Friday, April 24, 2015

உதிரும் முத்துக்கள்



ஜெ,

அரசிகள் வரிசை வரிசையாக உள்ளே போகிறார்கள். அத்தனைபேரும் விதவையாகப்போகிறார்கள் என்று நினைக்கும்போது எத்தனை துக்கமான காட்சி. ஆனால் அதை முழுக்கமுழும்ம வாச்கானுக்கே விட்டு ஒரு க்ளூ கூட கொடுக்காமல் மங்கலமாகவே எழுதிக்கொண்டு செல்கிறீர்கள்.

ஆனால் அது தொடர்ந்து குறிப்பாகவும் வந்துகொண்டே இருக்கிறது. 
முதியசூதர் சொல்கிறாரே முத்துக்கள் வீணாகி விடுவதைப்பற்றி. அது இவர்களைப்பற்றித்தானே. அது மங்கலமாக பெருகிபெருகிப்பேசுவது போல இருந்தாலும் அதுதான் சாராம்சமான உண்மை. இந்த முத்தும்பொன்னும் காட்டிலே மழையாக பெய்து வீணாகிவிடத்தான் போகின்றன.

அரசிகள் நகர்நுழையும்போது நகரம் குடிவெறியில் கிடக்கிறது. அதுவும் சோர்வை அளித்தது. அந்த இளவரசிகளுக்காக வேண்டிக்கொள்ளத்தோன்றியது. ஆனால் ஒன்றும் செய்யமுடியாது. அதெல்லாம் விதி என்றுதானே நாமெல்லாம் நம்ப ஆரம்பிக்கிறோம்?

சண்முகம்