Sunday, April 3, 2016

12 ராசிகள்



ஜெ,

பன்னிரு ராசிக்களம் முதலிலேயே வந்துவிட்டது. 

 கருநிற வருணன் மணியொளிவிடும் வானம். இது முட்டத்தலையெடுக்கும்  ஆடு என நீ. [மேஷம்]

உன் புன்னகை என சூரியன் எரியும் வானம். இதில் நீ திமிலெழுந்த காளை.  [ரிஷபம்]

குருதிமழை என சகஸ்ராம்சு எரியும் வானம்.  அன்னை, அது நீ உன்னை புணரும் இணை. [மிதுனம்]

பொன்னிற தாதா. விழிபடைக்கும் வானம். நாற்றிசையும் கால் நீண்டு திசையழிந்த பெருநண்டு நீ.  [கடகம்]

தேவி, கலங்கி எழுந்து தபனன் மிளிரும் வானம்.  முகிலனலென சிம்மம் உறுமும் வெளி. [சிம்மம்]

இன்மையெனத் தெளிந்து சவிதா புன்னகைக்கும் வானம்.  அது உன் கன்னியெழில் [.கன்னி]


இருண்டவளே. செம்பழுப்பு நிற கபஸ்தியின் கதிர்விரிக்கும் வானம். அது நீ நடுமுள்ளென நின்றாடும் துலா. [துலாம்]

ஒளிக்கதிர் சவுக்குகள் ஏந்திய ரவி அதிரும் வானம். தேவி, நீ நின்ற வானமோ ஒளிர்மஞ்சள். நீ சொடுக்கி வாலெழுந்த சீறும் கருந்தேள். [விருச்சிகம்]

பச்சைநிறப் பேரொளி கொண்டவன் யார்? பர்ஜன்யன் என்கின்றனர் அவனை. நீயோ அவன் முன் விரிந்த வில். [தனு]

பாலொளி பெருகிய திருஷ்டா உன் முடிமணி. நீ ஆழமறிந்த அன்னைப்பெருமீன். [மகரம்]

புகைமூடிப்பொலியும் மித்ரனின் வானில் நீ ஓர் அமுதகலம். [கும்பம்]

நீலப்பெருக்கென எழுந்த விஷ்ணுவின் ஒளிவிரிவில்  நீ ஒரு மூடா விழி. 

அன்னையே, பன்னிரு களங்களில் நிறைந்தவளே. அமுதமாகி எழுக! [மீனம்]

இதில் நடக்கும் கதைகளை ஒன்றுடன் ஒன்று ராசிப்பொருத்தம் வழியாக இணைத்து வாசிக்கவேண்டும்- சரியா?

சத்யநாராயணன்