Tuesday, April 21, 2015

அரசியர் நிரை



ஜெ

வரிசையாக இளவரசிகள் வந்துகொண்டே இருப்பதைப்பார்க்கையில் ஒரு பெரிய பேதலிப்பு ஏற்படுகிறது. ஏனென்றால் எல்லாருமே போரை நோக்கித்தான் செல்கிறார்கள். போருக்கான திட்டமாகவே இவர்களை திருமணம் செய்துகொள்கிறார்கள்

சம்படையின் கதையும் கூடவே இருக்கிறது. இவர்கள் வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் நிலைமை ஒன்றுதான். ஆனால் இளமையுடன் அவர்கள் நகரம் நுழைவதை நீங்கள் வர்ணிப்பது அழகாகவே உள்ளது

விட்டில்பூச்சிகள் போல வந்துகொண்டே இருக்கிறார்கள் அஸ்தினபுரியை நோக்கி என்று நினைத்தேன். வருத்தமாக இருந்தது. ஆனால் விட்டில்களுக்கு அன்றைக்கு ஒருநாள்தான் சுதந்திரம் என்று சொல்வார்கள்.

சாரங்கன்