Saturday, April 25, 2015

சிருங்காரன்






இத்தனை பெண்கள் இருக்கையில், அவர்களின் வெம்மையும் அழகும், முகிழ்ந்து வரும் ஒவ்வொரு வாசனையும் தாண்டி நின்றபடி, குழலில் தன்னை ஒடுக்கி இப்பிரபஞ்சம் முழுதும் அதே கணத்தில் பரவி நின்றபடி -  பேசி சிரித்தபடி - நெருப்பு மேல் விழும் நீர்த்துளி புகையாகி மாறுவது  என பால்கிகனின் உள் தொட்டபடி ...மீண்டும் இந்த நீலன்.  நீல கரிய மாயன். மாய சிருங்காரன்
  
கொட்டும் மழைக்கு பின் வரும் தூய நிசப்தம் கரியவனை பற்றி எழுதுகையில்மழையின் சொட்டுகள் மரங்களின் இலைகளில் துளித்து நின்று மெதுவாக சரிந்து கொள்வது போல அவனின் குழல் பற்றிய வரிகள்எழுத்துகள் கூட மிதக்க வைக்க முடியுமாபோதையின் உச்சம் ஒரு கணத்தில் தன்னிலை முற்றிலும் மறந்து உதறி தள்ளி விட்டு உடலை முழுதும் எடுத்து கொள்வது போல,அதற்கு ஒரு கணம் முன் தெரியும் காலங்கள் மறைந்த அல்லது உறைந்த கணங்கள் போல ...அசைவில்லாத தீபம் முன் பரவும் ஊதுபத்தி புகை போல.... அதிகாலை உறக்கம் களையும் முன் கடைசி முறை என ஆழம் சென்று கடவுள் விரல் தொட்டு வரும் ஒரு மலர்ந்த கனவின் சிரிப்பு என  ....மழைக்கு பின் தெரியும் புதிய பூமி என இன்றைய பகுதி நிறைந்து மலர்ந்து கிடந்தது 

தங்களின் தர்க்க தலை இல்லாமல் உருகும் பக்தி இருந்திருந்தால், இதை எழுதும் ஒரு ஒருகிய கணத்தில் " ஜெயா ..போதும். வா என்னுடன் " என கண்ணன் வந்து கூட்டிசென்றிருப்பான். மீண்டும் நீலத்தை தொட்டு சென்றதற்கு ஒரு நன்றியுடன் 

லிங்கராஜ்