Wednesday, June 17, 2015

மழையில் விளைவது

ஆசிரியருக்கு ,

மழை இங்கு வெவேறு வகையில் படிமமாக உருவெடுக்கிறது , இளமையாக , கனவாக , அனைத்தையும் இணைப்பதாக என. பாமை மனதில் காணும் துவாரகை எழும்பும் காட்சி தனிச் சிறப்பு வாய்ந்தது. மழை பெய்து நாம் பார்த்துக் கொண்டிருகையிலேயே ஒரு graphics காட்சி போல விளைகிறது, சொல்லப் போனால் வெடி வைத்து சீராக  தகர்கப்படும் வானுயர் கட்டிடங்களைப் போல  இது  எதிர் விவரிப்பு. 

ரத்தினத்தின் கரியின் அடிச்சுடர் என வர்ணனையும்  பருந்து வந்து அமரும் காட்சியும்  ஒரு சித்திரக் கதைக்கு ஒப்பானது. 

கிருஷ்ணன்.