ஜெ,
பீஷ்மரின் ஆணவம்
முதலில் அவருடைய பெரிய தடை. தன்னால் துறந்துசெல்லமுடியும் என்ற நம்பிக்கை. இதை என்
வாழ்க்கையிலேயே கண்டிருக்கிறேன்.நான் எப்பவேனுமானாலும் விட்டுட்டுப்போய் அக்கடான்னு
உக்காந்திருவேன் என்று சொல்லாதவர்களே கிடையாது. அப்படி உட்கார்ந்திருப்பது எளிதல்ல
என்பதைத்தான் கர்மத்தில் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.
உலக ஆசைக்காக முதலில்
செயலாற்றவேண்டும். அதுவும் இல்லாமல் பிறகு செயலாற்றவேண்டும். அதன்பின்னரே அடுத்தகட்டத்துக்கு
செல்லமுடியும். அதைத்தான் இந்த இரு கட்டங்களும் உணர்த்துகின்றன. துறவுக்குச் செல்பவர்கள்
முதலில் உலகியல்செயல்களை வெற்றிகரமாகச் செய்யவேண்டும். பிறகு நிஷ்காம கர்மம் செய்யவேண்டும்.
சேவை முதலியவை. அதன்பிறகே மனம் அமைந்து துறவு கொள்ளமுடியும்.
இது ராமகிருஷ்ண
மடம் போன்றவற்றில் இன்றுமுள்ள வழக்கம்
ராமநாதன்