Friday, April 1, 2016

பிளவுறுவதன் கதை



அன்புள்ள ஜெமோ

முற்றிலும் வேறுபட்ட வகையில் சென்றுகொண்டிருக்கிறது பன்னிருபடைக்களம். இந்த அமைப்பே இறுக்கமானதாக உள்ளது. உளவியல் சிக்கல்களிலிருந்து உளவியல்சிக்கல்களை நோக்கிச் செல்கிறது

ரம்பகுரம்பனின் கதையை உண்மையில் அப்படியே எவருடைய வாழ்க்கையுடனும் ஒப்பிடலாம்

முதலில் ஒன்றாகப்பிறக்கிறார்கள். ஒன்றாகவே உணர்கிறார்கள். உண்மையில் இரண்டு. அது தெரியாமலிருக்கிறார்கள். ஒருவன் உள்நோக்கியவன் ஒருவன் வெளிநோக்கியவன்

பெண்கள் வழியாகவே தன்னை இரண்டென அறிகிறார்கள். அதுதான் அடல்ட் பருவம்

இரண்டாகப்பிளந்தபின் இரண்டாக இருப்பதன் பெரும் துன்பம்

அதன்பின் ஒன்றாக நினைக்கிறார்கள். ஒன்றாக ஆகமுடியவில்லை. அது மேலும் துன்பம்

ஏதேனும் ஒன்றைப்பற்றிக்கொள்ளவிரும்புகிறார்கள். அதுவே பிள்ளைப்பேறு

ஸ்கிஸோபிர்னிக் என்பது சாதாரணமான அனைவருடைய மனநிலையும்தான். இரண்டுக்க்கு நடுவே பிளவுண்டு துன்புறுவது தான் அது. அது உச்சநிலையில் அவர்களை ஆட்டுவிக்கிறது

ராஜாராமன்