Monday, April 2, 2018

சலிப்பு




ஜெ

கர்ணனின் ‘இன்னொரு’ வாழ்க்கையைப்படித்தபோது நான் அறிந்த இரண்டுபேரைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். இரண்டு பேருமே தமிழகத்தில் லெஜெண்ட் ஆக கருதப்படும் ஒருவரின் பைன்கள்.. இரண்டுபேரும் மிகப்பெரிய பணக்காரர்கள். பிறப்பிலேயே பெரிய செல்வம். என்ன கேட்டாலும் கிடைக்கும். ஆனால் வாழ்க்கையே பெரிய நரகமாக ஆகிவிட்டது. அவர்களுக்கு சவால் அறிவிலோ செல்வத்திலோ இருந்திருக்கலாம். ஆனால் சின்னவயசில் பணத்தைச் செலவழிப்பதிலே சந்தோஷத்தை கண்டுபிடித்தார்கள். ஆகவே படிப்பு ஏறவில்லை. ஆனால் செலவழிப்பதன் சந்தோஷம் கொஞ்சநாளிலேயே போய்விட்டது.

அதன்பிறகு எப்போதும் சலிப்புதான். Bore என்ற வார்த்தையை அவர்கள் தொடர்ச்சியாக எப்போதுமே பயன்படுத்துவார்கள். அம்மா அப்பா அரசியல் சினிமா எல்லாமே bore தான். கொஞ்சநாளிலேயே குடி உச்சம் ஆகிவிட்டது. நாற்பத்தைந்து வயதிலேயே நோயாளியாகி ஆகிவிட்டார்கள். அவர்கள் உக்காந்திருக்கும் அந்த வெறுமையை நினைக்காத நாள் இல்லை. தின்று தின்று பெருத்து இருவராலும் மூச்சுவிடமுடியாது. அவ்வளவு துன்பம். இவ்ளவு வெறுமையை பணம் அளிக்குமா என நான் நினைத்துக்கொண்டேன். ஒரு திரைக்கதையாககூட இதை எழுதி சிலகாலம் முயற்சிசெய்தேன். அதை நினைவூட்டியது இந்தக்கதை

செல்வா