Saturday, April 25, 2015

புனைவும் உண்மையும்




Dear Jaya Mohan,

Namaskarams. 

I have started reading your mahabharatha epic "ven Murasu" published in your website. 
Thanks for making it available to everyone to read this wonderful historic epic. 
IT feels great to read the story of our bharathavarsha and the civilization that prevailed thousands of years ago. your style of depiction in tamil is fantastic. i would like a proper translation in english for my sons to read.
I just want to know the authenticity and source of your narration. It is fully from vyasa mahabharatha or you add any interpretastions of your own anywhere? 

This is just to clear my mind and appreciate your novel to the full. 
I agree with most of the views in your blogs .
I am a resident of Sydney for 30 years and i visit nagercoil every year to see my sister in November. 
Next time i visit, i would love to see and talk to you .

Your fan

Ramaswamy 
Sydney 




அன்புள்ள ராமசாமி,

வெண்முரசை நீங்கள் வாசிப்பதில் மகிழ்ச்சி

வெண்முரசின் இயல்புகள் அதை வாசிக்கவாசிக்கவே புலப்படக்கூடியவைதான்

ஒன்று அதிலுள்ள மையக் கதையோட்டமும் சரி கதாபாத்திரங்களின் ஆதார இயல்புகளும் சரி மகாபாரத மூலத்தை ஒட்டியே அமைந்துள்ளன. ஆனால் மகாபாரதமே பல வகையான பாடபேதங்கள் கொண்டது. வட்டார வடிவங்களும் உண்டு. மூலக்கதையை சுதந்திரம் எடுத்துக்கொண்டு விரிவாக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்துள்ளது. ஆகவே எந்தக்கதை கதையின் சாராம்சமான மானுட எழுச்சியை நெருங்குகிறதோ அதையே எடுத்துக்கொண்டிருக்கிறேன்

பிறதகவல்கள் பிர புராணங்கள் சாஸ்திர நூல்கள் கலைக்களஞ்சியங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை ஒரு சித்தரிப்பின் ஒழுக்கில் இணைக்க எப்போதும் சற்று மிகையாக்கவேண்டியிருக்கிறது. சற்று நீட்டிக்கொள்ளவேண்டியிருக்கிறது

ஜெ