Friday, June 19, 2015

மழைப்பாடல் தமிழ்ச்சொற்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

மழைப்பாடல் முடித்துவிட்டேன்.

கீழே உள்ள தமிழ்ச்சொற்களுக்கு விளக்கம் வேண்டும். நான் விளக்கம் எழுதியவற்றையும் சரி பரத்துவிடுங்கள்.
 ஹரன் பிரசன்னா

கிழக்கு



முனம்பு - நிலம் குவிந்து உருவாகும் முனை
அப்யங்கம் -ஆயுர்வேத சிகிழ்ச்சைமுறை. எண்ணை தேய்த்து நீராட்டுவது
அடுமடை - அடுக்களை
மடைவலர் - சமையல்நிபுணர்
மலைமடம்பு -மலையின் மடக்கு
சேக்கேறுதல் - சேக்கை ஏறுதல். பறவை கூடணைதல்
கலுழ்ந்து - அழுதல்
ஸாமியும் பிலுவும் - வட இந்திய பாலை நில மரங்கள்
ஓச்சி - ஓட்டி, வீசி
மகற்கோள் -   பெண்ணெடுத்தல்
அயலது மாணை - அருகே நிற்கும் மாணைக்கொடி [கருங்கல் அயலது மாணை- குறுந்தொகை ]
மாந்தி - அருந்தி
வெறியாட்டு - சன்னதம் வந்து ஆடுதல்
மாணைக்கொடி - பாறையில் படரும் கொடி
தசபதம் -பத்துவழிகள். ஓர் ஊரின் பெயர்
கருச்சரத்தை - கருமையான சரம்
நஸ்யம் -மூக்குப்பொடி
ஆகம் - உடல்
புன்மை -கீழ்மை
அரதி - ஆர்வமின்மை, உற்சாகமின்மை
விரதி - கசப்பு கோபம்
குறடு - மரத்தாலான காலணி
பாடிவீடு - மரத்தாலான தற்காலிக வீடு. கழற்றத்தக்கது
பரிகன் - ஒரு பெயர் 
சபத்னி -சக மனைவி
சீர்ம்பல் - சீரான பல்
உதகபலி - இறந்தவர்களுக்கு அளிக்கும் உணவு பலி
முதலினிமை -முதல் இனிமை. குழந்தைக்கு முதலில் நாவில் தொட்டு வைக்கும் இனிப்பு
சுஷுப்தி -கனவுக்கு அடுத்த நிலை. ஆழ்ந்த உறக்க நிலை. மனம் அற்ற நிலை
மலர்க் குடலைகள் - மலர் கொய்வதற்கான கைப்பிடிகொண்ட  கூடை
கைவிடுபடைகள் - தானாக இயங்கும் படைக்கருவிகள். சுருள் [ ஸ்பிரிங்] விசையால் இயங்குபவை
ஆறலைக் கள்வர்கள் -வழிகளில் அலையும் கள்வர்கள். ஒருவகை வழிப்பறிக் கொள்ளையர்


அமரம் - படகின் குவிந்த முன்முனை
சமித்து - வேள்வியில் அர்ப்பிக்கப்படும் விறகு
ஆதுரசாலை - மருத்துவமனை
அத்திரி - கோவேறு கழுதை
விடகாரி - நஞ்சை முறிக்கும் மருத்துவன்
ஜனபதம் - மக்கள்வாழும் நிலப்பகுதி.  சிறியசமூகக்கட்டமைப்பு.
ஓங்கில் - டால்பின்
மங்கலை - மங்கலமான பெண்
வெய்யநீர் - சுடு நீர்
ஊழ்கம் - தியானம்
மதலை - குழந்தை
பீத நாடு - சீனா
நாவாய் - மரக்கப்பல்
பகவாக்கொடி - துறவுக்கும் ஞானத்துக்குமான கொடி. காவிநிறக் கொடி.
வினைவலர் - வேலையாள்கள்
மூலத்தானநகரி - பாகிஸ்தானின் முல்தான்.
துமி - மிகசிறிய துளி
தேறல் - கள்
ஈச்சங்கள் - பேரீச்சம்பழத்தின் கள்
சுரிகுழல் - சுருண்ட மயிர்
சுரிகை - உடைவாள்
ஸ்ருதி, சுருதி - மூலநூல். தத்துவத்தைச் சொல்லக்கூடியது. வேதங்கள், உபநிடதங்கள்.
ஸ்மிருதி - ஒழுக்கச்சட்டங்களைச் சொல்லக்கூடியது. மாறக்கூடிய நூல்.
விராட வடிவம் - பிரம்மாண்ட வடிவம்
மந்தணம் - ரகசியம்
புளகம் - புல்லரிப்பு
அகிடு - பசுவின் மடி
கையடித்து சொன்னார் - இதை மாற்றுவது நல்லது. உறுதி     சொன்னார் என்று மாற்றலாம்.
பெண்செல்வம் - ஸ்ரீதனம்
களமெழுதியாடல்கள் -
ஆமாடப்பெட்டி - ஆமையோடு போட்ட பெட்டி
புணை - படகு
சூசிமர்த்த மருத்துவம் - அக்குபிரஷர்
புன்தலை - சிறிய அழகிய தலை
சென்னி - தலை
மாசுநீராட்டு - பிறந்த குழந்தைக்கு மண்ணையும் பொன்னையும் தேனையும் பாலையும் கலந்து அளிக்கும் முதல் உணவு விழா.
ஒக்கல் - சுற்றம்
தென்புலத்தோர் - மறைந்த மூதாதையர்
சேக்கை - படுக்கை
புவர்லோகம் - மூதாதையர் வாழும் விண்ணுலகம்
பெயர்மைந்தன் - பெயரன்
உடலிலிக் குரல் - அசரிரீ
பண்டி - வயிறு