Wednesday, April 15, 2015

துரியனின் பரிணாமம்



அன்புள்ள ஜெ,

வெண்முகில் நகரத்தில் திடீரென்று துரியோதனனின் பர்சனாலிட்டி வளர்ந்துகொண்டு போவதனைக் காணமுடிகிறது. அவனுடைய குணச்சித்திரம் ஏற்கனவே மகாபாரதத்திலே இருந்ததாகத்தான் இருக்கிறது என்றாலும் நாமெல்லாம் பொதுவாகக் கதைகளிலேயே  அறிந்த துரியோதனனுக்கு மிகவும் மாறுதலாக அது உள்ளது. துரியோதனனைக் கெட்டவனாகவே காட்டுவதுதான் நம் கதைகளில் வழக்கம். ஆனால் அவன் அன்பான கணவன் அன்பான தகப்பன் மிகச்சிறந்த ஆட்சியாளன் என்றுதான் மகாபாரதத்திலே வருகிறது

ஆனால் அதெல்லாமே அவன் கொல்லப்பட்டபிறகு காந்தாரியின் புலம்பல் சாந்திபர்வத்தில் உள்ள கதைகள் ஆகியவற்றிலேதான் வருகிறது. அவற்றை முன்னாடியே கொண்டுவரும்போது கதையின் போக்கே வேறுமாதிரியாக சிக்கலாகிவிடுகிறது. ஒருவன் இறந்தபிறகு ஒப்பரி போல ஒருவிஷயத்தைச் சொல்லும்போது சரியாகவே இருக்கிறது. ஆனால் அடுத்தகட்டத்திற்கு செல்வது என்பது அதையெல்லாம் முன்னாடியே சொல்லிவிட்டு அவன் எப்படி ஒரு சிறந்த மனிதனாகவும் வில்லனாகவும் இருந்தான் என்று சொல்வதிலேதான்

துரியோதனனை மீண்டும் நுட்பமாக வாசிக்கமுடிந்ததற்கு நன்றி ஜெ

சாரங்கன்