வண்ணக்கடலின் தரிசனம் என்பது பன்மையை உணருதல் என்றே சொல்வேன். பாரதம் என்ற தேசத்தின் பன்மைத்தன்மையை, அப்பன்மைகளில் இருந்து தனக்கான தனித்துவத்தை, தத்துவத்தை ஒருவன் அடைந்து கொள்வதே அது சொல்லும் முதன்மைத் தரிசனம். கூடவே ஒருவனின் ஆளுமையைச் செதுக்குவது எந்த விசை என்ற விசாரமும் மற்றொரு இழையாகத் தொடர்ந்து வருகிறது. எத்தனை அறிந்தாலும், அறியவேண்டியது எங்கோ ஆழத்தில் தீண்டப்படாமல் இருந்துகொண்டிருக்கும் என்று முடிகிறது அந்நாவல்.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்