Monday, January 2, 2017

எத்தனை ஆச்சர்யங்கள்



அன்புள்ள ஜெ

வெண்முரசில் வந்த பல பகுதிகளை நினைத்துப்பார்க்க ஒரு சந்தர்ப்பம். வெண்முரசு இப்படி வராமலிருந்தால் மகாபாரதத்தை இப்படி வாசித்திருக்க மாட்டோம். வெண்முரசு மகாபாரதத்தில் ஒரு அடிக்கோடு போடுகிறது. நவீன வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்துகிறது

ஓடிப்பஸ் காம்ப்ளெக்ஸின் ஒரு பகுதியாக பிராய்ட் கருவறைக்குள் திரும்பவிழைவதைச் சொல்கிறார். பின்னால் அதை தனியான ஒரு மனச்சிக்கல் என்று விரிவாக்கிக்கொண்டார்கள். அது உள்வாங்குதல் . டிப்ரஷனுக்கு ஒரு வகை அது

அந்த மனச்சிக்கலை காலபீதி அப்படியே காட்டுவதைக் கண்டு பிரமித்துவிட்டேன். பிராய்ட் இந்தக்கதையை அறிந்திருந்தால் அந்த மனச்சிக்கலுக்கு காலபீதி காம்ப்ளெக்ஸ் என்றே பெயரிட்டிருப்பார்

முன்பு இரணியாக்ஷனின் தம்பி தன் அன்னையாகிய பார்வதிமேல் காமம் கொண்டதும் அதைவைத்து அப்பாவாகிய சிவனிடம் செஸ் விளையாடியதும் நினைவுக்கு வந்தது. ஓடிப்பஸ் காம்ப்ளெக்ஸுக்கு ஓடிப்பஸ் கதையை விட பொருத்தமானது அதுதான்

எத்தனை ஆச்சர்யங்கள்

சாரங்கன்