-----------------------------------------

இருண்டிருக்கும்  இறந்தகாலம்
 
 
குஸ்மிதன் கூறுகிறான்:
 
 
“எதிர்காலத்தை அறிய முடியாதென்கிறோம். பாண்டவரே, மானுடரால் இறந்தகாலத்தை மட்டும் அறிந்துவிடமுடியுமா என்ன?” என்று முண்டன் சொன்னான். “இறந்தகாலம் என மானுடர் சொல்வதெல்லாம் அவர்கள் நினைவுகூர்வதை மட்டும்தானே? நினைவுகூரச் செய்வது எது? விழைவும் ஏக்கமும் ஆணவமும் தாழ்வுணர்வும் என அவனாகி அவளாகி நின்றிருக்கும் உணர்வுநிலை மட்டும்தானே? இறந்தகாலமென்பது புனையப்படுவதே. பகற்கனவுகளில் ஒவ்வொருவரும் புனைவதை பாடகரும் நூலோரும் சேர்ந்து பின்னி ஒன்றாக்குகிறார்கள்.    
 
எதிர்காலத்தை கணிக்க  என்னதான் நடக்கும் என தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர் . ஆனாலும் எதிர்காலத்தை எவராவது நான் கணித்துச் சொல்வேன் என்று சொன்னால் அதை நாம் ஏமாற்றுவேளை என்று சொல்கிறோம். ஆனால்  இறந்தகாலத்தைப்பற்றி மனிதன் தனக்கு தெரியும் என்ற நினைப்பில் இருக்கிறான். ஆனால் அவன் புழங்கிவந்த இறந்தகாலம்தான்  மனிதனுக்கு அதிக மர்மங்களைத்தருகிறது. நேற்று வைத்த ஒரு சாவியை இன்று காணாமல்  தேடிக்கொண்டிருக்கிறோம்., அதன் இருப்பு இறந்த காலத்தால் மறைக்கப்பட்டிருக்கிறது. நேற்று  கொடுங்குற்றத்தை செய்த ஒருவன் யார் எனத் தெரியாது காவலர்கள் தேடுகின்றனர். அந்தக் குற்றவாளி ஒளிந்திருப்பது இறந்தகாலத்தில் இருளுக்கு பின்னால்.  ஒரு எளிய செய்தியான  நான் நேற்று இந்த உணவை சாப்பிட்டேன் என்பதை இன்று ஒருவருக்கு என்னால்  நிரூபிக்க முடியும் என்று யார் உறுதிகூறமுடியும்.  உண்மைகளின் நம்பக்த்தன்மையை இறந்த காலம் தேய்த்து அழிக்கிறது. உண்மைகள் பொய்கள் அனைத்தும் அதில் குழம்பிகிடக்கின்றன.  காலம் நிகழ்வுகளை பேரருவியென ஒருவனின் சல்லடை போல் ஓட்டைகள் நிறைந்த நினைவெனும் ஓட்டைக்ஜள் நிறைந்த கூடையில் கொட்டுகிறது. அவன் நினைவு நீண்டகாலம் தேக்கிக் வைத்துக்கொள்வது அவன் மிக விரும்பிய அல்லது மிக வெறுத்த சில நிகழ்களைமட்டுமே .  அவையும் சிறிதுகாலம் போன பின் அவனுடைய எண்ணங்கள் விழைவுகள் எதிர்பார்ப்புகளால் திரிந்து போய் வேறு வடிவம்கொண்டு நிற்கிறன்.  வெறும் எலும்புக்கூடென எஞ்சும் சில உண்மைகளின் மேல் தன் கற்பனையால்,  தோல்உடுத்தி  வண்ணம் பூசி வரலாறுகள் சமைக்கப்படுகின்றன.
_______________________________________

மனதில் மணக்குமா  மலரின் வாசம்?

குஸ்மிதன் கூறுகிறான்:

காட்சிகளை நினைவுகூரலாம். ஒலிகளை மேலும் குறைவாக நினைவுகூரலாம். தொடுகையை இன்னும் மெலிதாக. சுவையை அதனினும் சிறிதாக. மாமல்லரே, எவரேனும் மணத்தை நினைவுகூர முடியுமா?” என்றான் முண்டன். “மணத்தை அடையாளம் காணமட்டுமே முடியும். விழியும் நாவும் இணைந்து அளிக்கும் அகப்பதிவுக்கேற்ப மணம் உருவாவதை அறிந்திருக்கிறீர்களா? முல்லைமணம் கொண்ட தாமரையை உங்கள் கையில் அளித்தால் என்ன மணத்தை முகர்வீர்கள் என்று தெரியுமா?”
 
  முன்னர் நடந்த ஒரு காட்சியை திரும்ப நாம் நினைத்துப்பார்க்கலாம்.  அப்போது அதேகாட்சி நம்மால் ஓரளவுக்கு  நம் அகத்தில் காணமுடியும். அப்படியே ஒரு சுவையை நினைத்துப்பார்க்க முடியும். புளிப்பான சுவையை நினைக்கையில் நம் பல் கூசுவதும் உண்டு. ஆனால் ஒரு மணத்தை நினைவில் கொண்டு மீண்டும் அனுபவிக்க முடியுமா?  இப்போது வீசும் மணம் இன்ன மணம் என்று அடையாளம் காணலாம்,  கண்மூடி ஒரு வாசனையை கற்பனையில் அனுபவிக்க முடியாது என்று இங்கு  கூறப்படுகிறது. இது அனைவருக்கும் முழுக்கப் பொருந்துமா என எனக்குத் தெரியவில்லை. நான் முயன்றுபார்க்கையில் பூக்களின் மணத்தை நினைவு கூறமுடிவதைப்போல்தான் எனக்கு தெரிகிறது.  
______________________________________________________

அடையாப் பொருள் அடையும் பொருண்மை
 
குஸ்மிதன் கூறுகிறான்:

   “காற்றில் திரண்டு கைக்குள் எழுந்துள்ளது. சூழ்ந்துள்ள காற்றில் அருவமாக இருப்பது போலும். விழைவு முதிர்கையில் திரண்டு உருக்கொள்கிறது போலும்… எத்தனை பெரிது…! ஆம், பெரிதாக மட்டுமே இருக்கமுடியும். கரந்திருப்பவை அறியாது வளரும் வல்லமை கொண்டவை அல்லவா?”

   ஒரு விழைவு அதுவும் நிறைவேறாத விழைவு ஒருவன் மனதில் பேரூக்கொண்டு வளர்கிறது. அது நிறைவேறாமையாலேயே அது உடைக்க முடியாத பெரும் பாறையென ஆகிறது. நிறைவேறிய  விழைவுகள் கனம் குன்றிபோகின்றன். எத்தனை பெரிய விழைவாகத்  தெரிந்திருந்தாலும் நிறைவேறுகையில் அவ்விழைவு சிறுத்துப்போகிறது. கையில் இருக்கும் பொருளில் கவனம் சிதறுகிறது. கிடைக்காதபொருள் நம்மை கவர்திழுத்தபடி இருக்கிறது.  வசப்பட்ட பொருள் கசக்கத்தொடங்குகிறாது. வசப்படாததன் இனிப்பை மனம் ஊதிப்பெருக்குகிறது.   தெரிந்திருப்பதன் கனம் தேய்ந்து போகிறது.  மறைந்திருப்பதன் பொருண்மை வளர்ந்தபடி இருக்கிறது.
____________________________________________

வெட்டத் தூண்டும் வாள் 

குஸ்மிதன் கூறுகிறான்:

கூர்கொண்டவை அனைத்தும் குருதிசூட விழைகின்றன. வலிமை கொண்டவை வெற்றியை வேண்டித் தவிக்கின்றன. தனிமையில் சலிக்கிறாள். எங்கு தொடங்குகிறது சலிப்பு? எங்கு எழுகிறது விருப்பு? சலிப்பென்பதே அடித்தளம். எழுச்சிகளெல்லாம் விழுந்தமைந்தாகவேண்டும் அதில்.
 
  ஒருவன் அடையும் திறன், அறிவு அவனை அதற்கான செயலில் தூண்டுகிறது. அவன் கையில் இருக்கும் கருவி அவனைத் தன் கருவியென ஆக்குகிறது. கையில் கத்தி வைத்திருப்பவன் கையில் கிடைப்பதை வெட்டிப்பார்க்க நினக்கிறான். விளையாட என வாங்கிய கவண்கல் எவ்வித நோக்கமும் இன்றி ஒரு பறவையை அடித்து வீழ்த்த அவனைத் தூண்டுகிறது.  போர்த்தளவாடங்களை அதிகம் கொண்ட நாடு போருக்கான காரணங்களை தேடி அலைகிறது.     ஒருவனின் அறிவுத்திறன் மற்றவர்களை தர்க்கத்துக்கு அழைக்கிறது. திறன்கொண்டவன் தன் திறனை பயன்படுத்தமுடியாதபோது,  ஊக்கம்கொண்டவன் செய்வதற்கு ஒன்றுமில்லாதிருக்கும்போது,  ஆய்தம் கொண்டவன் அதை பயன்படுத்த இயலாதபோது சலிப்பை அடைகிறான். அச்சலிப்பை போக்கிகொள்வதற்கு என ஒரு விருப்பை ஏற்படுத்திக்கொள்கிறான். உலகின் அனைத்து எழுச்சிக்கும் பின்னும் திறனும் ஊக்கமும் கொண்ட மனிதர்களின் சலிப்பே  இருக்கிறது என்பது உண்மையல்லவா?

__________________________________________
அலுப்பூட்டும் அடைந்த காதல் 

குஸ்மிதன் கூறூகிறான்:

பெண்வலனை பெண்விழைகிறாள். அவனை முற்றிலும் வெல்ல கனவுகாண்கிறாள். முயன்று முயன்று தோற்கிறாள். வெல்லப்பட்ட பெண்வலன் வெறும் சருகு. வெல்லப்படாதவனோ புற்றுறை நாகம்.”
 
  மேற்கூறிய கூற்று இரு பாலருக்கும் பொருந்தும்.    காதலில் அடையும் வெற்றியே காதலை பாதிக்கிறது என்பது வியப்பாக இருந்தாலும் உண்மைதான். காதலின் வெற்றியை நாடி  வேகவேகமாக ஓடியவர்கள் அந்த வெற்றிக்குப்பின் ஒரு தளர்ச்சியை அடைகிறார்கள் என்பதைக் காண்கிறோம். அப்போது சட்டென்று தன் காதல் இணையின் கவர்ச்சி குறைந்துபோவதாய் உணர்கிறார்கள். ஓயாமல் பேசிக்கொண்டு ஒவ்வொரு சொல்லையும் அமுதமாய் கருதி சிந்தையில் ஏந்திக்கொண்டவர்கள் இப்போது குறைந்த சொல்லே போதுமானதாக இருப்பதாக உணர்கிறார்கள். அந்தச் சொற்கள் கூட சலிப்பூட்டுவதாக மாறுகிறது. காதலின் காரணமாக தன்னை முழுக்க   அர்ப்பணித்துக்கொண்டவரிடம் இன்னும்  பெறுவதற்கு ஏதும்  இல்லையே என குறைபட்டுக்கொள்கிறார்கள். ஏனென்றால் மனிதர்கள் இன்னும் இன்னும் என கேட்டுக்கொண்டே இருப்பவர்கள். அவர்களை எவ்வளவுதான் இன்பத்தால்,  காதலால்,  இன்செயல்களால் நிறைத்தாலும் இன்னும் இல்லையா என்று தன் காதல் இணையின்  கைப்பையை எட்டிப்பார்ப்பவர்கள்.  ஆகவே ஒருவர் தன் துணைக்கு  கொடுப்பதற்கு என புதிதாக எதையாவது எப்போதும் வைத்திருக்கவேண்டியிருக்கிறது. 

-------------------------------------------------------------------------------------------
உள்ளதில் கனக்கும் பாறை
 
குஸ்மிதன் கூறுகிறான்:

“வெறும்பாறை. மலைப்பாறையை நோக்குந்தோறும் மலைக்கிறது மானுட உள்ளம். அதன் வடிவின்மையும் அமைதியும் நம்முள் உறையும் எதையோ கொந்தளிக்கச் செய்கின்றன. 

“உள்நுழையமுடியாத மண்டபமா கரும்பாறை? மழையோ வெயிலோ மணலோ சருகோ அதன்மேல் நிலைப்பதில்லை. எதையும் சூடாது எதுவுமென ஆகாது இங்கு நின்றிருக்கும் பெரும்பொருளின்மை அது.”
  
ஒரு பாறை எப்போதும் மனிதனை உறுத்துகிறது. மனிதன் உரு மாறுபவன் அவன் உடல் வளர்ந்து தளர்ந்து தேய்ந்து அழிகிறது. அவன் திறன்கள் வளர்ந்து குறைந்து அர்த்தமிழந்துபோகின்றன. அவன் காணும் நதி பெருகியோடுகிறது பின்னர் குறைந்து மெலிந்து ஓடுகிறது. காற்று குறைந்தும் மிகுந்தும் வீசுகிறது. கடல் கூட தன் மட்டத்தை உயர்த்தி  தாழ்த்தி நிலைமாறுகிறது. ஆனால் ஒரு பாறை ஒரு மனிதனின் பார்வையில் அசையாது அழியாது இருந்தபடி அப்படியே உள்ளது. அதன் நிலைத்தன்மை, அழிவின்மை, அதன் உறுதி, சலனமின்மை  தன்னை வெளிக்காட்டாமை போன்ற அதன்  குணங்களை அவன் வேறெங்கும் கண்டதில்லை. அவனுடைய ஆயுளுக்கு அவை அழிவின்மை கொண்டைவையாக இருக்கின்றன.  ஒன்றுக்குள் எப்போதும்  வேறொன்று இருக்கும். வெளியில் இருப்பதற்கு உள்ளிருப்பதற்கும் ஏதாவது வண்ணத்தில் திண்மையில் ஏதாவது வேறூபாடு இருக்கும். 
 
ஆனால் பாறைக்குள் இருப்பது பாறை மட்டுமே. உள்ளும் வெளியும் ஒன்றேயானது  பாறை. பாறையை தெய்வமென வழிபடுகிறார்கள், பாறைமேல் கால் வைத்தும்  ஏறுகிறார்கள், பாறையின் பின்னே ஒளிந்துகொண்டு தப்பிக்கிறார்கள். பாறையை உருட்டிவிட்டு இன்னொருவரை கொல்ல முயல்கிறார்கள். இச்செயல்கள் அனைத்திலும் பாறை இருந்தாலும் அந்தச் செயல்களுக்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பீமன் ஒரு பாறைபோல பாண்டவர்களில் ஒருவனென இருக்கிறான்.  ஒரு செயல் அவன் பால் திணிக்கப்பட்டாலன்றி அச்செயலில் இறங்குவதில்லை. இறங்கிய பிறகு  
 
 அவன் அதை எவ்வித மனச்சங்கடமுமின்றி செய்து முடிக்கிறான்.  அவன் போரிடுவதுகூட ஒரு பாறை உருண்டோடுகையில் சிற்றுயிர்களை அழிப்பதைப்போல் இருக்கிறது. எப்படி அந்தச் சிற்றுயிர்கள் அழிவதற்கு  பாறை காணமில்லை அதை உருட்டிவிட்டவன்தான் காரணமோ அப்படியே பீமனின் செயல்களில் இருந்து விடுபட்டவனாகிறான். அதன் காரணமாக அவன் போரிடுகையில் அல்லது தண்டனையளிக்கையில்  எவ்வித மனச்சங்கடத்திற்கு ஆளாகதவனாக இருக்கிறான். இவ்வாறு  குஸ்மிதன்  அவனை பாறையுடன் ஒப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது..

குரு,நெல்லி

[வரைபடத்தில் பாஞ்சாலத்தின் அருகே உள்ளது தட்சிண குரு நாடு]
 
ஜெ,

1. குரு என்பவன் புரூரவஸுக்குப் பின் எப்போதோ வரப்போகிறவன். அப்படியிருக்க புரூரவஸின் நகரம் குருநகரி எனப்படுவது எவ்விதம்?

2. பொறுமையின் நெல்லிப்பலகை என்பது என்ன?

சீனிவாசன்


குருநகரிவேறு குரு அரசரின்  குலமரபு வேறு
குருநகர் இன்றைய உத்தர்கண்டில் இருந்த ஒரு பழைய ஜனபதம். பின்னர் இது குருநாடு என்றும் உத்தர தட்சிண குருநாடு என்றும் அழைக்கப்பட்டது
சுனையில் நீர் இனிப்பதற்காக நெல்லிப்பலகை போடப்படும். நீர் வற்றும்போது அப்பலகை தெரியும். ஓர் உவகை தௌ

ஜெ
 

Friday, February 24, 2017

இருவர்




ஜெ

வெண்முரசில் இதுவரை ஏராளமான கதாபாத்திரங்கள் வந்துவிட்டன. ஆனாலும் மூதரசரும் அரசியும் இதுவரை வராத அபூர்வமான கதாபாத்திரங்கள். கொஞ்சம் கர்ணனின் அம்மா அப்பா சாயல் உள்ளது. மற்றபடி மிக அபூர்வமானவர்கள். கிழவர் உணர்ச்சிக்கொந்தளிப்பானவராகவும் பாவமானவராகவும் இருக்கிறார். கிழவி ஆழமானவள். நுட்பமானவள். அறிவானவள். கிழவருக்கு நிலையான மனநிலை இல்லை கிழவி எப்போதுமே சமநிலையில் இருக்கிறார். இரண்டு பேரும் இரண்டுவகையில் துக்கத்தை எதிர்கொள்கிறார்கள். இப்போது இன்பத்தை எதிர்கொள்கிறார்கள். இவர்க்ளுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என மனம் வேண்டிக்கொள்கிறது

மகேஷ் ஜெயராமன்

உயிர்த்தெழுதல்



ஜெ

புரூரவஸ் உயிர்த்தெழுந்தபின்னர் அடையும் மாற்றம் ஆச்சரியமூட்டியது. ஒருவகையில் அதிர்ச்சி அளித்தது. ஆனால் பின்னர் யோசித்தபோது முன்னரே அது கதையில் சொல்லப்பட்டுவிட்டது என்று தெரிந்தது. ஒரு சாபமாக இந்த ஸ்கீமா வந்துவிட்டது. இது மானுட இயல்பு. ஆனால் மகாபாரதத்திற்கு இதைச்சொல்ல இந்தவகையான ஒரு டெம்ப்ளேட் கைவந்துள்ளது.

எலாமே உச்சம்தான். புரூரவஸின் துக்கம், சாவு, உயிர்த்தெழுவது எல்லாமே. அவரைச்சுற்றி உருவாகி வந்திருக்கும் கதாபாத்திரங்களும் ஒரு தனிநாவலுக்குரிய கூர்மையான குணாதிசயங்களுடன் உள்ளனர். அயுஸ் மூதரர் மூதரசி எல்லாருமே தனித்தன்மை கொண்ட கதாபாத்திரங்களாக இயல்பகா உருவாகி வந்துள்ளனர். கிரியேட்டிவாக வரும்போதுள்ள ஒரு சரியான ஒழுங்கு உள்ளது

சண்முகம்

மாமலர் – ஊர்வசியின் ஆடுகள்



தான் அறிந்தவற்றையும், அறிந்தவற்றின் ஊடாகத் தன்னுள் நுழைந்தவற்றையும் இரு ஆடுகளாகத் தன்னுடன் அழைத்து வருகிறாள் ஊர்வசி. இரு ஆடுகளுக்கும் ஸ்ருதன், ஸ்மிருதன் என பெயர். மேலும் ஸ்ருதன் வெண்ணிற ஆடாகவும், ஸ்மிருதன் கரு நிற ஆடாகவும் இருக்கிறது. சுரேஷ் பிரதிப் கூறியது போல இவ்விரு ஆடுகளையும் சுருதி, ஸ்மிருதி என்பனவற்றின் உருவகங்களாகப் பார்க்கலாம். மற்றொரு வகையில் இவ்விரு ஆடுகளையும் சகதேவன் மற்றும் நகுலனாகப் பார்க்கலாம். இக்கதைகளை வாசிக்கையில் நாம் ஒன்று நினைவு கொள்ள வேண்டும். இக்கதைகளில் பீமனின் உள்ளம் ஒரு முக்கியமான பாத்திரம். எனவே அவன் பார்வையில் இந்த கதாபாத்திரங்களை யாராகக் காண்கிறான் என்பதும் முக்கியம். ஊர்வசியில் அவன் தேடுவது திரௌபதியையே. இவ்வாறு பார்க்கையில் அவ்விரு ஆடுகளும் முக்கியமானவை ஆகின்றன.

திரௌபதி தன் ஐந்து கணவர்களுடனும் கொண்டிருக்கும் உறவு எத்தகையது என்பதை வெண்முகில் நகரத்தில் மிக விரிவாக தந்துள்ளார் ஜெ. தருமனுடனான அவள் உறவு அறிவு சார்ந்தது. அவளது அறிவுத் துணைவனாக அமைகிறார் தருமர். அவளது காதல் மற்றும் காமத்துணைவனாக அமைகிறான் அர்ச்சுனன். முதலில் ஒரு வித மீறல் சார்ந்த உறவாகவே அவர்கள் உறவு துவங்கியதையும், மெல்ல மெல்ல அது மாறி வருவதையும் பற்றிய சித்திரங்கள் காண்டீபத்திலும், தற்போது அவளின் கூற்றாகவே மாமலரிலும் வந்து விட்டன. அவளின் மனதுக்கிணைந்த தோழனாக வாய்ப்பது நகுலன். வெண்முகில் நகரில் ஒரு வித விளையாட்டு கலந்ததாக, தோழமையின் வெளிப்பாடாக அமைந்திருக்கும் அவர்களது முதல் உறவு. அவள் உள்ளத்தில் புகுந்து புறப்பட இயன்றவன் நகுலனே. மாமலரில் அர்ச்சுனன் வந்தவுடன் அவன் கையைப் பற்றிக் கொள்வதைப் பற்றிய ஒரு சிறு உரையாடல் நகுலனுக்கும், திரௌபதிக்கும் நிகழும். மேலும் சைந்தவனால் தேரிலிருந்து தள்ளி விடப்பட்டவளை அணைத்துச் செல்வதும் அவன் தான். சகதேவனிடம் ஓர் அன்னை போல அவள் இருக்கிறாள். அவனிடம் தன் நோவுகளைப் பகிர்ந்து கொள்ள அவளால் இயல்கிறது. ஒரு இளமைந்தனுடன் அன்னை சமையலில் ஈடுபட்டிருக்கும் தோற்றமே அவள் அடுமனையில் சகதேவனின் உதவியோடு சமைக்கும் காட்சி எனக்குப் பட்டது. சைந்தவனால் கவரப்பட்டதன் இழிவை, அது அவளுக்குத் தந்த வலியை அவள் சகதேவனிடமே பகிர்கிறாள். மிகச் சரியாக ‘ஒன்றுமில்லை அன்னையே’ எனத் தான் அவனும் அவளைத் தேற்றுகிறான்.

அப்படியென்றால் பீமனுடனான அவள் உறவு? அது ஒரு அணுக்கச் சேவகனிடம் கொள்ளும் உறவு. திருதாவுக்கு ஒரு விப்ரர் போல, விசித்திர வீரியனுக்கு ஒரு ஸ்தானிகர் போல, சத்யவதிக்கு ஒரு சியாமை போல. முதன் முதலில் திரௌபதியைச் சந்திக்கும் பீமன் அவள் இருக்கும் தேரை இழுத்துச் செல்கிறான், பிராயாகையில். அவர்களின் முதலிரவில் அவன் அவளுக்கு நீச்சல் கற்றுத் தருகிறான், வெண்முகில் நகரத்தில். (அதில் வரும் நீரூசி என்ற உவமை என்னை பித்துக் கொள்ள வைப்பது...) இப்போதும் அவள் உறவின் பாதை இது தான்.

இப்படி இருக்கையில் அவன் ஏன் அந்த மணத்தைத் தரும் மாமலரை நோக்கிய பயணத்தைச் செய்ய வேண்டும்? அவனுக்கு அறிதல் என்பதன் எந்த தேவையும் இருந்ததில்லை. பிற இருவரின் எந்த தேடலும் அவனுக்கு இல்லை. இருப்பினும் அவன் கிளம்புகிறான். ஏன்? ஏனென்றால் அணுக்கர்கள் தங்கள் அணுக்கத்தின் காரணமாகவே எஜமானர்களைப் போல ஆவது வெண்முரசு முழுவதும் காணக் கிடைப்பது. இங்கே சேவகன் அன்னையாகவே ஆகும் ஒரு பயணமே இது. பிற இருவரும் பல அலைகழிப்புகளுக்குப் பிறகு இறந்து பிறக்கிறார்கள். மாறாக இவன் பயணத்தின் துவக்கத்திலேயே நீர் விட்டு மூதன்னையர் முன் இறந்து பிறக்கிறான். பிற இருவரும் தத்தமது பயணங்களின் விளைவுகளில் ஒன்றாக அவற்றின் இறுதியில் அடைந்த வஞ்சத்தை விடும் மனப்பக்குவத்தை முதலியேயே அடைந்தும் விடுகிறான். இதன் பிறகே அவன் கதைகளைக் கேட்கிறான். அவன் அறிவது அன்னையரையே. அவர்களின் கனிவும், அக்கனிவுக்கு பகைப்புலத்தில் இருக்கும் வஞ்சத்தையும் அறிகிறான். அறிந்து ஆகும் ஒரு தருணத்தில் அந்த மாமலரையும், அதன் மணத்தையும் ஒருங்கே அடைவான்.

இந்த புரிதலில் வைத்து நோக்குகையில் பீமனின் ஊர்வசி இரு ஆடுகளுடன் மட்டுமே இருப்பது தனித்த பொருள் கொள்ள வைப்பது. அதாவது அவனும், அவளுமான உறவுலகில் இந்த இருவர் மட்டுமே வருகின்றனர். அவனுக்கு சகாதேவனுடனும், நகுலடனும் அவளது உறவு ஒரு சிறு புருவ நெரிப்பை மட்டுமே ஏற்படுத்தக்கூடிய உறவு தான். இருப்பினும் அவன் யார் என்பதற்கான நினைவூட்டலும் கூட. மற்ற இருவரும் அவன் உலகிலேயே இல்லை. 

அருணாச்சலம் மகராஜன்

லிங்கர்



JM Sir,

நேற்று, லிங்கப் பிரதிஷ்டையின் போது சத்குரு பேசியது. இதனைப் படித்தவுடன், தாங்கள் எழுதியது ( கிராதம்) தான்  நினைவில் எழுந்தது.

"கிராதம் நான்காம் அத்தியாயத்தில், அத்ரி முனிவரின் சௌகந்திகக் காட்டிற்க்கு கங்காளன் வருகிறார்.
வெரும் இருப்பாலேயே அங்குள்ள அனைத்தையும் புரட்டிப் போடுகிறார்.
அத்ரி அங்கு முனிவரால் கிராதசிவம் நிறுவப்படுகிறது.

அவ்வாறே இங்கும்..

One day Adiyogi is simply walking, totally intoxicated – not on any drink or drug, because he is the drug. Completely inebriated, devoid of any clothing, in naked splendour, with a garland of wildflowers he is simply walking through the forest, like any other creature. You don’t look at a tiger and think “Oh my god, he is naked!” You thought he is wearing striped pajamas or something?He is simply walking like any other life.
Then he happened to walk into a place where a certain scholarly group has built a small habitation, doing something like a side-track spirituality: reading scriptures, doing mantras, etc. A very chaste and orderly group of people.

This wild man just walks in completely unconscious of what’s around him, because he is too engross d with what’s within him. He walks in – the men were all doing their sacred duties, the women were doing their house work.The women saw this creature – just the splendour of his existence. They looked at him, and that was the end of their civilization. They lost all of what they had taught. From age 8-18, everyone gathered around him and was just going into pangs of ecstasy – some trying to touch him, just to taste and see what he is. Some were climbing his tree-trunk like body. But he is simply unaware, completely unconscious of what they are doing. The entire womenfolk gathered around him. The men came and saw there is something to the man, but their main concern is the society, ethics they have formed. The civilization stones looked like they all crumbled at once. This is not just one woman falling in love – the entire women of the place.

The men came to Adiyogi and said, “We have heard of you, but you cannot just walk in. This is not ok, you are dismantling everything we have built. You have put the entire civilization in danger. But still he was so intoxicated that he did not notice.Then one man pulls out a sword and pokes him. Only then Adiyogi looks around, sees all these women, begins to hear them saying how he is a threat to civilization and family structure.
Adiyogi just shrugged, “What’s the problem?” They said, “Don’t you know you’re naked?” Then the sword that the man had used, this sword, he took it and lopped off his own genitals – if this is the problem, then take it. He left it there and walked off.
His genitals stayed there and became a shaft of light – this is known as Kashi..
What this parable is trying to tell you is that, whatever one thinks of as the lowest, even that can be transformed into the highest. He could have used his finger, his head, but he used something that you are looking down upon. The story is also trying to tell you that pleasure and ecstasy is not only in one part of the body.
If you are poor, you have only one meal a day. If you are rich you can choose. The idea of richness, affluence is to have a choice of food, then later on a choice of lifestyles. If you are very poor, money means food. I can eat anything I want. So pleasure means particular part of body.
What Shiva is trying to display is, every cell in the body is ecstasy. This is not sexuality, this is spirituality. Wherever they touch him, they are all going into wild ecstasies. This dimension where just a look or a touch can send you to nameless ecstasies – on one level we have enshrined that dimension into the Yogeshwar Linga. There is a certain way to access this. You must come some day and find that.
There are 2 dimensions – one is of extreme discipline. One is of absolute abandon. One brings painful precision. Another brings nameless ecstasies.


அன்புடன்,
மகேஷ்.

அறிய அரிது




அன்புள்ள ஜெ வணக்கம்.

மாமலர் நாவல் பெயருக்கு ஏற்றார்போல மென்மையாக இருக்கிறது. ஆனால் மாமலர்போல அறியொன்னா அரிதாகவும் இருக்கிறது. மலர் இதழ்போல வண்ண வண்ண கதைகள்.  இதழ்களின் உள்ளே உள்ளே அறியாவெளியில் அதன் வாசம். வழி சுவடின்றி வந்த வெளியெங்கும் நிறைந்து நின்று மூழ்கடிக்கிறது. நன்றி.

உலகம் வேறு வடிவத்தில் இருக்கிறது, காண்பது கேட்பது சொல்வது முகர்வது ஊறுவது என்று உலகம் வாழ்க்கையை தனக்கு தகுந்தமாதரி   அறிந்து வைத்திருக்கிறது. இந்த ஐந்து எல்லைக்குள் வட்டத்திற்குள் அடங்காத எதுவும் உலகத்தில் வாழ்க்கை இல்லை.

சிலர் வட்டத்தில் இருந்து தாண்டி, வட்டத்தில் அடங்காத ஒரு வாழ்க்கையை அறிந்து அதை வாழ்ந்துப்பார்க்கிறார்கள். அந்த வாழ்க்கைக்காக தன்னையே பலிக்கொடுக்கிறார்கள். புருரவஸ் வட்டம்தாண்டிய வாழ்க்கை வாழ்கின்றான். அவன் விழி அல்லது விதி அவனை அப்படி செய்யவைத்துவிட்டது.  

கிருபானந்தசுவாமிகள் “அகிம்சை ஹிம்சை“ வேற்றுமை என்ன? என்பதற்கு நகைச்சுவையாக சொன்னப்பதில் “ஆடுவெட்டும்போது நாக்கில் தண்ணிவந்தால் ஹிம்சை, கண்ணில் தண்ணிவந்தால் அகிம்சை“

ஒரு உயிர் வதைப்படும்போது அதை உணரும் சிலருக்கு தன்உயிர்வதைப்படும் உணர்வு ஏற்படுகிறது அதனால் அவர்கள் உயிர் கண்கள்வழியாக கண்ணீராக வழிகிறது. அதுவே ஒரு உயிர்வதைப்படும்போது சிலர் உடல் குதுகலம் அடைகிறது அதனால் நாவில் எச்சில் ஊறுகின்றது. புருரவஸ் குளக்கரையில் அமர்ந்திருக்கும்போது குளத்தில் துள்ளி விளையாடும் மீனை கவ்வி மரக்கிளையில் வைத்து கண்ணில் கொத்தித்திண்ணும் கொக்கை புருரவஸ் பார்க்கும்போது அந்த மீனின் உயிராக தன்னுயிரைப்பார்க்கிறான். இதுவே ஒரு மாறாக புருரவஸ் அந்த கொக்காக தன்னை நினைத்தால் எப்படி இருக்கும்? மனித மனம் எளிதாக எளிய உயிர்களின் மீது படிந்துவிடுகின்றது. வலிய உயிர்களை எதிரியாகப்பார்க்கிறது. பெரிய உயிர்கள் உடலாகத்தெரிகின்றன. சிறிய உயிர்கள் உயிராகத்தெரிகின்றன. யானையின் மீது பாறை ஏற்றப்படும்போது மகிழும் மனம், பூனைமீது கல்லெறியும்போது பதறுகின்றது. யானையின் உயிருக்கும் பூனையின் உயிருக்கும் என்ன வேற்றுமை. உடல்தான் வேற்றுமை. 

ஒரு உயிர் தன்னை எதுவாக வைத்துப்பார்க்கிறது என்பதில் உள்ளது வாழ்க்கையின் வடிவம். தன்னை கொக்காக வைத்துப்பார்த்தாலும் மீனாக வைத்துப்பார்த்தாலும் அறம் ஒன்றுதான். மீன் கொக்கிற்கு உணவாகின்றது. கொக்கு முதலைக்கு உணவாகின்றது. முதலை புழுவுக்கு உணவாகின்றது. அறம் உடலோடு பிணைக்கப்படவில்லை மாறாக என்றும் நிலைநிற்கும் உயிரோடு பிணைக்கப்பட்டு உள்ளது. உலகம் உடலோடு தனது பார்வையை நிறுத்திக்கொள்ள அறம் அறிந்தவன் உடலைத்தாண்டி .உலகைப்பார்க்கிறான். புருரவஸுக்கு அந்தப்பார்வை குருவழியாகக்கிடைக்கிறது.

புருரவஸ் உலகம் உலகத்தைப்பார்ப்பதுபோல் பார்க்காமல் அதன் எல்லைக்குள் நின்றுப்பார்க்காமல் எல்லைத்தாண்டிப்பார்க்கிறான். அந்தப் பார்வை அவனை அறத்தான் ஆக்குகின்றது. எல்லைத்தாண்டிப்பார்க்கும் அறத்தான் அவனுக்கு விண்மகள் ஊர்வசி சியாமையாக வந்துக்கிடக்கிறாள்.

அறத்தான் உலகின்  எல்லையில்  இருந்து  வெளியேறுவதால் முதலில் உலகை அஞ்சுகிறான் உலகமே அவனுக்கு பெரும் அஞ்சம்தரும் களமாக இருக்கிறது. அவனை பதறவைக்கிறது. நல்குருவால் அவன் உலகை எப்படிப்பார்க்கவேண்டும் என்று அறியும்போது உலகம் புதிய நீர்சுனையாகிவிடகிறது அங்கு இருக்கும் மீனும் பூவும் ஒளியும் பழையதுதான் என்றாலும் அனைத்தும் புதியதாகிவிடுகின்றன.

அறத்தான் காணும் புதிய உலகத்தில் வந்து சேரும் சியாமை என்னும் கறும்பசுமை காட்டுவண்ணத்தவளும்   அவன் உலகை புதுப்புது பூ கனி வண்ணங்களாகவே செய்கிறாள். இந்த இன்பம் நீள்நாள் அல்ல அது ஒரு கனவு என்று ஆகும். அந்த கனவு கலையும்போது அறம் மீண்டும் நோயில் விழும்.

அறத்தான் அறம் அறியும் முன் உலகைக்கண்டு அஞ்சுகின்றான். அறத்தான் நோய் உரும்போது உலகம் அவனைக்கண்டு முகம் சுளிக்கிறது. அவனின் அழுகல் நாற்றமே உலகுக்கு தெரிகிறது. அவனை ஒரு அழுகலாகவே உலகம் பார்க்கிறது. உலகத்தின் வெள்ளைத்துணியில் கறையாக கிடக்கும் அழுகல் என்று உலகம் நினைக்கிறது. அனைத்துவகை நறுமணத்தையும் மிஞ்சி எழும் கொடும்மணமாகப்பார்க்கிறது  அறம் சாகட்டும் என்று காலம் பார்க்கிறது. மருத்துவம் நினைக்கிறது அறத்தான் வழியாக அறம் சாவதில் . உலகுக்கு  எந்த இழப்பும் இல்லை மாறாக ஒரு மகிழ்ச்சியே உலகுக்கு உள்ளது. காரணம் அறம் உலகின் பார்வையில் ஒரு நாற்றம் மட்டுமே. 

அறத்தான் வழியாக அறம் தனது இன்பத்துணையை விண்ணேறவிட்டுவிட்டு  ஐந்து மகன்கள் வளரும் வேதத்தை அரசாட்சியை குருநிலையை இல்லத்தை மறந்து மக்கி அழுகும்போது அறத்தின் அழுகல் தன்மையை மட்டும் அறிந்து அதன் மேன்மை அறியா மக்கள்  அறம் இறந்தபோதுதான் அதன் புகழ் வாழ்க என்று கூவுவார்கள். நாற்றத்தை தாண்டி நலம் அறியா உலகம் எங்கு உள்ளது?.

ஊர்கூடி சுற்றம்கூடி பெற்றபிள்ளையும் தூக்கிச்சென்று எரியவைத்தாலும் அறம் பிழைக்கும். இன்பம் மட்டும் இல்லை அறம் என்று அறம் கண்டுக்கொள்ளும்.

அறம் இந்த உலகத்தை பார்க்கும் பார்வை மாறும்போது இந்த உலகமே ஒரு புது உலகம். அறம் தனது இன்பத்தை துறந்து நாறி மக்கும்போதும் இறக்காமல் மீண்டு எழும். மீண்டும் அது உலகுக்கு கருணையாக மட்டும் காட்சிக்கொடுக்கும். 

மக்கள் வாழும் உலகில் எதற்கு எடுத்தாலும கொலை. நிமித்திகனையும் மருத்துவனையம் அவர்கள் தெய்வம் என்பார்கள் நிமிதி்கமும் மருத்துவமும் பிழைக்கும்போது அதை கற்றவனை கொல்வார்கள். உலகில் ஒவ்வொரு செயலும் பிழைக்கும்போது செயலை அங்கேயே விட்டுவிட்டு செயல் செய்தவனை உலகம் கொன்றுவிடும். செயல் அங்கேயே நிற்கும். அறம் அழுகினாலும் அறம் வாழும் உலகில் கொலைகள் இல்லை. அறம் செயலைப்பார்க்கிறது அதன் தவறு என்ன என்பதை களைய முயல்கிறது அது செயலின் கருவியாகிய உயிரை காக்கிறது. 

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

Thursday, February 23, 2017

மகத்தானவை



ஜெ
நெடுங்காலத்திற்குப்பின் வெண்முரசு வாசிப்பத்ற்கு மிகவேகமாகச் செல்கிறது. அடுத்தது என்ன என்ற ஆவலைத்தூண்டும் வகையாக உள்ளது. மகாபாரதக்கதை அறிந்ததுதான். ஆனால் புரூரவஸ் கதைக்கு நீங்கள் அளிக்கும் திருப்பங்க்ளும் வளர்ச்சிகளும் அபாரமானவை. அவை வெண்முரசைன் கொடை என்ற் சொல்ல்லாம். இன்று வந்துகொண்டிருக்கும் பகுதிகள் வெண்முரசின் உணர்ச்சிகரமான பகுதிகள்.

புரூரவஸ் தேவமங்கையை மணந்தான் துன்புற்றான் என்பது கதை. அது இன்பத்தின் உச்சியும் துன்பத்தின் உச்சியுமாக ஒரே சமயம் இருக்கும் ஒரு நிலை என வாசித்தபோது தோன்றியது. ஒரு சாமானிய மனிதன் இந்த உச்சநிலைகளுக்கெல்லாம் சென்று மீள்வது மிகமிகக்கடினமானது. ஆனால் ஆயிரத்தில் ஒருவருக்கு இத்தகைய உறவும் பிரிவும் அமைகிறது. மகத்தான உறவுகள் மகத்தான பிரிவுக்ளாகத்தான் முடியும் என்றும் நினைக்கத்தோன்றுகிறது

சந்திரகுமார்

நஞ்சமுது



மஹாபாரதத்தில் பல இடங்களில் உன்னதமான அன்பு திரிந்து நிலைமாறுவதை விரிவாக எழுதியிருப்பீர்கள்.  மாமலரிலும் அப்படி ஓரு பகுதி வருகிறது.  அவற்றைப் படிக்கும்போது எப்படி இது சாத்தியம் என்று வியந்திருக்கிறேன்.  எண்ண ஓட்டத்தில் அவற்றை ஒப்புக்கொள்ளாமல் கடந்து சென்றிருக்கிறேன்.  ஆனால் சமீபமாக நிஜ வாழ்க்கையில் அப்படி ஒரு உணர்வை அளித்த கணத்தைச் சந்தித்தேன். பின்னர் மிகைநாடி மிக்கக் கொண்டு மேற்சென்றாலும், அதிர்ந்து நின்ற அக்கணத்தில் உங்கள் வரிகள் மனதில் எழுந்தன.  அப்படி அமுதம் நஞ்சாகும் கணத்தை எப்படிக் கண்டடைந்தீர்கள்உங்கள் எழுத்துக்கே உரிய சிந்தனை வீச்சா அல்லது அனுபவமாஎப்படியேனும் அந்த கணத்தின் நிஜத்தில் நான் திகைத்துப்போனேன். இந்த உணர்வு மாறுபாட்டை விளக்கமுடியுமா?

நன்றியுடன், சந்திரசேகரன்.

சிதை



ஜெ

தாயக்கட்டை திரும்பிக்கொண்டே இருப்பது போல புரூரவஸின் குணாதிசயம் மாறிக்கொண்டே இருப்பதை வாசித்து தொடர்ச்சியாக மனக்கொந்தளிப்பை அடைந்துகொண்டே இருக்கிறேன். பிரிவின் துன்பத்தை  நானும் அறிந்திருக்கிறேன். அதுவும் ஒருவகைச் சாவுதான் என்றுதான் சொல்வேன். சிதைவரைக்க்கும் சென்று புரூரவஸ் மீண்டு வருவதை வாசித்தபோது என் கண்ணில் நீர் வழிந்துகொண்டே இருந்தது. நான் அடைந்த அனுபவங்கள் ஓரளவுக்கு அதற்குச் சமானமானவைதான். நான் வாழ்க்கையை வாழவேண்டும் என முடிவெடுத்து சிதையில் இருந்து எந்திருச்சு வந்தேன்

செண்பகமூர்த்தி

மாமலர் – அன்னையின் முகங்கள்



மாமலர் அன்னையின் ஆயிரம் முகங்களாக விரிந்து கொண்டிருக்கிறது. மெல்ல அது தன் வடிவைத் திரட்டி முன்வந்து கொண்டிருக்கிறது. இது வரையிலும் வந்த அன்னையர்களைக் கொண்டே இதை ஒரு வாசிப்பு செய்யலாம். தன்னை இழிவு செய்தவனையும் ஒரு அன்னையின் மகனாகக் காணும் திரௌபதி, தனக்கு அறம் வழுவா மைந்தன் வேண்டுமென்று அறம் அறியாத உலகாண்மையைப் பின்பற்றி புதனைப் பெற்ற தாரை, அதையே கொழுநன் சீராகக் கொண்டு புரூவரசைப் பெற்ற இளை, புரூவரசை ஏழு வண்ண வானவில்லாக விரித்து, பெற்று நிறைந்த ஊர்வசி, புரூவரசின் குருதித்தாயான அந்த வேட்டுவ அன்னை என அன்னையரை இதழ்களாகக் கொண்டு மலர்ந்து வருகிறது மாமலர்.

இந்த அத்தனை அன்னையர்களிலும் இருக்கும் ஒரு பொதுவான அம்சம் அவர்கள் கொள்ளும் விடுதலை. உதறிச் செல்லும் நிலை. ஆண்களால் அது இயல்வதில்லை, தந்தையரால் அது முடிவதில்லை. தாரை உதறுகிறாள், தன் கணவனின் உடலாலும், அவர் கொண்ட தத்துவத்தாலும் அமைந்த எல்லையை அறிந்து. ஊர்வசி உதறுகிறாள், தன் கணவனின் மானுடன் என்னும் உயிர்வடிவம் கொள்ளும் எல்லைகளை அறிந்து. தான் பெற்ற மகனின் மரணத்தையே அமைதியுடன் ஏற்கிறாள், புரூவரசின் குருதித்தாயான அந்த மூதரசி. இவர்கள் அனைவருமே தன்னறம் பேசுகின்றனர்.

இன்பத்திற்காகவும், அதைக் கொண்டு வரும் பொருளுக்காகவும் உதறிய தாரையின் உதிர வழியில் தான் இவ்விரண்டின் விளைவான அறம் வருகிறது, அதுவும் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கும் இருகருவில் இருந்து. ஆம், அறம் என்பது ஆணும், பெண்ணும், பொருளும், இன்பமும் கூடிப் பெற வேண்டிய ஒன்று அல்லவா. அந்த இன்பத்தையும், பொருளையும் உதாசீனப் படுத்தியதால் தான் அந்த அறமே மரணம் வரை சென்று மீள்கிறது. மூன்று தலைமுறை கதைகள். தத்துவமாகவும், மானுட மன வெளிப்பாடுகளகாவும் மாறி மாறி தோற்றம் காட்டும் கதைகள். பாரிஜாதாமோ, செண்பகமோ என மயங்க வைக்கும் மாமலர்கள் கொண்ட மணங்கள்!!!

Wednesday, February 22, 2017

மாமலர் – திரௌபதி



மாமலரின் முதல் பெரும் ஆச்சரியமே தன் அன்றாட வாழ்வில் மூழ்கி இருக்கும் திரௌபதி தான். திரௌபதியை ஓர் இல்லத்தரசியாகக் காண்பது குறித்து வந்த பதிவுகளில் சில அவள் இதில் தான் மகிழ்வுடன் இருக்கிறாள் என்னும் தொனியில் இருந்தன. உண்மையில் திரௌபதியின் இந்நிலை குறித்து சொல்வளர்காட்டின் இறுதியிலேயே வந்துவிட்டது. அவள் தன் அன்றாட அலுவல்களில் பிழையின்றி முழு மனதுடன் ஈடுபடுவதன் மூலம் தன்னை முற்றிலுமாக ஒளித்துக் கொண்டுவிடுகிறாள். பாண்டவர்களுக்கு அவள் அவ்வாறு இருப்பதன் பின் உள்ள வஞ்சம் தெரிந்திருந்தாலும், அவள் மகிழ்வுடன் இருப்பதாகவே எண்ணத் தலைப்படுகிறார்கள். முக்கியமாக பீமன் அவ்வாறே எண்ணுகிறான். அங்கே அவளுக்கு அணுக்கமானவனாக அவனே இருக்கிறான்.

அதையே அவன் புரூவரசுடன் காதலாடி, காமமாடி, அன்னையாக மலர்ந்து வாழ்ந்த ஊர்வசியின் உருவில் காண்கிறான். தன்னைப் பிரிந்து சென்ற ஊர்வசியின் நினைவால் அவளை முதலில் சந்தித்த சோலைக்கே மீண்டு வரும் புரூவரஸ் தன்னை பீமனாக உணரும் இடத்தில் பீமன் மீது பரிதாபமே வந்தது. மிகச் சரியாக ஊர்வசியைச் சந்தித்த தருணத்தில் அவன் அறிந்த அதே மணம், திரௌபதியை அறிந்த நேரத்தில் பீமன் உணர்ந்த அதே மணம். ஆம், இதே திரௌபதி தானே அத்தகைய பெரும்போரையும் நிகழ்த்த அச்சாக இருக்கப் போகிறாள். அங்கே தெரியப்போகும் திரௌபதி இவன் இப்போது அறிந்தவளுக்கு முற்றிலும் மாறான ஒருத்தி. ஆயினும் அவளும் இவளே. இரு நிலைகளும் பாரிஜாதமோ, செண்பகமோ எனக் கிறங்க வைக்கும் ஒரே மாமலரின் ஒரே மணம் போன்றவையே.... ஆம், அந்த மாமலர் திரௌபதியே. அவளின் வெளிப்பாடுகளே அந்த கலவையான, இருப்பினும் தனித்துவமான மணம்!!!

திரௌபதி என்று வருகையில் வெண்முரசு தனித்துவமான படிமங்களைத் தெரிவு செய்து விடுகிறது. பிரயாகை என ஐவரும் கலக்கும் கங்கா பிரவாகமாக பாஞ்சாலியை உருவகித்த வெண்முரசு இப்போது அவளை யாரும் அறியாத, தனித்துவமான மாமலராகவும் படைக்கிறது.

அருணாச்சலம் மகராஜன்

மாயை


 
 
இனிய சகோதரனுக்கு 

டெய்சி எழுதுவது      இன்றைய மாமலர் என் வாழ்க்கையை 25 வருடங்களுக்கு முன்பதாக திரும்பிப் பார்க்க வைத்தது. இளைய தாரத்தின் மகள்கள் நாங்கள்  மூவரும் மூத்த தாரத்தின் 2 அண்ணன்களும் அண்ணிகளும் எங்கள் அம்மாவும் அப்பாவுமான பெரிய குடும்பம். சின்ன அண்ணி வரும்வரையில் எந்த வேறுபாடும் இல்லாத மிக மகிழ்ச்சியான குடும்பமாய் பெரிய அண்ணனின் ஆதரவில் இருந்தோம். அப்பா தாத்தாவைப் போல் முதிர்ந்தவர். ஆகவே அண்ணனே அப்பாவாய்  இருந்த நாட்கள். சின்ன அண்ணியை மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து கொண்டு வந்தார்கள். 
            
            இப்பொழுது நினைத்தால் அவர்களின் அழகும் சுறுசுறுப்பும் நேர்த்தியும் ஒரு அணங்கைப் போல்தான் இருந்திருக்கிறது. மிக நிறைவான நாட்கள். யாரோடும் கலகலப்பாய் பேசி சிரித்து இருக்கும் இடத்தை ஒளியால் நிரப்பி துறுதுறுவென்று எங்கள் வீட்டையே நிறைத்தார்கள். நான் பெரியவளாய் ஆகும் நேரத்தில் எனக்கு ஒரு தோழியாய் இருந்து தாங்கினார்கள் . அந்த கலகலப்பே அவங்களுக்கு எதிரியாய் மாறியது. பெரிய அண்ணன் சந்தேகப்பட்டு ஒரு முறை அவமானப்படுத்த தாங்க முடியாமல் சுயமாய் இறந்து போனார்கள். 

அதன் பின் எங்கள் வாழ்க்கை  "முற்றக் கனிந்த அமுது எப்படியோ இறுகி நஞ்சென்றாகிறது. சியாமை சென்றபின் அவனில் வாழ்ந்த தெய்வங்கள் அனைத்தும் ஒழியலாயின. ஆலயத்தின் கருங்கற்களின் பூட்டுகள் நடுவே நுழைந்து பருத்து புடைத்தன நச்சுவேர் நரம்புகள். நிலையிளகிச் சரிந்தவற்றின்மேல் படர்ந்து பரவியது வழுக்கும் பசும்பாசி. நாகமென விழிஒளி கொண்டு சொடுக்கிக் கொத்தின நினைவுத்துளிகள். நொடியென்றாகி நீண்டது அவன் காலம். சிறு ஓசைக்கும் சிலிர்த்தெழும் தேள்கொடுக்கென எழுந்தன சென்றவை. அனல்பட்டுப் பழுத்த கலமென காத்திருந்தன அவள் விட்டுச்சென்ற பொருட்களனைத்தும்."  இப்படியானது.

பெரிய அண்ணனின் குற்ற மனசாட்சி எங்கள் ஒவ்வாருவரையும் குதறுவதில் இன்பம் கண்டது. "நோயுற்ற ஒருவர் பிறருடைய உவகைகளை தடுப்பவர். உவகைவிரும்பும் உலகத்தாரால் அவர் வெறுக்கப்படுகிறார். வெறுப்பை குற்றவுணர்வாலும் கடமையுணர்வாலும் அறவுணர்வாலும் கடந்து செல்கின்றனர் மானுடர். ஆனால் நாள் செல்லச்செல்ல அவ்வுறைகள் அகல்கின்றன. கடந்துசெல்லும் விழைவு மட்டுமே எஞ்சியிருக்கிறது. அவர்களைவிட்டு நெடுந்தொலைவுக்கு அகன்றுசென்றுவிட்ட பிறரின் முதுகில் ஒரு புலன் அவர்களின் இறப்புச்செய்திக்காக காத்திருக்கிறது"  இதைப்போலவே நாங்களும் நினைத்தோம். சின்ன அண்ணன் அழுது புலம்பி குடித்து வெறித்து பின் மீண்டு மறுபடியும் திருமணம் முடித்து 2 பிள்ளைகளை பெற்றது. 

பெரிய அண்ணன் இளைத்து பழுத்து இருதயத்தின் நோய் முற்றி இறந்து போனது. அண்ணன் இறக்கும் வரையில் நாங்கள் அனுபவித்த வாதைகள் சொல்ல முடியாது. இனி இன்று முழுவதும் இதே நினைவோடுதான்.
 
டி

Tuesday, February 21, 2017

இன்பம்



ஜெ

மனிதர்களுக்கு இருக்கும் ஏழு பேரின்பங்களைப்பற்றி விஸ்வ வசுவும் தேவர்களும் இந்திரனிடம் சொல்லும் இடம் கவித்துவமானது. மனிதர்களிடம் இருக்கும் அறியாமையும் நிலையின்மையும் கனவும்தான் அவர்களின் இன்பம். அதன் உச்சம் அவர்களுக்கு அறியவும் தவம்செய்யவும் வாய்ப்புள்ளது என்பது\

சின்னவயசில் ஒரு பென்சிலுக்காக ஏங்கியிருக்கிறேன். இன்றைக்கு நினைத்ததை வாங்கும் பணம் உண்டு. ஆனால் வேண்டிய பொருளுக்காக கனவு கண்டு ஏங்கி அதற்காக காத்திருக்கும் இன்பமே இல்லாமலாகிவிட்டது. இதைவைத்துதான் அதைப்புரிந்துகொண்டேன்

சண்முகம்\

இருமுனை




ஜெ

உச்சகட்ட இன்பத்திலிருந்து உச்சகட்ட துயரம் நோக்கி புரூரவஸ் செல்லும் இடம் பீதியை அளிக்கிறது. உனக்கு இன்பம் வரும், ஆனால் அது துன்பத்தை அடைவதற்காகவே என்று சாபம் இல்லையா? அப்படியென்றால் மனிதர்களுக்கு உயர்ந்த இன்பங்கள் உள்ளன என்று தேவர்கள் இந்திரனிடம் சொல்வதற்கு என்ன அர்த்தம்|? அதெல்லாமே துன்பமாக ஆகிவிடும் என்றுதானே?

சாத்தப்பன் சண்முகம்

இரு ஆடுகள்




அன்புடன் ஆசிரியருக்கு

இன்றைய மாமலர் அத்தியாத்தில் ஸ்ருதனுக்கும் ஸ்மிருதனுக்கும் கொடுத்திருந்த விளக்கம் சட்டென நினைவுக்கு வருகிறது.

தேவருலகில் அவள் அறிந்தவை அனைத்தும் ஸ்ருதன் எனும் வெண்ணிற ஆடாயின. அவள் அவற்றுள் ஊடுபுகுந்து தான் எண்ணியவை ஸ்மிருதன் என்னும் கரிய ஆடாயின. 

நிலையான உண்மைகளில் இருந்து நம் தேவைக்கும் அறிவுக்கும் ஏற்றவாறு உருவாக்கும் நமக்கான உண்மைகளா ஸ்மிருதிகள் அல்லது சட்டங்கள்?

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

கரை உடைத்தோடும் வெள்ளம் ( மாமல ர் 14)





  
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் நதி  ஒருநாள் வெள்ளம் பெருகி  கரை  உடைத்து பெரு மரங்களை சாய்த்து வீடுகளை மூழ்கடித்து சேதங்களை விளைவிகின்றதுசமூக  அறம் தன்னறம் ஆகியவற்றை இரு கரைகளாகக் கொண்டு அதனிடையில்  மனிதன் ஒருவனின் வாழ்வெனும் நதி ஓடிக்கொண்டிருக்கிறது

 ஏதோ ஒரு உணர்ச்சிவெள்ளம் அவனுள் பெருக்கெடுக்கும்போது இந்தக் கரைகளை உடைத்து அவனுக்கும் அவனைச்சுற்றி இருப்பவர்களுக்கும் சேதத்தை விளவிக்கும்படி நடந்துகொள்கிறான். கோப உணர்வு மிகுதியால் சமூக நெறிகளை மீறி மற்றவர்களுக்கு தீங்கு இழைக்கிறான். சமூகத்தின் பார்வைக்கு அது வரும்போது அதற்கான தண்டனையை பெறுவோம் என்பது அறியதது அல்ல. ஆனாலும் அவன் கோபம்அவன் அடங்கிச் செல்லும் நெறிகள் என்ற கரைகளை உடைத்து வெளியே பாய்ந்து அவனுக்கும்  மற்றவருக்கும் சேதத்தை உருவாக்கிவிடுகிறது.
  

ஆனால் இன்னொரு வகையில் வெள்ளம் கரையை உடைக்கிறது. இந்த வெள்ளம் காட்டாற்று வெள்ளம் போல் சட்டென்று வருவதல்ல. படிப்படியாக நீர்வரத்து அதிகமாகிகொண்டே சென்று நீர் கரைகளில் ததும்பி கரைகளை  உடைத்து  வெள்ளப் பெருக்கை உருவாக்கும்நீர்மட்டம் படிபடியாக ஏறுவதை  கவனிப்பதற்கே சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்அதைப்போல் சில உணர்வுகள் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்று நம் மனதை மூழ்கடித்து பெரும் விளைவுகளை ஏற்படுத்திடிவிடும். வஞ்சம், காமம், சோம்பல் முதலிய உணர்வுகள் அத்தகையவை


    
நதி எவ்வளவு அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாலும் அது எப்போதும்  கரைகள் மீது அழுத்தத்தைச் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறதுநாம் அமைதியாக இருப்பதுபோல் இருந்தாலும் நம் உணர்வுகள் நாம் போட்டு வைத்திருக்கும் நெறிகள் என்ற கரைகளின் மேல் ஒரு அழுத்தத்தைச் செலுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் தன்னுணர்வோடு எச்சரிக்கையாக நெறிகளை வலுபடுத்திக்கொண்டு இருக்கவேண்டியது அவசியமாகிறது. அதன் காரணமாகவே நாம் பல நியமங்களை தினசரி வாழ்வில் கடைபிடித்துவருகிறோம். மனதின் உணர்வுகளைத் தூண்டும் செயல்களில் ஈடுபடாமல், ஐம்புலன்களின்வழி அவ்வுணர்வைத் தூண்டுபவை நம்மை நாடாமல் பார்த்துக்கொள்கிறோம். உணர்வைத் தூண்டும் முதல் எண்ணம் உள்ளத்தில் தோன்றும்போதே அதை தடுக்க வேண்டும். அப்படி தடுக்கப்படாத எண்ணம் வளர்ந்துகொண்டே சென்று ஒரு கட்டத்தில் நம் சிந்தை  அந்த எண்ணத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுகிறதுஅப்போது உணர்வுகள் கட்டுபடுத்த முடியாத நிலையை அடைந்துவிடுகின்றன. சரியெது தவறு எது என நம்மை சிந்திக்க விடாமல் பின்விளைவுகளைப்பற்றி  எண்ண விடாமல் நம்மை பாதகமான செயல்களில் உட்படுத்திவிடுகின்றன


  
மெல்ல மெல்ல பனிப்போர்வைபோல நம் சிந்தைமேல் கவிழ்ந்து வெள்ளமென மனதில் பெருகி ஒரு கட்டத்தில் நெறிகளை உடைத்து ஓடும் ஒரு உணர்வு காமம் ஆகும்காம உணர்வு     தாரை, சந்திரன் இடையில் அது நெறி மீறிய உறவாக ஆவதை வெண்முரசு நுண்மையாக காட்டுகிறதுகணவர்  வியாழரின்  விலக்கம் தாரையின் உள்ளத்தில் ஒரு சலிப்பை உருவாக்குகிறது. யார் ஒருவரும் மற்றவரால் போற்றப்படவேண்டும் என விரும்புகின்றனர். அதுவும் அழகு அறிவு அல்லது ஏதாவது கலையில் திறன் அதிகம் கொண்டவர்கள் அந்தத் திறன் மற்றவர்கள் அறிய வேண்டும், போற்றப்படவேண்டும் நினக்கிறர்கள். அதன் காரணமாக தன் அழகை , அறிவை, திறனை ஒவ்வொருநாளும் கூட்டிக்கொள்ள முயல்கிறார்கள். ஒரு கட்டத்தில் அதுவே தன் வாழ்வின் பயன் என உணர்கிறார்கள். ஆனால் இது கவனிக்கப்படாமல் போகும் போது அவர்களுக்கு ஒரு சலிப்பை உருவாக்குகிறது. தன் அருகிலிருப்பவரிடம் கிடைக்காத அங்கீகாரத்தை மற்றவரிடம் தேடுகிறார்கள்.


   
தாரையில் அழகு  வியாழரால் கவனிக்கப்படாமல் போகையில் அதற்கான இயல்பான சலிப்பு அவளுக்கு உருவாகிறதுஅழகும் காமமும் பிணைக்கப்பட்டது. காமத்தை சுமந்துவரும் கருவியென அழகு ஆகிறது. காமம் ஒருவரின் அழகைக்கூட்டுகிறது. அழகின்காரணமாக ஒருவர்மேல் காமம் கூடுகிறது. ஆகவே அவள் அழகு கவனிக்கப்படாமை, அவளின் காமத்தை சீண்டுகிறது.   அவள் கண்கள் அதை அவரைத்தாண்டி வெளியில் தேடுகிறது. சந்திரன் அவள் உள்ளத்தில் சிறு விதையென விழுகிறான். முதலில் ஒரு குறுகுறுப்பாக எழுந்து அவள் மனதில் வளர ஆரம்பிக்கிறான். எதேச்சையாக அவனை நினைப்பதாக அவள் நினத்துக்கொண்டிருப்பவள் ஒரு கட்டத்தில் அவனை மட்டுமே நினைத்துகொண்டிருப்பதை அறிந்து துணுக்குறுகிறாள்அவன் நினைவை விலக்க முயன்று தோற்றுப்போகும் நிலையில் அவள் காமம் கரைதாண்டும் அளவு பெரிதாகி விட்டதை அவள் அறிகிறாள்.

அவன்மேல் அவள் காமம் கொண்டிருப்பதை அறியாது அவன் முகம் தன்னுள் எழுவதைக்கொண்டு அவள் அறிகையில் அக்காமம் முற்றிலும் வளர்ந்துவிட்டிருந்தது. அவன் உடலை அவள் ஓரவிழியால் பலமுறை நோக்கியதுண்டு. நோக்கியகணமே எழும் உளஅதிர்வால் படபடப்புகொண்டு விழிவிலக்கி பிறிதொன்றில் மூழ்குவாள். முகம் சிவந்து மூச்சு சீறிக்கொண்டிருக்கும். பின்னர் கண்கள் கசிய மீள்கையில் தன் தனிமையை எண்ணி ஏங்குவாள்.
 

 இப்போது அவள் தன்னை தன்னிடம்  மறைத்துகொள்ளவதை நிறுத்திக்கொண்டு, கணவன் முதலிய பிறரிடம் தன் காமத்தை மறைத்துக்கொள்ள முயல்கிறாள். அதன் காரணமாக அவள் சந்திரனை வெறுப்பதாக தன்னைக்  காட்டிக்கொள்கிறாள். சந்திரனைச்  சீண்டி அவன் கவனத்தை ஈர்க்க எனக்கூட இது இருக்கலாம்.    ஒருவரிடம்   நேசத்தை காட்டுபவர், வெறுப்பைக் காட்டுபவர் இருவரும் மனதளைவில் அந்த ஒருவரிடம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மனதை ஆட்கொண்டு இருக்கிறார்கள். சதா அந்த ஒருவரை எப்போது நினைவில் கொண்டிருக்கிறார்கள்.

   
அவன்மீது கொண்ட காமத்தாலேயே அவள் தன்னை அவனிடமிருந்து முற்றிலுமாக மறைத்துக்கொண்டாள். அவனிடம் கடுமுகம் மட்டுமே காட்டினாள். ஏதென்றில்லாமல் அவனிடம் முனிந்தாள். அவனைப்பற்றி கணவனிடம் பொய்க்குற்றம் சொன்னாள்.

 
தன் மனைவியின் மன மாறுதலை உண்மையில் வியாழர் தன்  ஆழ்மனதில் அறிந்திருக்கிறார். அதை அவருடைய  மேல் மனம் நம்ப மறுக்கிறது. அவள் ஒன்றும் தன்னை ஏமாற்றவில்லை, தான் அவளை முழுதுமாக நம்புகிறேன், என தனக்குத் தானே சொல்லிக்கொள்ள விரும்புகிறார். அதை செயலாக நடத்திக்கொள்கிறார்.
 
தன் மாணவர்களில் இளையோனும் அழகனுமாகிய அவன்மேல் மனைவி சொன்ன பழுதுகள் அவருள் நுண்ணிய உவகையை நிறைத்தன. அவர் அவனுக்காக அவளிடம் நல்லுரை சொன்னார். அவனை வேண்டுமென்றே அழைத்துவந்து தன்னுடன் உணவுக்கு அமரச்செய்தார். அவர்கள் இருவரையும் இணைத்து நகையாட்டுரைத்து சிரித்து மகிழ்ந்தார்.


   
ஒருவனுக்கு, தன்னை ஈன்றவள், தன் நாட்டு அரசி, தன் அண்ணன் மனைவி, குருவின் மனைவி, மற்றும் தெய்வம் என ஐந்து தாய்கள் உண்டு என்று சொல்வார்கள். சந்திரன் தன்  குருவின் மனைவியான தாரையை தாயாக காண வேண்டும். அவன் தாரையை பார்க்க நேரிட்டால் அவன் பார்வையில்  அன்னையைக் காணும் சிறு குழந்தையின் களங்கமின்மை இருக்க வேண்டும். ஆனால் சந்திரன் தன் நெறியை மீறி அவளை  வேறு பார்வையில் காண்கிறான். இதன் காரணமாக இருவர் உடல்களும் ஒன்றின் விழைவை ஒன்று  அறிந்துகொள்கிறதுஉடல்கள் அவர்களின் உள்ளத்தை தன் பக்கம் திருப்புகின்றனஇப்போது  அவர்கள் இந்த உலகத்தை இந்த உலகத்தில் தங்களைக் கட்டுப்படுத்தும் நெறிகளை விட்டு வேறு உலகத்தில் சென்றுவிடுகிறார்கள். அங்கே அவர்கள் இருவர் மட்டுமே இருக்கிறார்கள்.   வேறு நபர்களோ  நெறிகளோ அற்ற காமப் பெருவெளியில் தனித்து விடப்படுகிறார்கள்வெள்ளம் கரை ததும்பி கரை முட்டி இருக்கிறது. ஒரு சிறு அசைவில் உடைந்து விடும் நிலைஒரு மலர், ஒரு சொல் ஒரு அசைவு, ஒரு பாவனை, ஒரு பார்வை, ஒரு பெருமூச்சு அவ்வளவுதான்  கரை உடைந்து வெள்ளம் பாய்ந்தோடுகிறதுஅந்த வெள்ளப்பெருக்கில், அவர்கள்  கொண்டிருக்க வேண்டிய சமூக அறங்கள், பின்பற்றவேண்டிய நெறிகள், தன்னைச்சார்ந்தவர்களைப்பற்றிய நேசம் அனைத்தும்  மூழ்கடித்து உடைத்தெறியப்படுகின்றன.   உணர்வு வெள்ளம் கரை உடைத்தோடும் அந்த நிகழ்வு வெண்முரசில் சொல்லப்படும்போது இது  இப்படியல்லாமல்வேறு  எப்படி நடந்திருக்க முடியும் என நமக்கு தோன்றுகிறது.
  
   
நறுமணமலர்மரத்தடிக்குச் சென்றபோது இயல்பாகவே அவள் நினைவெழுந்தது.
 
அவனை எதிர்கொண்ட அவள் விழிகள் திடுக்கிட்டவைபோல மாறுவதைக் கண்டான்.
சற்றே பருத்த அவள் உதடுகள் மெல்ல விரிசலிட மேலுதடு வளைந்து வேட்கை காட்டியது. நீர்மை படர்ந்த விழிகளைத் திருப்பி முலையிணை விம்மஅவர் இல்லைஎன்றாள். அச்சொல்லிலேயே அனைத்தையும் அவள் சொல்லிவிட்டதை நெடுங்காலம் கழித்து அதை எண்ணத்தில் மீட்டியபோது உணர்ந்தான். ஆனால் அவனுள் வாழ்ந்த காமம் அதன் முழுப்பொருளையும் உணர்ந்துகொண்டிருந்தது அப்போதே. “அறிவேன்என்றபின் மலர்களை கொண்டுசென்று வைத்துவிட்டு வந்தான்

அவள் அவன் வழியில் மூச்சிரைக்க விழிதாழ்த்தி நின்றிருந்தாள். மேலுதட்டில் வியர்வை பூத்திருந்தது. அனல்கொண்ட கலம் என அவள் உடல் சிவந்திருந்தது. இருவரும் அசைவிழந்து நின்றனர்.
 
அவள் இமைகள் தாழ்ந்திருந்தமையால் நோக்கை அறியமுடியவில்லை. ஆனால் உடலே விழியென நோக்கு கொண்டிருந்தது. அவள் விழிகள் சரிந்து தன் வலமுலையை நோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து அவன் உடல் சிலிர்த்த கணம் அவள் நீள்மூச்சு ஒன்றை விடுத்தாள். அவன் அக்கணமே அவளை தாவித்தழுவிக்கொண்டான்.


கரைமீறிய காமத்தின் குற்ற உணர்விலிருந்து தப்பித்துக்கொள்ளதங்கள் முறை மீறிய காமத்தை நியாயப்படுத்திக்கொள்ள,   காரணத்தை,   தத்துவத்தை அவர்கள் கண்டெடுத்துக்கொள்கிறார்கள்.

   “
நால்வகை மெய்ப்பொருள்களில் அறம் காலம்பொறுத்தது. பொருள் இடம்பொறுத்தது. வீடு அறியவொண்ணாதது. கண்முன் என இருப்பது இன்பம் ஒன்றே. இன்பமளிப்பதே அறம். அதற்கு உதவுவதே பொருள். அதன் விளைவே வீடு

    
சமூக நெறி மீறிய உறவுஎப்படி ஆரம்பிக்கிறதுஎப்படி வளர்கிறது அதற்கான காணிகள் என்னஅது எப்படி இறுதியில் நிகழ்ந்துவிடுகிறது என்பதை மிக நுண்மையாக வெண்முரசு சித்தரித்துச் செல்லும்விதம் மிகவும்  அருமையாக அமைந்திருக்கிறது.