Tuesday, April 28, 2015

நீலன்






வெண்முரசின் இந்த அத்தியாயத்தில் என் மனதை மிகவும் கவர்ந்ததாக இருந்தது நீலன் என்ற கதாபாத்திரம்தான். அந்த ஒரு சம்பவத்திலே உள்ள மனோதத்துவ நுட்பங்களை கவனித்து வாசித்துக்கொண்டே இருந்தேன். அலங்காரத்திலே பூரணத்தை அடைய அந்த அரண்மனை பல ஏராளமான தலைமுறைக்காலமாக முயற்சிசெய்துகொண்டே இருக்கிறது. பூரணத்தை அது அடையாமலிருப்பதற்கு என்ன காரணன் என்று பார்த்தால் முக்கியமான காரணம் அது பூரணத்தை அடைந்துவிட்டல் மேற்கொண்டு செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதுதான்

ஆகவே அதிலே ஒரு பகுதியாக இருக்கும் ஒருவனே வேண்டுமென்றே அதை இல்லாமலாக்குகிறான். அவன் அந்த சிஸ்டத்தின் மிகவும் கிரியேட்டிவான ஆள். துடுக்குக்கார இளைஞன். அவன்தான் அலங்காரத்திலே பெரும்பகுதியைச் செய்திருப்பன். ஆனால் அவனே குறையும் வைக்கிறான். இந்தக்குறைவைக்கும் மனநிலையை பல படியாக ஆராயலாம். அதும் infinity யை நினைக்கக்கூடிய ஒரு மனம். அதுக்கு reality யிலே இருக்கக்கூடிய finite ஆன விஷயங்கள் அலுப்பூட்டுகின்றன. கடந்துபோகமுடியுமா என்று அது முயற்சி செய்துபார்க்கிறது.

ஆகவேதான் கிருஷ்ணன் அவனைத் தேர்ந்த்டுக்கிறான். அவனுக்கு தன் சவுக்கை கொடுத்து வண்டியோட்டியாக ஆக்குகிறான். இந்த ஆசாமியின்பெயரும் நீலன் . அந்தந் நுட்பத்தை மிகவும் ரசித்தேன்


மனோ