Tuesday, April 5, 2016

அடக்கப்பட்ட ரக்தபீஜன்



ஜெ

பன்னிருபடைக்களம் மிகமிகச் செறிவான நாவல். அத்தியாயங்களை பலமுறை படிக்கவேண்டியிருக்கிறது. ஓர் அத்தியாயத்தின் உள்ளடக்கத்தை பல அடுக்குகளாக வாசிக்கவேண்டியிருக்கிறது.

பலசமயம் சின்னச்சின்னக் குறிப்புகளை கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. அனைத்துத் தீமைகளையும் கொண்ட வேதஞானி தீர்க்கதமஸ். முடிவிலா இருள். அவர் மகன் கௌதமன். அவரது மகன் காக்‌ஷீவான். அவர் நன்மையை மட்டுமே நாடினார். அவருக்கு சொர்க்கம் கிடைக்கவில்லை. அவரது மனதுல் தேங்கிய தீமையை அவரது மகன் அதர்வ வேதம் மூலம் தீர்க்கவேண்டியிருக்கிறது. சண்டகௌசிகனில் எழுந்து வருவது தீர்க்கதமஸ்தானே?

அமுதத்துடன் வரும் இறப்பு அன்னை அதைக்கொடுக்காமலிருப்பதும் மூன்று வேதங்கள் வருவதும் [அதர்வவேதம் தமோவேதம் ஆகையால் நீலநிறம். ரிக் சத்வம் ஆகையால் வெண்மை. ] அற்புதமான கவித்துவப்பகுதிகள்

இந்தப்பகுதிகளில் உள்ள அடக்கப்பட்ட காமகுரோதங்களையும் ரக்தபீஜனையும் இணைக்கையில் வருவது ஒரு பெரிய சித்திரம்

ஜெயராமன்