Saturday, April 25, 2015

படிமங்கள்



 ஜெ

இன்றைய வெண்முகில் நகரம் ஓர் உச்சம் [83]

கண்ணனின் இசையை பூரிசிரவஸ் கேட்கும் இடத்தின் மொத்த வர்ணனையே அந்தப்பித்தை வார்த்தைகளால் தொட்டிருக்கிறது

ஆனாலும்

தூண்கள், திரைச்சீலைகள், கொடித் தோரணங்கள், பட்டுப்பாவட்டாக்கள், பீடங்கள் அனைத்தும் அந்த அமைதியில் கடற்கரைப் பாறையில் பதிந்த சிப்பிகள் போல அமைந்திருந்தன.


வேங்கையின் உடலில் எரியும் தழல். வேங்கையுடலாக ஆன காடு.

என்ற உவமைகள் மனதிலே சுற்றிக்கொண்டே இருந்தன. சில உவமைகல் கச்சிதமாக ஒருகாட்சியை அளிக்கின்றன. சில உவமைகள் அதற்கப்பால் கற்பனைசெய்துவிரிக்கச் சொல்கின்றன. இவற்றை கவிதையில் poetic images என்கிறார்கள்

அருமையான கவிதை நிலை

வெங்கட்ராம்