ஜெ
வெண்முரசு இந்தஅத்தியாயம் இரண்டு தனிச் சிறுகதைகள் கொண்டது. ஒன்று பீஷ்மரின் கர்வ பங்கம். ஞானம் கர்மத்தைவிடப்பெரியது,
ஊழ்கம் ஞானத்தைவிடப்பெரியது என்று காட்டும் இரு கதைகள் ஒரு சிறுகதை போன்றவை
சுலபைக்கும் ஜனகருக்குமான
கதையும் ஒரு தனிச்சிறுகதை. அவள் என்ன சொல்வாள் என்பது ஒரு பெரிய முடிச்சுதான். நான்
பத்துபேரிடம் இதைப்பற்றிக் கேட்டேன். பெரும்பாலும் அனைவருமே என்னுடன் யோகா, தியானா
வகுப்புகளுக்கு வருபவர்கள். அனைவரும் அந்தக்கேள்விக்குமுன்னால் திகைத்தார்கள். அந்தப்
பதிலை எவருமே சொல்லவில்லை. ஒரு நல்ல மேடைப்பேச்சில் அழகாக கொட் செய்து பேச ஆரம்பிக்கலாம்.
அப்படிப்பட்ட கதைகள் இவை
இவை புராணங்களில்
இல்லாதவை. நீங்களே எழுதியவை. அதுதான் ஆச்சரியம்
சாரங்கன்